ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள்
“குந்தவை”
குந்தவை ஈழத்தின் ஆற்றல் வாய்ந்த பெண் படைப்பாளி குந்தவை (சடாச்சர தேவி.) பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான குந்தவை ஆனந்த விகடனில் ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற சிறு கதையை எழுதியிருந்தார். அதன் பின்னர் எல்லாராலும் அறியப்பட்டார். யோகம் இருக்கிறது, பெயர்வு வல்லைவெளி திருவோடு, இணக்கம்,மீட்சி, தன்மானம் என்பன இவரது வலிமை மிக்க சிறுகதைகள். குந்தவையின் சிறுகதைகளின் முழுத் தொகுப்பாக “யோகம் என்ற தொகுப்பு வெளிவந்துள்ளது
சென்ற ஆண்டு ஊடறு -குந்தவையிடம் ஒரு நேர்காணலை செய்திருந்தது. அதன் இணைப்பு
1.10. உங்கள் பார்வையில் இன்றைய எழுத்துச் சூழல் எப்படி இருக்கிறது?
எழுத்தாளர்களுடைய பிரச்சினைகள் வாக்குவாதங்கள் தோன்றியவண்ணம்தான் இருக்கிறது. ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். புதிதாக வரும் இளம் எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நிலை மாறவேண்டும்-குந்தவை
ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள்
கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் பா. பாலேஸ்வரி.
1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள் பெருமை தேடித்தந்த (யாழ்நங்கை )அன்னலட்சுமி இராஜதுரை
மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர்
மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக்