http://maattru.com–சிந்தன் ரா
தினமும் வெறும் வயிற்றோடு மலம் அள்ளும் வேலைக்குச் செல்கிறேன். வேலை முடிந்து திரும்பியதும் எனக்கு உணவு உண்ண விருப்பமில்லை. குமட்டல் உணர்வே மேலோங்குகிறதுஞ் என் உடல் முழுவதும் ஈக்கள் மொய்த்து விடுகின்றன. சாப்பிட உட்கார்ந்தால் உடலில் மட்டு மல்ல அந்த உணவிலும் ஈக்கள் பரவிவிடுகின்றன
இதுதான் எனது தினசரி வாழ்க்கை – சரஸ்வதி என்ற துப்புரவு தொழிலாளி
–தினமும் வெறும் வயிற்றோடு மலம் அள்ளும் வேலைக்குச் செல்கிறேன். வேலை முடிந்து திரும்பியதும் எனக்கு உணவு உண்ண விருப்பமில்லை. குமட்டல் உணர்வே மேலோங்குகிறதுஞ் என் உடல் முழுவதும் ஈக்கள் மொய்த்து விடுகின்றன. சாப்பிட உட்கார்ந்தால் உடலில் மட்டு மல்ல அந்த உணவிலும் ஈக்கள் பரவிவிடுகின்றன
இதுதான் எனது தினசரி வாழ்க்கைஞ்
– சரஸ்வதி என்ற துப்புரவு தொழிலாளி
மனித மலத்தை மனிதன் அள்ளுவது தேசிய அவமானம் என்று மகாத்மா காந்தி 1901ல் கூறினார். அவர் கூறி நூற்றாண்டுக்கும் மேலான காலம் கடந்த பின்பும் அந்த தேசிய அவமானம் தொடர்கிறது. 2009 இல் இந்திய நாடாளுமன்றத்தில் நாட்டின் பிரதமர் மன் மோகன் சிங் முழங்கினார்: “நம் நாட்டில் மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமை தொடர்வது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்டுள்ள கரும் புள்ளியாகும். இதனை 2011-க்குள் முற்றிலும் துடைத்தெறிய மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும்”.
சட்டங்களின் லட்சணம்
ஆட்சியாளர்களின் இத்தகைய வார்த்தை ஜாலங்களுக்கு பஞ்சமேயில்லை. பல முறை இவ்வாறு காலக்கெடு கொடுத்து பேசுவதும் நடைமுறையில் இந்த இழிவு தொடர அனு மதிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி முயற்சித்துதான் 1993 இல் உலர் கழிப்பிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தடைச் சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனால் இதனை அமல்படுத்த உறுதியாக நடவடிக்கை எதுவும் மத்திய, மாநில அரசு களால் மேற்கொள்ளப்படவில்லை. ஒருவர் கூட இந்தச் சட்டத்தில் தண்டிக்கப்பட வில்லை என்பது இச்சட்டம் அமலானதன் லட்சணத்தை வெளிப்படுத்துகிறது. நாட்டின் தலைநகரான தில்லியிலேயே 10,000 உலர் கழிப்பிடங்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இது எவ்வளவு பெரிய அவக்கேடு?இத்தகைய சூழலில்தான் 1993 ம் ஆண்டு சட்டம் இந்த இழிவை அகற்ற போதுமானதாக இல்லை என்று கூறி 2013 செப்டம்பரில் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். இந்த இழிவை துடைத்தெறிய வேண்டும் என்ற உணர்வுப்பூர்வமான முயற்சிகள் இருந்தா லன்றி எத்தனை சட்டங்கள், போட்டாலும் இந்த தேசிய அவமானத்தை அகற்ற முடியாது.நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல நீதிமன் றத்திலும் கூட இத்தகைய வெற்று அறிக்கை யையும் வாக்குறுதியையும் திரும்பத் திரும்ப தாக்கல் செய்து கொண்டே இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இதனால் ஆத்திரமடைந்து உச்சநீதிமன்றம் ஒரு கட்டத்தில் “வெற்று வார்த்தைகளால் எங்களை முட்டாளாக் காதீர்கள்” என கடுமையாக மத்திய, மாநில அரசுகளைச் சாடியது. “மனித மாண்பை காக்கும் துப்பில்லாத அரசு” என்றும் குற்றம் சுமத்தியது. இவ்வளவு கடுமையாக உச்சநீதி மன்றம் சாடிய பிறகும் சொரணையற்ற நிலை யில்தான் மத்திய, மாநில அரசுகள் செயல்படு கின்றன என்பது எவ்வளவு பெரிய வெட்கக் கேடு?
சாதியுணர்வே அடிப்படைஞ்ஞ்ஞ்ஞ்.
இத்தகைய இழிதொழில் இந்தியாவில் நீடிப்பது தற்செயலானதல்ல. இந்தியாவில் நிலவும் சாதியமைப்பு இதற்கு முக்கிய காரணமாகும். சாதியமைப்பின் கீழ்த்தட்டில் உள்ளவர்கள் மேல்தட்டில் உள்ளவர்களுக்கு இழிதொழில் செய்ய வேண்டுமென்பது வர்ணா சிரம அமைப்பு இட்ட கட்டளையாகும். “இந்த வர்ணாசிரம அமைப்பையே ஆண்டவன்தான் அமலாக்கியுள்ளான். எனவே இது நிலை யானது அழிக்கப்பட முடியாதது” என வர்ணா சிரமவாதிகள் வாதிடுகிறார்கள். அத்தகைய வர்ணாசிரமவாதிகளில் ஒருவர்தானே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி? அவர் கூறுவதைக் கேளுங்கள் “வெறும் பிழைப்புக்காகவோ வேறு வேலை கிடைக்காததாலோ மக்கள் இந்தப் பணியைச் (மலம் அள்ளுவதை) செய்கிறார்கள் என்பதை நான் நம்பவில்லை. இது “கடவுளால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணி”.
ஆக மலம் அள்ளும் பணி புனிதமானது என்பதுதான் நரேந்திர மோடிகளின்வாத மாகும். இவரைப் போன்றவர்கள் நாட்டின் பிரதமரானால் நிலை என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள். ஆக, சாதியச் சிந்த னைகள் மேலோங்கியிருப்பது இந்த இழி வைத் துடைப்பதற்கு ஒரு தடையாக உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு இந்த இழிவிற்கு எதிராகப் போராடும் போதே சாதியமைப்பிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது.
பல லட்சம் பேர் இழி தொழிலில்ஞ்
இந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 7.50 லட்சம் பேர் இன்னமும் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத் தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த இழிதொழிலுக்கு எதிராகப் போராடி வரும் அமைப்புகள் கணக்குப்படி 10.3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேத் துறையில் பல்லாயிரம் துப்புரவுப் பணி யாளர்கள் தண்டவாளங்களுக்கிடையிலான இருப்புப் பாதையில் மலம் அள்ளிக் கொண் டிருக்கிறார்கள் என்பது இந்திய அரசின் அவலட்சணத்தை எடுத்துக் காட்டுகிறது.
அற்பத்தனமான நிதி ஒதுக்கீடு
விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளச்சி யடைந்துள்ள நிலையில் இந்த இழிதொழிலை முடிவுக்குக் கொண்டு வர முடியாதா? நிச்சய மாக முடியும். உலகில் பல நாடுகளில் இந்த இழிவு முற்றிலும் துடைத்தெறியப்பட்டுள்ளது. ஆனால், நம் நாட்டில் ஆட்சியாளர்களுக்கு இதில் ஆர்வமோ விருப்பமோ உணர்வுப் பூர்வமாக இல்லை என்பதுதான் உண்மை.உதாரணமாக இந்த இழி தொழிலை ஒழித்து இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வேறு வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு அளிப் பதற்கோ மத்திய பட்ஜெட்டில் 2011-12 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், பின்னர் இது ரூ.35 கோடியாக வெட் டிச் சுருக்கப்பட்டது. 2012-13ல் இதற்காக ரூ. 98 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. ஆனால் ரூ. 20 கோடியாக இது குறைக்கப் பட்டது. இதிலும் கணிசமான தொகை வெறும் ஆய்வுப் பணிக்காகச் செலவிடப்பட்டது. ஆக இந்த இழிதொழிலை ஒழித்து மறுவாழ்வு அளிக்க ஒதுக்கப்பட்ட பணமே மிகக் குறை வானது. அதையும் கூட முழுமையாகச் செல விடாமல் மிக குறைவான அளவே அதுவும் ஆய்வுப் பணிகளுக்கு மட்டுமே செலவிடப் பட்டு உள்ளது என்பது எவ்வளவு பெரிய அவக்கேடு? இத்தகைய ஆட்சியாளர்கள் எப்படி இந்த இழிதொழிலை ஒழிப்பார்கள்?
பாதாளச் சாக்கடை மரணங்கள்
இதேபோல மாநில அரசுகளும் தங்கள் பங் கிற்கு உருப்படியான நடவடிக்கை எடுக்கா மல் இந்த இழி தொழில் தொடர அனுமதிக் கிறார்கள் என்பதே உண்மையான நிலையாகும்.நாடு முழுவதும் மட்டுமல்ல தமிழகத் திலும் பாதாளச் சாக்கடை மரணங்கள் தொடர் கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பாதாளச் சாக்கடை அடைப்புகளை அகற்றுவதற்காக தொழிலாளர்கள் அதற்குள் இறக்கப்பட்டு அதில் டஜன் கணக்கானவர்கள் உயிரிழந்துள் ளனர். இவர்களில் மிகக் கணிசமானவர்கள் இளைஞர்கள். இவ்வாறு மரணமடைந்தவர் களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் கூட வழங்கவில்லை என்பது வெட்கக் கேடான தாகும்.
இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் பலமுறை சுட்டிக்காட்டி தீர்ப்பு வழங் கிய பிறகும் நிலைமையில் மாற்றமில்லை. பாதாளச் சாக்கடை அடைப்புகளை அகற்ற நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தமுடியும். மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு தேவை யான இத்தகைய இயந்திரங்கள் வாங்க மத்திய, மாநில அரசுகள் போதுமான நிதி ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்படாமலும் போதுமான இயந்திரங்கள் வாங்கப்படாமலும் உள்ளதால் பாதாளச் சாக்கடை மரணங்கள் தடையின்றி தொடர்கின்றன. ஆக மனித மாண் பையும் மனித நாகரீகத்தையும் பாதுகாக்க ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்பது தான் உண்மை. சமூகத்தில் நிலவும் சாதி உணர்வு ஆட்சியாளர்களிடம் ஆழமாக ஊடுரு வியுள்ளது என்பதில் என்ன மறுப்பு இருக்க முடியும்?
தலித்துகளின் இழிவான நிலைஞ்ஞ்ஞ்..
மலம் அள்ளும் பணியிலும் பாதாளச் சாக் கடை அகற்றும் பணியிலும் ஈடுபடுத்தப்படும் உழைப்பாளிகளில் மிகக் கணிசமானவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. இவர்கள் சாதியால் இழிநிலையில் இருப்பதால் தொழிலிலும் பொருளாதாரத்திலும் கீழ்நிலையில் வைக்கப் பட்டுள்ளனர். இவர்களின் தொழில் மட்டும் இழிவானதல்ல கூலியும் இழிவான மிகக் குறைந்த கூலி தான். இந்தியாவில் மிகக் கணிசமான தலித்துக் கள் விவசாயக் கூலிகளாகவும், அணிதிரட் டப்பட்ட உழைப்பாளிகளாகவும், துப்புரவுப் பணியாளர்களுமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மீதான தீண்டாமை வன்கொடுமை கள் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டு இருக்கின்றன.எனவே தலித்துகள் என்றால் சமூக ரீதி யாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப் பட்ட உழைப்பாளிகளாவர். இவர்கள் தொழி லாளி வர்க்கத்தின் கேந்திரமான பகுதியினர். இவர்கள் மீதான கொடுமைகளுக்கு முடிவு கட்டாமல் இவர்களை அணி திரட்டாமல் உழைக் கும் வர்க்கத்தின் ஒற்றுமை சாத்தியமல்ல.
அணிதிரள்வோம்
இந்தியாவில் வர்க்க ஒடுக்குமுறையும் சமூக ஒடுக்குமுறையும் பின்னிப் பிணைந் துள்ளன. இரண்டுக்கும் எதிராக ஏக காலத் தில் போராடாமல் சமூக மாற்றத்தையோ முன்னேற்றத்தையோ காண முடியாது. இப்பின்னணியில் 2013 டிசம்பர் 9ல் தீண் டாமை ஒழிப்பு முன்னணி சென்னை மாநக ரில் மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடு மைகளுக்கு முடிவு கட்டவும், பாதாளச் சாக்கடை மரணங்களுக்கு முடிவு கட்டவும் கோட்டை முன்பு நடத்திடும் மறியல் போராட் டத்திற்கு பெருந்திரளாக அணி திரள்வோம், தேசிய அவமானம் துடைத்திட திரண்டிடுவோம்.