போல் எல்யூவாட் (Paul Eluard)) இன் ‘குவர்னிக்கா’ -தமிழில்–கெக்கிறவா ஸ-லைஹா –
குவெர்னிகா!
போஸ்க் தேசத்தின் பாரம்பரியத்
தலைநகராம்
பிஸ்கேவ் பகுதியில் சிறுநகர்.
போஸ்கின் சுதந்திரனதும்,
பாரம்பரியத்தினதும்
புனித அடையாளச் சின்னமாகியிருப்பது
கருங்காலி (சிந்தூர) ஓக் மரமாம்.
சுதந்திரமான மென்னுணர்வுகள்
குவெர்னிகாவின் பூர்வீகம்.
அப்படியிருக்க ஏப்ரல் 26 1937இல்
மூன்றரை மணித்தியாலங்களாக
நாசிகளது கூட்டு விமானப் படைகள்
தொடர்ச்சியாய்
பொழிந்தன குண்டு மழையை.
பூமியின் அடிவரை தீய்ந்து வெந்தது
2000 பேர் இறந்து போயினர்;
அனைவரும் சாதாரண குடிமக்கள்.
தீயை உருவாக்கும், மற்றும் வெடித்துச்
சிதற வைக்கும்
குண்டுகளின் இணைத்தாக்கம் எங்ஙனம்
எனப் பரீட்சிக்க
பொதுமக்கள் மீது வீசப்பட்டன
இந்தக் குண்டுகள்.
நெருப்பினதருகே தோழமை முகங்கள்
குளிரிலும் தோழமை முகங்கள்
இரக்கமேயின்றி நசுக்கப்பட்டும்
அடித்துத் துவம்சம் செய்யப்பட்டும்
இருட்டில் வைக்கப்பட்டும்
தோழமை முகங்கள்
வெறுமைக்கு முகம் கொடுத்திருந்தன.
ஏμமை முகங்கள் தியாகங்கள் செய்தன.
உமதான மரணங்கள்
அனைவருக்குமான எச்சரிக்கை.
மரணம், ஒரு தூர வீசுப்பட்ட
ஹிருதயம்.
உணவுக்குத் திண்டாடி உன் வாμவை
பணயம் வைக்கச் செய்தனர் அவர்கள்
பூமிக்காய், வானுக்காய் நீ பணம்
செலுத்த வேண்டியிருந்தது.
தூக்கம், தண்ணீர் என்பனவற்றுக்காய்
நீ இழக்க வேண்டியதாயிற்று
உனதனைத்தையும்.
துயரத்துக்கும், ஏμமைக்கும் நீ பணம்
செலுத்த வேண்டியாயிற்று.
அவர்களே அவற்றைச் செய்தார்கள்.
இனிமையான நடிகர்கள்,
எத்தனை துயரம் எனினும் அதி இனிமை
தொடர்ந்து ஓடும் நாடகத்தில்
அந்நடிகர்கள்.
நீங்கள் மரணத்தை
எதிர்ப்பார்த்திருக்கவில்லை
வாழவும் மடியவும் தேவையான
உற்சாகமும் அச்சமும்.
மரணம் மிகக் கடினமானது,
கூடவே எளிதும் ஆனது.
பெண்டிரும், பிள்ளைகளும்
தமதான கண்களில் புதையலைச்
சுமக்கிறார்கள்.
தம்மால் முடிந்த வழியிலெல்லாம்
ஆண்கள் அதைப் பாதுகாக்கிறார்கள்.
தேனீர் பருகுதல்களின் போதான
பத்திரிகை வாசிப்பில்
நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்
குவெர்னிகாவின் மக்கள் எளியர்.
ஐரோப்பாவில் எங்கோ கொலைகாரப்
படைக் கூட்டம்
படையயடுக்கிறது
மனிதாபிமானத்தின் மீது.
ஐரோப்பாவில் எங்கோ
நமதான வாசல்களருகே
துப்பாக்கி ரவைகள் மரணத்தை
நிகμத்திச் செல்கின்றன.
அவைகள் பிள்ளைகளோடு
விளையாடுகின்றன,
காற்றையும் விட நன்றாய்.
பெண்களும் பிள்ளைகளும்
அதே சிவப்பு ரோஜாக்களை
கண்களில் சுமக்கிறார்கள்.
அவர்களது இரத்தம் எல்லோரும்
பார்க்கும் வண்ணம்
மின்னலுக்கும் இடிக்கும் பயந்தவர்கள்
நாம் என்று
சிந்திப்பதே பொருந்தாதபடியிருக்கிறது
எத்தனை அப்பாவித்தனம்.
(பிள்ளையுள்ளம்)
இடி ஒரு தேவதை;
மின்னல் அதன் இறகுகள்.
இயற்கையின் அபாயங்களை
பார்த்திட அஞ்சுவதால்
அடித்தளத்துக்கு நாம் என்றுமே
சென்றதில்லை.
தலைக்கவசம், சப்பாத்துகள் அணிந்த
கம்பீர ஆண்மக்கள் விதவிதமாய்
இறக்குகின்றனர் விமானக் குண்டுகளை,
எத்தனைப் பிரமாண்டக் கவனத்துடன்.
பூமியின் கீழே அலங்கோலங்கள்.
ஆண்கள் மீது இரத்தம்;
மிருகங்கள் மீது இரத்தம்.
கசாப்புக் கடைக்காரனை விட
சிறப்பாய் மதிக்கத்தக்க
ஒரு அறுவடை அருவருக்கத்தக்கதாய்
அதிதூய்மையாய் துப்புரவாய்.
கட்டுங்கடங்கா மரணத்தைச் சுகிக்கும்
ஒரு மிருகத்தை கட்டுப்படுத்திட
முயல்க.
ஏன் அவர்களது சிசுக்கள் இறந்தன
என்று
அவற்றின் தாய்மாருக்கு
இயம்பிட முயல்க.
அழிவிலும் நிம்மதி கொணர முயல்க.
யுத்தத்தின் ஒரு இரவு மீதமுள்ளது.
கதியற்ற நிலைமையின் சகோதரியர்,
மரணத்தின் மகள்மார்கள்,
அருவருப்பும் அச்சமும் ஊட்டுவனவாய்
துயரத்தின் நினைவுச் சின்னங்கள்
அழகிய அழிவுகள் கண்ணிகளும்,
பண்ணைகளும்.
சகோதரரே,
இதோ நீங்கள் அழுகிப் போனதும்
உடைந்து போனதுமான எலும்புகளாக.
பூமி மாறுகிறது.
உமதான வட்டப் பாதையில் நீங்கள்
அழுகிப்போன ஆகிருதிகளாக.
காலத்தின் சுகபோகமாய் மரணம்
குறுக்கீடு செய்கிறது,
புழுக்களுக்கும்,
அண்டங்காக்கைளுக்கும்
நீங்கள் எமதான அதி உயிர்த்துடிப்பு
மிக்க
வாக்குறுதிகளாக இருந்தபோது
குவெர்னிகாவின் இறந்த மஓக்டு
மரத்தடியே
குவெர்னிகாவின்
தூய வானங்களின் அடியே
ஒரு மனிதன் மறுபடி வந்தான்
சோர்வுற்ற குரலில் கத்தும்
செம்மறியாட்டுக் குட்டியை கையிற்
பிடித்தபடி,
ஒரு புறா அவனது இதயத்தேயிருந்தது
அனைத்து ஆண்களுக்காயும்
அவன் பாடிக்கொண்டிருந்தான்
அன்பிற்கு நன்று கூறுவதான புரட்சியின்
தூய பாடலை.
சுதந்திரத்தையும் உரிமையையும்
புறக்கணித்து,
ஒரு மனிதன் பாடிக்கொண்டிருக்கிறான்.
அவனது வேதனையின் குளவிப் பூச்சிகள்
உடைந்த தொடுவானுக்குள்
வேகமாய் விரைகின்றன.
தேனீக்கள் அவற்றின் கூடுகளைக்
கட்டின,
மனிதாபிமானத்தின் இதயம் மீதில்
அவனது பாடல் கேட்டு
குவெர்னிகா
அப்பாவித்தனம் மேலொழும்பி வரும்
அழிவை விட்டு குவெர்னிகா
போல் எல்யூவாட் (Paul Eluard)) இன் ‘குவர்னிக்கா’ என்ற
கவிதையை தமிழில்–கெக்கிறவா ஸ-லைஹா –
மேமனக்கவியின் கட்டுரை ஒன்றுக்காக மொழிபெயர்க்கப்பட்ட இக்கவிதை நன்றியுடன் பிரசுரமாகிறது.