தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன்((இலங்கை)

பட்ட மரங்களாய் நாங்கள்
இயந்திரத்தில் செல்கின்றோம் -இயந்திரமாய்
உடைகளில் மடும் பச்சை வர்ணங்கள்
உயிர்கள் தனியே உடலில் உலாவ
உணர்வுகள் எல்லாம் உறவுகளுடன் போக
யாருமற்ற காடுகளில் மிருகங்களுடன் நாங்கள்
செல்வீச்சில்  இறந்து போன வீடுகளில்
இறக்காத எம் உடல்கள்  நடமாடுகின்றன.
நாம் வைத்த புதைகுழிகள் இன்று
எமக்கே சவக்குளிகலாகின்ற காலம்
என் சகோதரனைக் கொன்று விட்டு
அவன் வீட்டில் நிலை கொள்ள
உன் மனம் தான் துளிர் விடுமா?
இல்லை,இல்லை
பாவங்கள் பரிகாரமாய் போக
அவன் பணியை நீ தொடர்
 
அழுதும் அவர் துயர் ஆறுவதில்லை
பிறர் துறந்தும் அவர் மனம் சோருவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *