“ஜப்னா முஸ்லிம் ” இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக அதன் ஆசிரியபீடம் தெரிவித்துள்ளது. இதன்பின்னால் இலங்கை அரசும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதி ஒருவரின் அயராத கையும் இருப்பதாக அவ்விணையம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அரச அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம் மக்களின் பல்வேறுபட்ட உணர்வுகளை (Jaffna Muslim) ‘ஜப்னா முஸ்லிம்’ இணையம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பங்காற்றி வந்தது.
அரச அடக்குமுறையின் ஒரு வடிவமான, கருத்து சுதந்திர, சுயாதீன ஊடக, எழுத்து துறையை தடை செய்து, அதன் குரல்வளையை நசுக்கும் அரச அடக்குமுறையானது முஸ்லிம்களின் ஊடகக் குரலையும் நசுக்கும் அதன் அடக்குமுறை செயலை தொடங்கி உள்ளது.
அரசின் இந்த அடாத்தான செயல் , ஒடுக்குமுறையாளர்களின் திட்டங்களையும் அவர்களின் அடுத்த கட்ட செயலையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
இவ்வாறு ஜப்னா முஸ்லிம் இணையத்தின் ஆசிரியபீடம் தெரிவித்துள்ளது.