ஓரு கடன்

தேவா (ஜெர்மனி)

அவளுடைய தலைக்குள் வெகுகாலமாகவே முளைத்துவிட்டிருந்த ஆவல் அல்ல அது. ஒரு தீவிர லட்சியம் என்பதே சரி அவளை பொறுத்தவரை.அது எப்போதோ மனதுக்குள் வேர் ஊன்றியிருந்தது. அது கிளைபரப்பி அவள் மூச்சுக்கு மேலால் வெளியே வர துடித்தது. மகனிடமோ, மகளிடமோ தன்நோக்கத்தை வெளிப்படுத்தினாலோ, ஐயோ, உனக்கென்னம்மா இந்தவயதில் இந்தஆசை? சும்மா கிடக்கிறதை விட்டிட்டு.,, நம் சூழலில் மனிதர் 40 வயதை தொட்டு விட்டாலே போதும். இயலாமையையும், இல்லாத நோய்களையும் சுற்றியிருக்கும் உலகம் முதுகில் ஏற்றிவிடும்.

சும்மா இருக்க வேண்டும் என்பது மந்திரமாக ஓதப்படும்.,,உனக்கேதாவது இடைவழியில் நடந்தால.;…,, உடலையும், மனதையும் முடக்க வைப்பதில் எமது சமூகம் படுதீவிரம ;கொண்டது. இந்த பயமுறுத்தல்கள் எத்தனையோ வருடங்களாக-அவள் ஒய்வூதியம் பெற முன்னரேயே இருந்து எச்சரித்துக்கொண்டே இருக்கின்றன. அவளை இவைகள் ஒன்றும் சிறிதளவாவது தளரசெய்யவில்லை.மாறாக அவளின் சிந்தனைத் தீவிரம் என்றைக்காவது உன்னிடமிருந்து பிய்த்துகொண்டு வெளியில் வருவேன் என அவளை அலைக் கழித்துக்கொண்டே இருந்தது
,,.என்றைக்காவது ஒருநாள் மாத்தளைக்கு போகும் பசுவில் ஏறிவிடுவேன,,;அவள் தொண்டைக் குழிக்குள் அது உருண்டுகொண்டே இருந்தது. செத்துப் போக முன்னர் அவளுடைய ஆசை நிறைவேறாவிட்டால்,ஆவியாய் அந்தரத்தில் உழலவேண்டியதாகிவிடுமோ? சுhக முன்னர் இது செய்தாகவேண்டும். உயிரோடு இருக்கும் போதுதானே எதையும் செய்யலாம்! மரணபயம் அவளுக்கிருக்கவில்லை. நான் உயிரோடு இருப்பதற்கு ஒரு நன்றிக்கடன் செலுத்தவேண்டி யிருக்கிறது. இதுதான் அவளை ஆட்டிவைத்த விடயம். சமயங்களில் அவளை அது பாடாய்படுத்தியது.

ஒரு சின்னகடிதம் எழுதி யாவரும் பார்க்ககூடிய இடத்தில் செருகி வைத்தும். மாற்று உடுப்புகளை ஒரு சின்ன பேக்கிற்குள் அடைத்தும். மகன்,மருமகள் வீட்டில் இல்லாத சமயத்தில் பயண ஒழுங்குகளை செய்துகொண்டாயிற்று. பென்சன்காசு சேமிப்பில்  இருப்பதால் பணம் ஒரு பிரச்சினை இல்லை. யாரிடமும் சொல்லிக ;கொள்ளமுடியாது. போய்வருகிறேன் என. நான் எங்கு வெளியில்  புறப்பட்டாலும் பேத்தியோ, பேரனோ ,,நாங்;களும் வருவோம்,, என மல்லுக்கு நிற்பார்கள். கூட்டிக்கொண்டுபோக வைக்கிற நிர்ப்பந்தத்தை தவிர்க்க அதிகாலை நேரம் அவளுக்கு பலசிரமங்களையும் தீர்க்கும். யாராவது தெரிந்தவர்கள் வசு தரிப்பில் கண்டால் தான் விடயம் குழம்ப சாத்தியமுண்டு. வசுவில் ஏறிஉடகார்ந்து தூங்குகிற மாதிரி பாவனை செய்து கொள்ள வேண்டியது அடுத்தபடி.வசு நேரத்துக்கு புறப்படவேண்டுமே. சரியான நேரத்துக்கு புறப்பபட்டதாய் வசு வரலாற்றிலே கிடையாது. அது நேரத்துக்கு முந்தியே போய்விட்ட அதிசயமும் அவளுடைய ஆசிரியசேவைகாலத்தில்நிகழ்ந்தது உண்டு.;

விழிப்புநிலை நித்திரையை விரட்டின. கால்கள் மூளையைவிட தீவிரமாக இயங்கதொடங்கின. 5மணிக்கு வசு நிலையத்தில் நிற்க வேண்டும். இரண்டுவீடு தள்ளியிருக்கும் மகள் வீட்டுக்கு முன்னால் வந்து 4மணிக்கே தன்னை எடுக்கும்படியாக ஆட்டோவுக்கும் ஏற்பாடு செய்தாயிற்று. 30 நிமிட ஆட்டோபயணம். ஓசையற்ற நிமிடங்களை தேர்ந்தெடுப்பதற்கு மிகதெளிவான சிந்தனை,செயல்மிக முக்கியம். திட்டப்படி தயார்ஆகிய வெற்றி மகிழ்வோடு வீட்டுக்கு வெளியே வந்த பின்னர் கைமணிக்கூட்டை பார்த்தாள். நிமிடங்கள் தன்னை பழிவாங்குகின்றதாய் நினைத்தாள். இவ்வளவு காலமும் தானே காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்ட கோபம் ஒருகணம் முட்டிவந்தது. சின்னடிராவல்   பேக்கை கை இடுக்கில் அமத்திக்கொண்டு கதவை மெதுவாக திறந்து மூடியபின் அவள் யோசித்தாள்,,என் சொந்த வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு நானே கள்ளிவேசம் போடவேண்டிய நிலைமை,,
ஆட்டோவும் வசுவும் அதிகாலையை கோபத்தோடு புரட்டின. வசுவின் பயணமும் அவளது பழம் நினைவுகளை புரட்டிகொண்டே போனது. அவைகள்  கோர்வையாய் வராவிட்டாலும் ஒன்றுக்கு பின் இன்னொன்றாய்வந்தன. அவைகள்என்னைவிட்டு சென்றனவா?இல்லை.அங்கங்கே தங்கியிருந்தன.ம் ம் அவைகள்தானே என்னை இங்கு துரத்திக்கொண்டிருக்கின்றன. ,,நான் வாழ்ந்துகொண்டிருக்கும் போது,என்னை, என்குடும்பத்தை வாழ வைத்த தெய்வத்தை நான் தரிசி;க்கவேண்டும்.மனதில் ஊறப்போட்டிருந்த லட்சியம் கழுத்துவரை நிறைந்திருந்தது. தன்வாழ்வின் ஆதாரமே அதற்குள் தங்கியிருக்கிறது,, என அவள் திடமாக நம்பினாள்.

என்றைக்கோ ஒருநாள்நான் செத்துப்போய்,வருடத்தில் ஒருநாள் ,,சிலவேளைகளில்,, நினைவுபடுத்தப்பட்டும்  ஒரு போட்டோவில் நான் இளமையோடு அழகாக காட்சியளித்திருக்கலாம். உயிரோடு இருக்கும் போதுதான் நினைவுகளுக்கு உயிர்ப்பு உண்டு. செத்துப்போன பின் அவைகள்அர்த்தமற்று போய்விடும். எனது இருப்புக்கு,மல்லி அக்கேவின் நினைப்பு ஆதாரமானது. அவள் என்னை காப்பாற்றியதற்கு அர்த்தம்?

,,இப்போது நான் இந்த கேள்விக்கு விடைதேடி ஒன்றும் அலையவில்லை .ஆபத்தில், அதுவும் பேராபத்தில் நான் மாட்டிக் கொண்ட வேளையிலே தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மாமனிதரை பார்த்துவிட்டால் என்வாழ்வின் பலன் புரிந்துவிடும். மல்லி அக்காவை பார்த்து கையெடுத்து கும்பிடவேண்டும். அவளையறியாமலே அவள் கைகள் மேலெலும்பின. பக்கத்தில் இருந்தவனின் தோளிலே; அவளின் கை தட்டுபட்டது.மன்னிப்பு கேட்கும் பார்வையோடு அந்த மனிதனின் முகத்தை பார்த்தபோது, அவளுக்கு புரிந்தது மன்னிப்பு அவனுக்கு தெரியாத புதிர் என்று. அந்த ஆள் அவளை விட்டு  தள்ளிநகர்ந்து  பார்த்த பார்வையோ ஒரு பாம்பின் கண்கள் போல சீற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது. அந்த தீயின கனத்தை புரிந்து கொண்டாள். தானும் தள்ளி ஒதுங்கினாள். இவளின் அறியாத்தீண்டலுக்கு பகையாய் அவனின் கண்கள் சாதித் திமிரின் கண்ணாடிகளாய் nஐhலித்தன. மலையகத்து வசுவில் பயணம் செய்கிறவர்கள் இவனுக்கு தீண்டத்தகாதவர்கள் என்ற நினைப்பு. இந்த அகங்காரத்துக்கு நான் ஒன்றும் பயந்தவள் இல்லை. பிறந்ததிலிருந்து அனுபவித்து வரும் போர் அது. எந்தபோரும்  ஒரு  முடிவுக்கு வர சாத்தியமுண்டு. ஆனால் இந்த காட்டு மிராண்டிகளின் போர் முழக்கம் ஆண்டாண்டு காலங்களாக அதிர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

,,உன்னுடைய சாதிவெறிக்கு………! தானும் சீறிக்காட்ட வேண்டிய சந்தரப்பம்வரும் காட்டுவேன ;உனக்கு,, கறுவிக் கொண்டாள். இன வெறியின் போது உயிர்காக்க வேண்டிய நிலைமை வந்தபோது, உரிமைக்காக போராட வேண்டியிருந்த போது,மண்ணுக்குள்ளே தலையை புகுத்துக் கொண்ட முகங்கள் மீண்டும் சிலிர்த்துக் கொண்டு தம் தோகைகளை விரித்தாடுகின்றன. உயிர் வாழ்தலுக்காக மரணபயத்தோடு ஒவ்வொருகணத்தையும ;கடந்தபோது எல்லாவிதமான வேற்றுமைகளும் அப்போதைக்கு –தன ;தேவைக்காக- ஒதுங்கின. மழையில், சகதியில் ஒதுங்க இடமில்லாமல்,அன்னையை,தந்தையை,சகோதரர்களை இழுத்துக்கொண்டாவது  போகமுடியாத  நிலையில்  அவர்களை  நிரந்தரமாக  இழந்து, குண்டுகள் வீழ்ந்து எங்களை ஓடஓட விரட்டிய கணங்களை நினைத்தபோது, கண்ணீரிலே தானுமே காணாமல் போயிருந்தாள். இழப்புக்கள், காயங்கள், வலிகள் நெஞ்சுக்குள்ளே வடுக்களை விளைத்திருக்கின்றன. வேதனைப்பட்டோருக்குத் தான் தெரியும் அவைகள் மறைக்கப்படவே முடியாதது என. தளும்பு எரிமலையின் வெளிப்பாடே கண்ணீரின் ஊற்று. அது துடைக்க துடைக்க பெருகிக்கொண்டே போனது.
வசு மிகுந்த பொறுமலோடும் பெரும் குரலெடுத்தும் வசு தரிப்பு நிலையத்தை அடைந்து,அங்கு இந்த வசுக்காக காத்திருந்தவர்களை பரபரக்கவைத்தது. வந்து சேரவேண்டிய ஊருக்கு வந்தாயிற்று என அவளுக்கு உறைத்தது .தன்டராவல் பேக்கை மார்பில் அணைத்து இறுக்கியபடி, பக்கத்திலிருந்து பயணம் செய்த பாம்பின் காலைதன் செருப்புக்காலால் இறுக்கி மிதித்துவிட்டு வசுவை விட்டு இறங்கினாள் ,,ஐயோ.என்ன பொம்பிளை அது. மாடு மிதித்த மாதிரி என்காலை மிதித்து போகிறது…,,வலியில ;கத்தும் சத்தம் அவளுக்கு சந்தோசம்தந்தது.

அந்த முகத்தில் காறித் துப்பிவிட்டதாய் நினைத்து வெற்றியடைந்த திருப்தி. வசுநிலையத்தை விட்டு கிளம்பிய கால்கள் அவளை நேராக அவள் தேடிப் போகவேண்டிய பாதைக்கே அவளையறியாமலே போகவைத்தன. ,,எத்தனை வருடங்கள் இந்த பாதையால் போயிருப்பேன் பாதை  நன்றாய்த்தான் இருக்கிறது முந்தியிருந்ததைவிட. தார் தரை. நடக்க சுகமாயிருந்தது. 83க்கு முதல்குண்டும், குழிகளுமாக,மழையும் பொழிந்தால் கேட்க வேண்டுமே!(ஓம், மழை வானத்திலிருந்து எங்களுக்கு ஊற்றப்படுகிறது!)பாய்ச்சல் பயிற்சியே எங்களுக்கு தேவையில்லை. நம் வழியில் போகும் ஆட்டோ மழைநீரை ஆட்களுக்கு மேல் சீறியடித்து செல்லும்போது ஏறும் கோபம் தூசணங்களை இன்னும் வேகமாக அறையும்,,

இன்னும் ஒரு வலது பக்க வளைவில் திரும்பி நேராய் போனால் 5வது வீடு அவர்களுடையது. ,நாம் 10வருடங்களுக்கு மேலாய் வாழ்ந்ததும்.அங்கேதான .முன்னர் வீதியில் இருந்து தள்ளியிருந்த வீடுகள் இப்போது வீதிக்கு நெருங்கிவந்திருந்தன.அவைகளுக்கு முன்னால் முளைத்திருந்த குட்டி தோட்டங்கள் காணாமல் போயிருந்தன வீடுகளுக்கு இடையே இன்னும் வீடுகள் முளைத் திருந்தன.முன்னர் ஒடுங்கியிருந்த வீதி இப்போது விசாலமான பெருவீதியாய் இருந்தது அது போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெருவாய் ஆய்விட்டிருந்தது. வாகனங்களின் வேகம்மிகுந்த ,,எச்சரிக்கையோடு நட,, என உத்தரவே போட்டது. அவள் தேடிவந்த வீட்டை நெருங்குவது போல தோன்றவே அந்த வீட்டின் முன்னால் நின்றுகவனித்தாள்.

,,யாரும் வீட்டில் இல்லையோ?,, பழையஞாபகங்கள் மீண்டும் பரபரத்தன.அவள் இங்கு வாழ்ந்திருந்த காலங்களில், மாலை நேரங்களில் வராந்தாவின் மேல்படியில்  அமர்ந்து பக்கத்துவீட்டு நோனியோடு கலகலத்துக் கொண்டிருக்கையில், வீதியில் யாராவது தெரிந்தவர்கள் போய்க்கொண்டிருந்தால், அவர்கள் தனக்கு ஒரு புன்னகையை வீசியபோது தானும் பதிலுக்கு தன் மகிழ்வை வெளிப்படுத்தியது, நடந்து கொண்டே,, சுகமா,,: கேள்வி,பதிலை எதிர்பாராமல்,, சுகமாயிருக்க வேண்டும்,,என சொல்லிப்போகும் ஒரு புன்னகை மனிதர்களை அன்போடு பிணைத்திருந்தது! வீட்டின் முன்னால் நன்கு உயர்ந்து கிளைத்து வளர்ந்திருந்த வேப்பிலை மரம காணாமல் போயிருந்தது. அந்த மரம் இல்லாத வீட்டின் முன்தோற்றம் ஒரு அந்நியவீட்டிற்கு முன்னால் தான் நிற்பதாய் உணர்வு தந்தது. தனக்கு பின்னால் யாரோ தன்னை அதட்டுவது கேட்டதின் பின்னரே, தான் பழைய ஞாகங்களுக்குள் அலைந்து கொண்டிருந்தது உறைத்தது. இந்தப் பெண் நடுத்தரவயதை அண்மித்து கொண்டிருக்க வேண்டும். அவள்முகம் இவளைப்பார்த்து, நூற்றுக்கணக்கான கேள்விகளை அடுக்கி கொண்டே போனது. இவளுடைய உருவம்,கண்கள்,நடை,நிற்கும் தோரணை;ரத்தினத்தின் ஞபாகசக்தியை தீவிரமாக்கியது.  ம். நான்தான் தவறி, வேறோர் வீட்டின் முன்னால் நிற்கிறேனா? வீடு இதுவே தான்.அது உறுதி. சிலதிருத்து வேலைகள் நடந்திருக்கின்றன. அமைப்பு அப்படியே தான் இருக்கின்றது. ,,நான் அடித்து சத்தியம் பண்ணுவேன். இது நான் வாழ்ந்த வீடே தான்.,,மிகுந்த தூரத்தில் இருந்து வருகிறீர்கள் போல.;,,இந்தக்குரல் அவளை மேலும் உலுப்பியது. முன்னர் கேட்ட குரல் இது

,,ஓம்.அதிகாலையிலேயே புறப்பட்ட பயணம்.,
உள்ளே வாருங்கள்.,,கதவை திறந்துவிட்டாள்.

வராந்தாவை கடந்து நடுவீட்டில் கால் வைத்ததுமே அவள் கண்கள் சுவரில் மாட்டியிருந்த ஒரு பெரிய போட்டோவை நோக்கின. ,,ஐயோ. என்ர மல்லி அக்கே….என கத்திஅழுதாள். தேம்பிக் கதறினாள். படத்தின் கீழே விழுந்து கும்பிட்டாள். உங்களை பார்க்கத்தானே அக்கே. இங்கே ஓடிவந்தேன். நான் முன்னரே. நீங்கள ;வாழ்ந்திருந்த போதே உங்களை பார்க்க வந்திருக்கவேண்டும். உங்கள் கையால் ஆசிபெற்றிருக்கவேண்டும். நான் பெரியபாவம் செய்தவள். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. நீங்கள் தெய்வமாய் ஆகிவிட்டீர்கள். நிலத்திலே அவள் தன்தலையை குத்தி அழுதாள். துயரத்தின் ஊற்றுக்கள் பெருகிஓடி அவளை சூழ்ந்தன. படத்தின் கீழே குந்தியிருந்து அவள் வெகுநேரமாய் அழுதுகொண்டிருந்தாள். மல்லியை நேரில் பார்க்கமுடியாத சோகத்தை அழுதுதீர்க்கத்தான் முடிந்தது அவளால். மல்லி அக்காவிடம் சொல்லவேண்டியது அவளுக்கு நிறையவே இருக்கிறது .இன்னும் சொல்ல வேண்டும். நீங்கள் கேளுங்கள் அக்கா.,, மனம் குமுற pஉடல் உயிர்குழுங்க அவள் மல்லி அக்காவுக்கு எல்லாமே சொல்லிக்கொண்டேயிருந்தாள.; இல்லை. அழுது கொண்டேயிருந்தாள்.  போதும்அம்மா நீங்கள் அழுதது.எழுந்து முகம்கழுவுங்கள்.தேநீர் தயாரிக்கின்றேன்,,தனக்கு பின்னால் இவள் நீண்ட நேரமாக நின்றிருக்க வேண்டும். பின் புறவளவிலிருந்த வாளியிலிருந்து தண்ணீரை முகத்தில அறைந்து, மூக்கை சீறிவிட்டு வீட்டுள் வந்தபோதுதான்  அவளுக்குதான் ;கேட்கநினைத்தவிடயம்முhளையில்உறைத்தது.,,இந்தபெண்தன்னையார் என்றுகேட்கவில்லையே,,
,
,நீங்கள் ரத்தினமாயிருக்க வேண்டும். ரத்தினம் பெயரை என்னுடைய அம்மா அடிக்கடி கூறியிருக்கின்றார். உங்களைப் பற்றி நிறையவே எனக்கு சொல்லியிருக்கிறார்.2009ல் அவர் மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்த போது கூட உங்கள் பெயரை கூப்பிடிருந்தார். எனக்கு உங்களை அவ்வளவு ஞாபகமில்லை ,,அவள் வருத்தப்பட்டு, ரத்தினத்தின் தோளில் கை வைத்து அன்பை வெளிப்படுத்தினாள். ரத்தினத்தின் தான் இவ்வளவு காலமும் மல்லி அக்காவை பார்க்க வராமலிரு ந்தமைக்கு எத்தனையெத்தனை காரணங்கள் இருந்திருந்தன என்பதை இவளுக்கு எப்படி சொல்லமுடியும்? இங்கு வரதான் எடுத்த முயற்சிகள் மிகநீண்ட காலங்களாக முறியடிக்கப்பட்டி ருந்ததும்,அதற்குள் தானும் இழுபட்டு போனதை இவளிடம் எப்படி விளக்கப்படுத்துவது? 82ம் ஆண்டளவில் இவளுக்கு எட்டுவயதாய் இருக்கவேண்டும். மல்லி அக்காவின் சீத்தைக்குள், தன் உடலை அதற்குள் முடிந்தளவு மறைத்தபடி இழுபட்டுக் கொண்டே நடப்பாள்., என்னிடம் இப்படி கொஞ்சம்வா,, என்று கூப்பிட்டால் இன்னும் அம்மாவின் உடம்புக்குள் ஒளிந்து கொள்வாள். இப்படித்தான் ரத்தினத்துக்கும் இவளின் ஞாபகங்கள் இருந்தன. எந்தக்கேள்விக்கும் பதில்வராது. துலையை ஆட்டும் விதத்தில் பதிலை புரிந்துகொள்ள வேண்டும் .இப்போ இவளுக்கும் ஒரு பதினொருவயதில் மகன் இருக்கிறானாம்.
,,நிகால் சரியான குழப்படி,, என்கிறாள். பாடசாலையிலிருந்து நேராக வீட்டுக்கு வரமாட்டான். சிநேகிதர்கள் கூடிவிட்டது,, குறைபட்டாள்.

,,சிநேகிதங்கள் இந்தவயதில் தேவைதானே.,,

ரத்தினத்துக்கு தன் பேத்தியின் நினைவு வந்தது.மது இப்போதுதான் பாடசாலைக்கு போக தொடங்கியிருக்கிறாள்.அவளின ;ஓயாத பேச்சு, பிடிவாதம் தொலைதூரம் வந்து நினைவில ;மோதியபோது அவைகள் எரிச்சல்தரவில்லை

.,,சின்னபிள்ளைகள் அப்படித்தானே இருப்பார்கள்.,
நீங்கள் ஒரு ஆசிரியையாக இங்கே வாழ்ந்திருந்தீர்கள் எனஅம்மா சொல்லியிருந்தார். அப்படியென்றால் பிள்ளைகளைப் பற்றி உங்களுக்கு நல்லாய் தெரிந்திருக்கும். ஏன் இந்தக்காலத்து பிள்ளைகள் சொல்வழி கேட்கிறார்கள்இல்லை,,

இதற்கு இவளுக்கு என்ன பதில் சொல்லலாம்,, யோசித்தபோது,மல்லி அக்காவின்குரல் அவள் காதுக்குள் புகுந்தமாதிரி உணர்வு ஏற்பட்டது. நிகால் என்ற பெயரும்கூடவே ஒரு நடுக்கத்தை தந்தது 1979ல் ரத்தினம் மாத்தளை தமிழ் பாடசாலை ஒன்றில் ஆசிரிய வேலைக்கு இடமாற்றம் ஆகிதங்குமிடம் தேடி இந்த அந்நிய ஊரில ;அலைந்தாள.; மனிதர்கள் சொந்தநாட்டிலும் அந்நியம்தான்.அவளுடைய ஆசிரிய வேலை ஒரு மதிப்புபார்வையை தந்ததே தவிர வாடகைக்கு இடம் தர ஏதாவது காரணங்களை சொல்லி தட்டிக்கழித்தது.     தன்னுடைய அலைச்சல்களை போனில் அம்மாவிடம் சொல்லிய போது அம்மாவின் பதில்ரத்தினத்தை தேற்றவில்லை.மாறக மேலும் எரிச்சலே கொடுத்தது. தமிழ் இனபற்று தமிழர்களை ஆட்டிபடைக்கும் இயந்திரமாக ஆக்கிவிட்டிருப்பதும், அதுவும் பிறந்த ஊரிலேயே வாழ்ந்து செத்துப்போகிறவர்களுக்கு- கிணற்று தவளைகள் மாதிரி கோரசாக பாட்டு பாடத்தான் சரிவருகிறது. வீட்டு முற்றத்துக்குள்ளேயே சொந்ததமிழ் இனத்தையே அனுமதிக்க மறுக்கும் தமிழ் பற்றாளர்களுக்கு இன்னொரு இனத்தைப் பற்றிய விமர்சனத்தை வெறுப்பை கக்குவதற்கு உரிமையே கிடையாது. ஊருக்குள்ளே தங்களை அடைத்து வைத்திருப்பது போல சிந்தனைகளையும் அங்கேயே புதைத்து வைத்திருக்கிறார்கள்.ரத்தினமும் அவைகளை நேரில் அனுபவித்தவள்.,, ஏன்அம்மாவிடம் தன் துன்பங்களை சொல்லி மேலும் எரிச்சலை தேடிக்கொண்டேன்?,,தன்னையே நொந்துகொண்டாள்.

மல்லி அக்காவின் வீட்டில் தங்க இடம் கேட்ட போது, உடனடியாக அதற்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லை.,,இன்னொரு வீடு கிடைக்கும் வரை எங்களிடம் தங்கலாம்,,மல்லியின் வார்த்தை அந்த வெயிலுக்குள ;புழுங்கி வேர்த்து கொண்டிருந்த அவளுக்கு மேல் ஒரு இனிய தென்றலை தடவியது.  எத்தனையோ தடவைகள் மல்லி அக்காவுக்கு நன்றி சொன்னாள். ஞாபகமில்லை. தனியாக நன்றிவராது. ஒவ்வொரு செய்கைகளிலும், உறவினர், தெரிந்தவர்கள், தெரியாதவர்களிடமும்;  மல்லி அக்கா தனக்கு வாழ இடம் தந்து உதவிய அன்பை சொல்லுவதன் மூலமும் நன்றியை செலுத்தினாள்.ர த்தினம் ஒரு சிறிய இடம்; ஒருபாய் விரித்து படுக்கவும் தன் சூட்கேசை வைத்துக்கொள்ளவும,; கழிப்பிடத்தில், கிணற்றடியில சி;றியபங்கும் மட்டுமே தனக்கு தேவை எனஎத்தனையோ பேர்களைN கட்டிருந்தாள.; பெண்ணுக்குபேயும் இரங்காது என்பது நன்கு தெரிந்திருந்துமே அவளுடைய அலைச்சலை- ஒரு இருப்பிடம் தேடலை விடாப்படியாக பிடித்துக் கொண்டிருந்தாள். ஏனெனில் ரத்தினத்தின் ஆசிரிய சம்பளத்தை  எதிர்பார்த்து  ஊரிலே ஐந்து பேர்வாழ்ந்தனர். இவளுடைய உழைப்பு அங்கே பசியை தீர்த்தது. இருபிள்ளைகளின் கல்விக்கு, பெற்றவர்களின், அக்காவின் வாழ்க்கைக்கு உதவியது.,,நீஉழைத்து,அதிலே நாங்கள் சாப்பிட வேண்டியிருக்கிறதே,,பெற்றோர் அங்கலாய்த்துக் கொண்டாலும், ரத்தினத்தின் உழைப்பில் வாழவேண்டிய நிர்பந்தம் முழுக்கு டும்பத்துக்குமே இருந்தது பெண் உழைப்பில் வாழக்கூடாதென எந்தமுட்டாள் சொல்லியிருக்கின்றான்?

வயிறு கேட்குமா வாய்வீச்சுக்களை. அப்படி கேட்டு வயிறும் அடிபணிந்திருந்தால், இந்த உலகத்தின் அரைவாசி சனம்செத்துப்போயிருக்கும்!

மல்லி கூட என்னைமாதிரித்தான் ஒருஉழைப்பாளி. ஒரு சின்னதகர பொந்துக்குள் தேநீர் விற்றாள் .ரத்தினத்துக்கு இன்னொரு தங்குமிடம் 83இனக்கலவரம் வரை கிடைக்காமலேN போனதால் இருவரின் தோழமை ஒரு பலமாக இறுகியது.

தன் கணவனைப் பற்றி மல்லி என்றைக்குமே எதுவும் சொன்னதில்லை. அவனைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என மல்லி அக்கா ஒருதடவை சொன்னது ஞாபகம் சில மாலை வேளைகளில் வாசல் முன்படியில் உட்கார்ந்து, சிலவேடிக்கை பேச்சுக்களை பகிர்ந்து கொண்டபோது கூட அவள் கணவன் செய்திகள்-சிறிய மகள் தந்தைபற்றி ஆவலோடு கேட்டபோதும்- இல்லாமல் தான் இருந்தது. மல்லியின் கணவன் அவளை விட்டுபோய் வேறொருத்தியோடு வாழ்கிறான் என்பதை சில பேர் கேலியாக ரத்தினத்துக்கு சொல்லியிருந்தாலும், அது விடயத்தை அவள் மல்லியிடம் கேட்கவில்லை. அநுதாபத்தை யாரிடமும் பெறவிரும்பாத மல்லியை பற்றி நன்கு அவள் தெரிந்து வைத்திருந்ததால் அது பற்றி ரத்தினத்துக்கு முன்பாக யாராவது கதைத்தாலும், உடனேரத்தினம் பேச்சை மாற்றிவிடும் தந்திரம் செய்வாள். அவள் கணவன் திருமணத்தின் பின்னரும் தனித ;தமிழ்ஈழத்துக்காக போராடியவன். அதுவே அவனைப்பலி எடுத்தது. 30வருடங்களுக்கு பின்னரும் கூட கணவனை இழந்த சம்பவத்தை யாருக்காவதுசொல்லநேரும்போது,அவள்தன்துயரத்தைஅடக்கமுடியாதவாறு தடுமாறுவாள் .

கணவன் செத்துப் போனதே தெரியாமல் செத்துப் போனபோது 2வயதும் 3மாதமும் ஆன பிள்ளைகளை அணைத்துக் கொண்டு,அவர்களுக்காக வாழ்ந்தாக வேண்டியவாழ்வுதான் ரத்தினத்துக்கு விரக்தியேர்டு காத்திருந்தது.;அழத்தான் இப்போதும் முடிகிறது. தன்னை மாதிரியே பலரத்தினங்கள் தங்கள ;வாழ்வை தொலைத்து, வீரத்தாய்மார்களாக கீரீடம் சூட்டப்பட்டிருந்தார்கள். இந்தக் கண்ணுக்கு தெரியாத-மேடைப்பேச்சுக்கு- தமிழ்உணர்வு பிரச்சாரத்துக்கு உதவிய கீரிடம் அவர்கள் வாழ்வுக்கு உதவவில்லை. ஆசிரியை தொழில் உதவியது.

23வயதில் ஆசிரிய் வேலை கிடைத்த சிலமாதங்களிலே ரத்தினத்துக்கு திருமணமும் ஆனது. பிள்ளைபேறுகள் பெரும்பேறாக நினைக்க முன்னரே பல ஊர்களுக்கும் இடமாற்றங்கள் தாராளமாக கிடைத்தன..,, எங்களைப் போன்ற, சாதி குறைந்தவர்கள்தான் இடமாற்றத்துக்கு பொருத்தமானவர்கள் என சட்டத்திலும் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது போல.,,இடமாற்றத்தை நிறுத்த அவளால் முடியாமல் போன காரணம் அவள் கணவனும் தமிழினத்தின் உரிமை போராட்டத்தில சேர்ந்திருந்ததும்    தான் ;.நீவேலையை விட்டுவிடாதே,, எனஅவன் சொல்லிவைத்தது முன் கூட்டிய அவன் இல்லாமல் போவதை தெரிந்து தான் என்பதை அவளும் உணர்ந்திருந்தாள். மாவீரர் குடும்பம் உயிர்வாழ அவள் வேலை செய்தாக வேண்டும்.

,,அம்மா எங்களை விட்டு போன துயரத்தை நீங்கள் வந்து மறுபடியும் நினைவு படுத்துகிறீர்கள்.,,அதுவும் நல்லதே. மகன் நிகால வந்தால் அவனுக்கு நீங்கள் அவன் பாட்டியைப்பற்றி நிறைய சொல்லவேண்டும்.,,
நிகால் பெயரை மீண்டும் கேட்டதுமே ரத்தினத்துக்கு அவள்நின்றிருந்த இடம் நடுங்கியது மாதிரி பட்டது. மல்லியின் மகள் ஏதோ தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தாள். மல்லி அக்காவின் ஒரே தம்பியை ரத்தினத்துக்கு தெரியாமலா போகும்? நிகால் மிகவும் நோய் வாய்ப்பட்டு மூத்த சகோதரிக்கு பல வருடங்களுக்கு முன்னரே இறந்துபோனதாக சொன்னாள். தான் மாமாவில் மிக பற்று வைத்திருந்ததால் தன்மகனுக்கு நிகால் பெயரை வைத்ததாகவும் சொன்னாள். ஆனால் ஒரு தடவையாவது அம்மா வாழ்ந்திருந்த காலத்தில் நிகால் பெயர் சொல்லி தன்மகனை அழைத்தது இல்லை எனகுறைபட்டாள் மல்லியின் மகள்.

மல்லி அக்காவின் செத்துப்போன தம்பிநிகால் சகோதரியின் குடும்பசெலவுகளுக்கு கைகொடுத்தான். இவள்சிறியவளாய் இருந்தபோது இவளுக்கு விருப்பமான பொருட்களை வாங்கித்தந்து, இப்படி சிலவழி முறைகளில ;அப்பா இல்லாக் குறையை தீர்த்திருக்கின்றான். நிகால் மல்லி அக்காவிடம் வந்துபோகும் போது, அந்தநாளின் இந்த சின்னகுட்டிக்கு, வேலை முடிந்து தன் வீட்டுக்கு போகும் வழியில் ஏதாவது ஒரு இனிப்பை அவள் கைகளில் திணித்து விட்டு போவான். அவன் தன் பாசத்தை காட்ட இந்த குட்டியை தன்னிடம் இழுப்பான். அவள்மேலும் அம்மாவின் உடலுக்குள் மறைந்து விடுவாள். கண்கள் மட்டும ;வெளியே தெரியும். மல்லியின ;சீத்தைக்குள் ஒளிந்து கொண்டு, சொக்கலேட்டை படுவேகமாக வாயில் அடக்கிகொள்வாள்,,அதனையாரும்                                                                                                              தன்னிடமிருந்து பறித்தவிடுவார்களோ,, மாமனுக்கு ஒரு வெட்கசிரிப்பை சிந்துவாள.;  இவளுடைய மாமன் நிகால் வீதியில் ரத்தினத்தை கண்டால் ஒரு சின்னதலையாட்டலோடு  நகர்ந்து விடுவான். மல்லி அக்காவின் வீட்டில் அவளை காண நேரிட்டாலோ ஒருமரியாதை தருகிறமாதிரி தன்வேக நடையை குறைத்து, ரத்தினத்தை கடப்பான். தான் ஒரு ஆசிரியை யாய்அதுவும் ஆங்கில ஆசிரியையாய் வேலையில் இருப்பதால் இவ்வாறுமதிப்பு இருக்கலாம் எனகருதினாள் அவள்.,,இந்த மலையகமக்களுக்கு கிடைக்காமல் போன கல்வி என் பிரதேசத்துக்கு மட்டும் எப்படி வாய்த்தது? ரப்பரும், தேயிலையும் விளைகிற பூமியில ;படிப்பு மட்டும் விளைகிறதாய் தெரியவில்லை.
,,அம்மாவும், நிகால் மாமாவும் இல்லாமல் என பிள்ளை;யோடு நான் படுகிறபாடு இருக்கிறதே,, சாப்பாட்டு தட்டத்i தரத்தினத்தின ;கையில் தந்து கொண்டே மல்லியின் மகள் சொன்னாள:; .

மாமாவுடைய ஒரு போட்டோ கூட எங்களிடம் இல்லை .இருந்திருந்தால் அம்மாவுடைய போட்டோவுக்கு பக்கத்தில் அவருடைய போட்டோவையும் மாட்டி வைத்திருப்போம்.,,சாப்பாட்டு தட்டத்தில் ரத்தினத்தின் கைஅலைந்தது. கண்ணீரும் சாப்பாட்டில் கலந்தது.

நல்லகாலம் நிகாலின் போட்டோ அங்கில்லை. ரத்தினம் நினைத்துக்கொண்டாள். அதுதான் மல்லி அக்காவின் ஆத்மாவுக்கு நிம்மதி. ரத்தினத்துக்கு தானே தெரியும்; மல்லி அக்காவின் மனப்பலம். நியாயத்துக்காக அவள் தன்னையே பலிகொடுக்க அஞ்சவில்லை. அந்தயுலை நாளை நினைத்தபோது,மல்லிஅக்கா ஒருகடவுளாக ரத்தினத்துக்கு தெரிந்தாள். அன்றுபாடசாலை முடியும்நேரம்.அவள் படிப்பிக்கும் பாடசாலைக்கு சும்மா கூட வந்திராத மல்லி அக்கா ,தன்னை தேடி வந்திருப்பதாக ஒரு மாணவி சொல்லிக் கொண்டிருக்கையிலே அவளுக்கு பின்னால் மல்லியின் முகம்பதட்டம் காணப்பட்டது.,, வீட்டில் அவள் மகளுக்கு ஏதாவதோ,,ரத்தினமும் கலவரமடைந்தாள். மல்லி அக்கா, தன்னை கெதிப்படுத்திவா, வாஎன இவளை அதட்டினாள். வேகமாக தன்னோடு நடக்கும் படி இல்லை ஓடிவரும் படிசொல்லிக் கொண்டே மிகவேகமாக முன்னேபோய்க் கொண்டிரு ந்தாள ;.பாடசாலைக்கு வெளிப்புறம் வந் ;ஏதோ குழப்பமான, புதிரான சூழ்நிலை புரிந்தது. பாதையிலே மக்கள் பதை பதைத்து ஓடுவதும் பயந்த முகங்களும் பெரிய ஒரு ஆபத்து நடக்க இருப்பதை உணர்த்தின. மல்லி அக்காவிடமும் எதுவும் கேட்கமுடியவில்லை.

ஏனெனில ;அவளே மூச்சு இரைக்க இரைக்க ,ரத்தினத்துக்கு முன்னே ஓடிக்கொண்டிருந்தாள்
.,,எனக்கு பின்னால்வா,, இது மட்டுமே அவள் கையும் உடம்பும ;இட்ட கட்டளை. ஓட்ட நடையிலே உடல் பாரமாய் புரிந்தது. தூரத்திலே ஆண்கள் கூட்டமாய ;கூட்டமாய் கண்களில் ஆவேசத்தை கக்கிக்கொண்டு கைகளிலே பெரியகம்புகளோடு, இரும்பு கம்பிகள், வாள்களோடு ஆத்திரத்தை கொப்பளித்துக் கொண்டு, போவதை கண்ட போது தான் ரத்தினத்துக்கு நிலைமைஉறைத்தது. இப்போது அவளுக்கு தன் உடல் லேசாய் போனது. கடந்து போனநாட்களிலே இனக்கலவரம் உண்டாக கூடியசாத்தியங களை பத்திரிகைகள் சாத்திரம ;சொன்னது மண்டைக்குள் வேலை செய்யத் தொடங்கியது.பெண்கள்,பிள்ளைகள் வீடுகளுக்குள் புகுந்து உட்பக்கத்தால் கதவுகளை புhட்டிக்கொண்டிருந்தார்கள்.ஆண்கள்மட்டுமே,குழுக்களாய்,வீரர்களாய் ஆகியிருந்தார்களார்.,,தங்களால் மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும்,,என்கிற வீறாப்பு அவர்களின் விறுவிறுப்பான ஓட்டத்தில் உரத்துகத்தியது.

பகைவெறி; வெள்ளம் போல தடுக்கமுடியதாதபடி அவர்களுக்கு முன்னால் பாய்ந்தது. கூச்சல் தூசண வார்த்தைகளை தெளித்தது.மல்லி  அக்காரத்தினத்தின கையை பிடித்து அவளை எங்கேயும் நிற்கவிடாது, வீதியிலிருந்து இறங்கி, வீதிகளுக்கு பின்னாலும் ,சந்துகளில் மறைந்தும் தன் வீடுவரை இழுத்துக் கொண்டே போனாள். மகளை கூப்பிட்டு கொண்டே உள்ளே போனவள், வீட்டுக்கதவை உட்பக்க மாகபூட்டி,,ரத்தினத்தை எங்கே ஒளித்து வைக்கலாம,,;.பதைபதைத்து வீட்டின் ஒவ்வொரு மூலையையும் ஆராய்ந்தாள் மல்லி. வீட்டின பின்புறத்துக்கும் போய்யாரும் வீட்டுக்குள் நுழையாதபடி, தகரக்கதவின் துளையுள் கயிறை மாட்டி இறுக்கி கட்டிவைத்தாள்: ரத்தினத்துக்கு தன்உயிரோடு இருக்கிறதே சந்தேகமாயிருந்தது. பிள்ளைகள்தான் நினைவில் வந்தார்கள். அழுதுகொண்டே இருந்தாள .மல்லி தைரியம் தந்தாள். ,,உனக்கு ஓன்றும் நடக்காது .நான் இருக்கிறேன்.,,அவள் கைகளைப் பற்றிக் கொண்டு  விம்மினாள். கதவுதட்டும் சட்டம்கேட்டது. முன்கதவின ;மேல்பாதியை மல்லி திறந்தாள் .பக்கத்து வீட்டு பெண் சொன்னாள்: மல்லி அக்கா,மெயின் வீதியில் இருந்த தமிழ் கடைகள் எல்லாம் எரிகிறதாம். தப்பிஓடிக் கொண்டிருந்தவர்களுக்குமேல் பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார்களாம் .பெண்களை, பிள்ளைகளை கிணற்றுள் தள்ளினார்களாம். ,,அக்கா, ரத்தினம் எங்கே?,, கேட்டாள். அதற்கு பதில் ஒன்றும் சொல்லாத மல்லி கதவை சாத்திவிட்டு மீண்டும் ரத்தினத்திடம் வந்து, ,,பயப்படாதே,, என்றாள்.

,,நான்செத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பிள்ளை,பிள்ளைகள்…… .ரத்தினத்தின் புலம்பிக்கொணடேயிருந்தாள்
.உன்னுடைய பிள்ளைகளுக்காக நீ இன்னும் உயிருடன் இருக்கிறாய்,,அழுதது போதும் சும்மா அழாமல் என்ன செய்வோம் என்பதை யோசிப்போம்,,.வீட்டுக்குள்ளே அங்குமிங்கும் நடந்துயோசித்துக் கொண்டிருந்த மல்லி அக்காவை இருட்டிலிருந்த ரத்தினமும் பார்க்ககூடியதாய் இருந்தது. மாலையாகிக் கொண்டுபோகும் போதுதான் பயம் கூடிக் கொண்டே போனது .மல்லி ஓரிடத்தில் உட்காராமல் வீட்டுக்குள்ளே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள். இந்த பதட்டம் ரத்தினத்தை மேலும் மேலும் பதட்டமும் நடுக்கமும் கொள்ளவைத்தது. பாடசாலையிலும் மத்தியான இடைவேளையின் போது,சகஆசிரியைகள் தன்னை கவனித்தவிதமும்,அவர்கள் கொஞ்சம் தள்ளி நடந்து கொண்ட விதமும், சிலபேர் தன்னுடன்பேச முயன்று ஆனால் பேசாமல் போனவிதமும் ஞாபகத்துக்கு வந்தது. மிகவும் நெருங்கிப்பழகிய சுபாசினி டீச்சர  ரத்தினத்துக்கு மட்டுமே கேட்கும் குரலில், ,நீங்கள் எப்படியாவது அடுத்த வசுவில் உங்கள் ஊருக்கு போகபாருங்கள்,,என்றாள்.ரத்தினம் வெளி உலகத்தின ;பதட்டத்தை புரிந்து கொண்டாலும் உடனடியாக வெளியேறுவதற்கு காலம் தேவை. முக்கியமான விடயங்கள் அவளுக்காககாத்திருந்தன .பணம் வங்கியிலிருந்து எடுக்கவேண்டும். பிள்ளைகளுக்காக ஏற்கனவே சேர்த்து; வைத்திருக்கும் பொருட்களை டிராவல் பேக்குக்குள் திணித்துக் கொள்ளவேண்டும். மல்லி அக்காவீடு மந்தண்டாவ ளை மெயின் வீதியிலிருந்து சிறியநடை தூரத்தில்; இருப்பதால், வசு;பிடிப்பதும் சுலபமே. ஆனால் வீட்டைவிட்டு வெளியேறவேண்டும்.

வீதிக்குபோகவேண்டும். வசுகிடைக்குமா? அப்படிகிடைத்தாலும் குரநாகல்,     நாத்தாண்டியா       ஊர்களுக்கூடாக அநுராதபுரம் வசுகடந்து போகும்வரை என்உயிர்இருக்குமா? பிள்ளைகள் அவளுக்கு முன்னால் சிலையாகி குறுக்கே நின்று கொண்டிருந்தார்கள். மல்லி அக்கா தான்ரத்தினத்துக்கு ஒருகாக்கும் தெய்வமாகி; கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டே இருந்தாள. அவள் ரத்தினத்திடம் மெல்லிய குரலில்,, முசுலிம் பெண் மாதிரி நீமுக்காடு போட்டுக கொள்ளவேண்டும். ,என்றுசொல்லிக்கொண்டிரு க்கும் போதே முன்கதவு ஆத்திரத்தோடும் அதிகாரத்தோடும்  தட்டப்பட்டது.மல்லி கதவை         திறக்கவில்லை .பல ஆவேசக்குரல்கள்,, கதவைஉடைப்போம்,,பயமுறுத்தின. ஏன்என்வீட்டை உடைக்கவந்தீர்கள? கதவைதிறக்காமல் உள்ளிருந்N;தபெரும் குரலெடுத்து கத்தினாள் மல்லி. வெளிப்பக்கமிருந்து நிகால் பதில்சொன்னான:;,, கதவை திற. முதலில்!,, இந்த கட்டளை ஒருகணம் மல்லியை ஆட்டி வைத்தது .என்றாலும் அவள் ரத்தினத்தையும் தன்சின்னமகளையும :கட்டிபிடித்தபடி,, நீ என்னுடைய பிணத்தை பார்க்க வேண்டினால்,கதவை உடைத்து உள்ளே வா,,கத்தினாள்

இவளுடைய பெரும் குரல் ஆயுதம் ஆகி அவர்கள் ஆவேசங்களை துளைத்திருக்க வேண்டும் ஒருபயங்கரம் இருட்டை விட பயங்கரமாய் மிரட்டியது .எந்த நேரத்திலும் கதவு உடைக்கப்படலாம். ரத்தினம் வீதிக்கு இழுக்கப்படலாம். மல்லியை மேலும் இறுக்கி கட்டிக்கொண்டாள் ரத்தினம் .மூன்று பேரினதும் இதயத்துடிப்புகள் மூன்று பேருக்குமே சத்தமாக கேட்டது .கணங்கள் நிமிடங்களை தொடர மறுத்தது. எதுவித ஓசையும் வெளியி லிருந்து உள்ளே வரவில்லை .ஒட்டிக் கொண்டிருந்த மகளை இழுத்துக்கொண்டே மெதுவாக யன்னல் இடுக்குக்குள் கண்களை துளைத்துபார்த்துவிட்டு திரும்பிய மல்லி,, கெதியாய் புறப்படுரத்தினம். பேக் ஒன்றும ;வேண்டாம்.ஆசுப்பத்திரிக்கு அவசரமாக போகிறமாதிரி நடக்கவேண்டும்., காலையின் முதல்வசுவை பிடிக்கவேண்டும்.அதுவும் போகிறதா.கடவுளுக்கே வெளிச்சம்!,,

இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் நடுவிலே மல்லி மகளோடு முன்னால் போக,நல்ல இடைவெளி விட்டுரத்தினம் நடுக்க காய்ச்சலோடு பின்தொடர்ந்தாள். நிற்காமல் உறுமி கொண்டு போகிற வசுக்களை நிறுத்தி, ரத்தினத்தைஏ தாவது ஒரு வசுவுக்குள் திணிக்கும் முயற்சியில் மல்லி செயல்பட்டாள். வசு ஒன்று நின்றதும் மல்லி ரத்தினத்தை உள்ளேதள்ளி;, அவள் கைகளுக்குள் சில ரூபாய்த்தாள்களை திணித்தபோது வசுவும் வேகத்தை கூட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *