: புதியகுரல்-மூன்றாவது பயிலரங்க கருப்பொருள் திட்டமிடல்-திருமணங்களும் சாதியும்-

தகவல் ஓவியா, நர்மதா

அன்பார்ந்த தோழர்களுக்கு,
 
புதிய குரல் மூன்றாம் பயிலரங்க சுற்றுலா நிகழ்வினை எதிர்வரும் டிசம்பர் 28, 29 ஆம் தேதிக்களில் நட்த்த இருக்கிறோம் என்பதனை முன்பாக தெரிவித்திருந்தோம்… இந்த முறை நிகழ்வினை அனைவரும் பங்கெடுக்கும் படியாக புதிய வடிவத்திலும், ஆய்வரங்கமாகவும் நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் அனைவரின் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்படுகிறது.  நிகழ்ச்சி நிரலுக்குள் போவதற்கு முன்பாக நிகழ்வு பற்றி:
 
இந்நிகழ்வின் முழு கருப்பொருளாக ”சாதி – இன்று” என்ற தலைப்பு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சமீப கால நிகழ்வுகள் பொதுப்புத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இவற்றின் அடிப்படையில் இந்த தலைப்பு முக்கியத்துவம் பெறுகிறது…பயிலரங்கத்தின் முதல் நாளில் மூன்று அமர்வுகளில் இத்தலைப்பு கீழ்க்காணும் உப தலைப்பு பிரிவுகளின் படி விவாதிக்கப்பட இருக்கிறது.
 
1.சாதியும் திருமணமும் – நகர்புறம் மற்றும் கிராமப்புறம்

2.சாதியும் தொழில்களும் –  (அமைப்பு சாரா,  அமைப்பு சார்ந்த தொழில்கள்) நகர்புறம்
  மற்றும் கிராமப்புறம்

3.சாதியும் நிலமும் சொத்துகளும் – நகர்புறம் மற்றும் கிராமப்புறம்

4.சாதியும் பெண்களும்- நகர்புறம் மற்றும் கிராமப்புறம்

5.சாதியும் நீதித்துறையும்

6.சாதியும் அரசு நிர்வாகமும் – மத்திய மாநில அரசு நிர்வாகம், உள்ளாட்சி  நிர்வாகம்
  (முக்கியமாக நிதி ஒதுக்கீடு)

7.சாதியும் இடஒதுக்கீடும்

8.சாதியும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள்
 
நிகழ்ச்சி அமைப்பு:
 
மேலே குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் புதிய குரல் பங்கேற்பாளர்களிடமிருந்தும், தமிழகத்தில் கருத்துரையாளர்கள், சிந்தனையாளர்களிமிருந்தும், கருத்துக்கள் எழுத்து வடிவில் பெறப்படும். இந்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் விவாத்த்திற்கான கேள்விகள் வடிவமைக்கப்படும்.
 
நிகழ்வில் மூன்று சிறப்பு விருந்தினர்கள் அழைக்கபடுவார்கள்.  இவர்கள் முன்னிலையில் விவாதங்கள், வந்திருக்கும் அனைத்து பங்கேற்பாளர்களும் கலந்து கொள்ளும்படியாக நட்த்தப்படும்.  இவ்வாறாக  நான்கு அமர்வுகள் (ஒரு அமர்வு 1.30 மணி நேரம் வீதம்) நடத்தப்படும். இறுதியாக இரவு 7 மணிக்கு சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றும் பொது அமர்வு நடத்தப்படும். பொது அமர்வில் பொதுமக்களும் அனுமதிக்கபடுவார்கள். இந்த ஒரு நாள் அமர்வு சிறப்பாக வெளிவரும் பட்சத்தில் அவை தொகுக்கப்பட்டு ஒரு குறு நூலாக வெளியிடப்படும்.
 
நண்பர்கள் முன்வந்து முழு மனதுடன் இந்த 2 மாதமும் தங்கள் பங்களிப்பினை எழுத்துவடிவிலும் வழங்கி இந்த நிகழ்வினை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
 
உங்கள் மடல்களை / மின்னஞ்சல்களை இன்றிலிருந்து எதிர்பார்க்கிறோம்… உங்கள் கருத்து என்பது மேற்குறித்த தலைப்பில் நீங்கள் படித்த்தாகவோ, உணர்ந்ததாகவோ இருக்கலாம்.
 
கருத்துக்கள் அனுப்ப்ப்பட வேண்டிய அஞ்சல் முகவரி:
ஓவியா
எண்.13, 2ஆவது சந்து,
நூர்வீராசாமி வீதி,
நுங்கம்பாக்கம் காவல் நிலையம் பின்புறம்,
நுங்கம்பாக்கம்,
சென்னை – 600 034.
மின்னஞ்சல்:
 
இத்துடன் இரண்டு நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.  குழந்தைகள் நிகழ்வுகளுக்கான திட்டமிடலின் பொருட்டு தங்கள் உறுப்பினர்களின் வயது, கல்வி போன்ற விபரங்களை முன்னதாக அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம். தயவுசெய்து முன்பதிவு செய்யுங்கள்.
 
ஓவியா
புதிய குரல்

புதிய   குரல் மூன்றாவது பயிலரங்கம்
லைஃப் செண்டர், நொச்சிஓடைப்பட்டி, திண்டுக்கல்- நத்தம் சாலை, டிசம்பர் 28 29,2013
 
நிகழ்ச்சி நிரல்
 
நாள் 1: 28.12.2013
 
08:00 – 09:00       காலை உணவு             
09.00 – 10.00        கலை நிகழ்ச்சிகள்     
10.00 – 11.00       வரவேற்பு, தங்குமிடம், பயிலரங்க ஏற்பாடுகள் பற்றிய விளக்கம், பங்கேற்பாளர்கள் அறிமுகம்
11.00 – 11.15        தேநீர் இடைவேளை
 
சாதி – இன்று
(சாதி குறித்த அனைத்து அமர்வுகளிலும் சிறப்புப் பேச்சாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களது கருத்து கேட்கப்படும்)
 
11.15 – 12:45        விவாதத் தலைப்புகள்  (அமர்வு 1 – 1லு மணி )
 
1.சாதியும் திருமணமும்   – நகர்புறம் மற்றும் கிராமப்புறம்
2.சாதியும் தொழில்களும் – (அமைப்பு சாரா, அமைப்பு சார்ந்த தொழில்கள்) நகர்புறம் மற்றும் கிராமப்புறம்
 
12:45 – 13:30      உணவு இடைவேளை
 
 
13:30 – 15:00:     விவாதத் தலைப்புகள்  (அமர்வு 1 – 1லு மணி )
 
3.சாதியும் நிலமும் சொத்துகளும் – நகர்புறம் மற்றும் கிராமப்புறம்
4.சாதியும் பெண்களும்- நகர்புறம் மற்றும் கிராமப்புறம்
 
15:00 – 15:15:      தேநீர் இடைவேளை
 
 
15:15 – 16:45      விவாதத் தலைப்புகள்  (அமர்வு 1 – 1லு மணி )
 

 

5. ’அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற அரசாணை, சாதி ஒழிப்பில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?  இது போன்று சாதி வேறுபாட்டை ஒழிக்கும் நோக்கில்  அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் கருத்துப்பகிர்வு செய்யலாம்.
6.சாதியும் அரசு நிர்வாகமும்-  மத்திய மாநில அரசு நிர்வாகம்,  உள்ளாட்சி நிர்வாகம் (முக்கியமாக நிதி ஒதுக்கீடு)
 

16:45 – 18:15      விவாதத் தலைப்புகள்  (அமர்வு 1 – 1லு மணி )
 
7.சாதியும் இடஒதுக்கீடும்
8.சாதியும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள்
 
18.15 – 19.00                       சிற்றுண்டி இடைவேளை
 
பொது அரங்கம்
 
19:00 – 21:00      சாதி ஒழிப்பின் மீதான இன்றைய அறைகூவல்கள் புதிய குரல் உறுப்பினர்களும் பொதுமக்களும் பங்குபெறும் பொது விவாத அரங்கம்
 
21.00-21.15   பால், பழங்கள் வழங்கப்படும்
 
21:150 – 22: 00   சாதியும் சமூகமும் எனும் தலைப்பை ஒட்டிய குறும்படம் அல்லது ஆவணப்படம் திரையிடல்                 (உறுப்பினர்கள் பரிந்துரைக்க வேண்டுகிறோம்)
 
நாள் 2: 29: 12: 2013
 
 
06:00 – 08:00:                      சிறுமலை பயணம்   
08:00 – 09:00:                      காலை உணவு             
09:00 – 11:00:                     சிறியவர், பெரியவர் பங்குபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகள்
11.00 – 11:15:                      தேநீர் இடைவேளை
11:15 – 13:00                      நமது நேரமும் நாமும் – விவாத நிகழ்ச்சி
 
13:00– 14:00:                      உணவு இடைவேளை
 
14:00 – 15: 00                     கருத்தறிதல்
 
15: 00 – 15: 30                    தீர்மானம் இயற்றுதல்
 
15:30 – 16:30                      புதிய குரல் –அடுத்த கட்டப் பயணம் புதிய குரல் செயல்பாடுகளை வலைதளம் வாயிலாகக் கொண்டுசெல்வது; பொது மக்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது குறித்த திட்டமிடல்
 
16:30 – 16:45                      தேநீர் இடைவேளை
 
16:45 – 17:00                      நன்றி உரை                    
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *