பேராசிரியர் சோ. மோகனாவின் முதல் பெண்
விண்ணில் பறந்த கருப்பினப் பெண் மா.ஜெமிசனை சின்னப் பெண்ணாய் நம் மனதில் சிலிர்க்க வைத்துள்ளார். அறுவை சிகிச்சையின் முதல் நாயகி “கிலானி” மருத்துவக் கல்விக்காக ஆண் வேடம் தரித்த அற்புதப் பெண் “அக்னோடைஸ்” தன் உயிரைப் பணயம் வைத்து பெண்களும் மருத்துவக் கல்வி பயிலலாம் என்ற வாய்ப்பை உருவாக்கியது என சாதித்த பெண்களின் வரலாற்றை சுவாரஸ்யமாக சொல்லிச் செய்கிறார் மோகனா.
இஷாங்கோ எலும்பு ஏறக்குறைய 20,000 ஆண்டுகளுக்கு முன்பு மாதவிடாய் பற்றி பெண்கள் எழுதிய கோடுகள் போட்ட குறிப்பு என்றால் எளிதில் நம்ப முடியாததாக பிரமிப்பாக உள்ளது. எலும்பை கணக்கு வைக்கும் கருவியாக முதன் முதலில் பயன்படுத்தியது ஒரு பெண்தான் என்பது பெருமைக்குரிய வரலாற்று உண்மை. ஆனால் இன்றுவரையிலும், ஜன்னல் கதவுகளுக்குப் பின்புறம், சுவரில் மறைவாக மைக்கோடுகள் போட்டுவரும் நம் கிராமத்துப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதும் யதார்த்தம்.
பித்தாகரஸ் கணிதவியல் சார்ந்து மட்டுமல்ல பொதுவாக அனைவருக்கும் தெரிந்த பிரபலமான பெயர் என்பதை யாவருமறிவர். அவரது கணித வெற்றிக்குக் காரணமாகவும் தீயால் அழிந்துபோன அவரது கண்டுபிடிப்புகளைப் பாதுகாத்தவரும் பித்தாகரஸ் மறைவிற்குப் பின்னரும் அவரது கல்வி நிறுவனத்தை தன் மூன்று பெண்களுடன் சேர்ந்து தொடர்ந்து நடத்தியவருமான கணிதவியலாளர் தியானோ என்ற பெண்ணைப் பற்றி யாருக்குத் தெரியும்? பித்தாகரசைக் காட்டிக் கொடுக்க மறுத்து தன் நாக்கினை வெட்டிக் கொண்டு உயிர் துறந்த “டைமிச்சா” வின் தியாகம் சிலிர்க்க வைக்கிறது.
5,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முதல் வேதி விஞ்ஞானி ஒரு பெண். அவரைப்பற்றி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். ஒரு விஞ்ஞானமாகக் கருதாமல் ஒரு கலையாக மக்களை மகிழ்விக்கும் பொருளை தயாரித்த தப்புட்டியின் நறுமணத் தைலம்தான் வேதியியல் விஞ்ஞானத்திற்கான வித்து என்பது அதிசயத்தக்க விஷயமாக உள்ளது. வேதியியலை தவிர்த்து நாம் வாழ ‚முடியாது.
பாரதி புத்தகாலயம்
7. இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை-600018