எம்.ஏ.சுசீலா புது தில்லி
மார்ச் 8 ஆன மகளிர் தினம் 100வது வருடத்தில் காலடி வைத்திருப்பதால் பல பெண்களின் ஆக்கங்கள் நன்றியுடன் ஊடறுவில் பிரசுரமாகிறது. அனைத்துப் பெண்களுக்கும் எமது வாழ்த்துக்கள்… .”தாசிகள் மோச வலை’’ அல்லது ‘’மதி பெற்ற மைனர்’’ என்ற தலைப்பில் 1936ஆம் ஆண்டில் வெளிவந்த மூவலூர் ராமாமிருதத்தம்மையாரின் நாவல்,பரத்தமை என்ற நிறுவனத்தை |
விமரிசிக்கும் போக்கில் பெண்ணிய நோக்கில் கவனம் பெற வேண்டிய ஒரு முக்கியமான படைப்பு‘தமிழ் நாட்டு சமுதாய வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்த நாவல் ஒரு சிறந்த சான்றிலக்கிய’மாக மதிப்பிடப்படுகிறது‘தாசி’என்ற முத்திரையுடன் அந்த இனப்பின்னணியில் தான் அனுபவித்த துயரங்களைச் சமூகக் காரணங்களோடு பொருத்திக் காட்டும் ஆசிரியை, தேவதாசியராய் ஆக்கப்பட்ட பெண்களின் நம்பிக்கை,வாழ்க்கை முறை,பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை நடப்பியல் நோக்கில் முன் வைப்பதோடு அவர்களால் சமூகம் அடையும் கேடுகளையும் நடுநிலையோடு முன் வைக்கத் தவறவில்லை.
‘,விபச்சாரத்திற்குத் தெய்வத் தன்மையும்,சம்மதமும் கற்பிக்கும் நாடு இந்தியா ஒன்றைத் தவிர வேறெதுவுமில்லை’’
என்றும்,இம் முறைக்கு அடிப்படையான கடவுள்,மதம்இஸ்மிருதி,ஆகமம்,புராணம் முதலியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும் ‘’என்றும்,ஒரு குறிப்பிட்ட பெண் சமூகத்தை விபச்சாரத்திற்குத் தயார் செய்து வைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குச் சான்று’என்றும் சமுதாயத்தில் வேரோடி..நிலைப்பட்டுப்போன ‘தேவதாசிமுறை’க்கு எதிரான கடும் கண்டனத்தை இந்நாவல் வெளிப்படுத்துகிறது.தேவதாசிப் பெண்கள் மீது இப் படைப்பாளி கொண்டிருந்த அனுதாபத்தைக் குறைத்து மதிப்பிட முடியாதெனினும் கழிவிரக்க உணர்வை மட்டுமே சித்தரித்துக் கொண்டிருக்காமல் ஒட்டு மொத்த சமூக நலனில் அக்கறை கொண்டு,‘பொட்டறுப்புச் சங்கம்’ முதலிய ஆக்க பூர்வமான வழிகளைப் பரிந்துரைத்துத் தன்மான உணர்வும்,கல்வியும் பெற்றவர்களாய்..முறையான இல் வாழ்க்கை மறுக்கப்படாதவர்களாய்த் தன் இனம் சார்ந்த பெண்கள் வெளிப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தினை ராமாமிருதத்தம்மையாரின் எழுத்து பெரிதும் வெளிக் காட்டுகிறது.
‘இந் நாவல்.புழுங்கிய மனத்தில் தோன்றிய என் உணர்ச்சியின் பயனாக எழுந்தது’’என்று முன்னுரையில் குறிப்பிடும் நாவலாசிரியை,குறிப்பிட்ட அந்த அமைப்பிலிருந்து தாமே விடுபட்டு மீட்சி தேடிக் கொண்டவர் என்பதால்..சத்தியமான…தார்மீக அறச்சீற்றத்தோடு இப் பிரச்சினையை அவரால் அணுக முடிந்திருக்கிறது,அவற்றை எந்த மனத்தடையோ கட்டுப்பாடோ இன்றி அவர் பதிவு செய்திருப்பது ‘36 காலத் தமிழ்ச் சூழலில் ஒலித்த கலகப்பெண்ணியக் குரலாக அப் படைப்பை மதிப்பிட வைக்கிறது.
– நன்றி ஓவியம் Colorlanka