~ லறீனா அப்துல் ஹக் ~
வருடந்தோறும் மார்ச் 8 ஆம் திகதி உலகெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. பெண்களை வலுவூட்டுதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோருதல், பெண் கல்வி, பெண்களின் உரிமைகள் என வருடந்தோறும் பெண்களின் மேம்பாட்டை மையப்படுத்திய தொனிப் பொருள்களில் (Themes) இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வருடாந்தம் பிரேரிக்கப்படும், இந்தத் தொனிப் பொருள்களில் பொதிந்துள்ள முழுமொத்த விழுமியங்களையும் உள்ளடக்கியதாக இஸ்லாத்தில் பெண்களின் நிலை/அந்தஸ்து காணப்படுகின்றது என்பதை அல் குர்ஆனையும் அல் ஹதீஸையும் மட்டுமன்றி இஸ்லாமிய ஆரம்பகால வரலாற்றையும் ஆழமான வாசிப்புக்குட்படுத்தியவர்களால் மிக இலகுவாகக் கண்டுகொள்ள முடியும்.
என்றாலும், இஸ்லாம் பெண்களை மிக மோசமான அடக்குமுறைக்கு உட்படுத்தும் ஒரு மார்க்கம் என்ற குற்றச்சாட்டு மிகப் பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதையும் நாம் அறிவோம். அதற்கான காரணங்களை ஆராய்வதும், அந்த நிலையை இல்லாமலாக்குவதற்கு நாம் நம்மளவில் கண்டடையக்கூடிய தீர்வுகளை நோக்கிச் சிந்திக்கத் தூண்டுவதுமே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்
http://www.nilapenn.com/arts/essay/294-inspiring-women.html