சந்தியா -இலங்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் சிவகாமி சுப்ரமணியம் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என பத்திரிகைகள் அனைத்திலும் முதன்மைச் செய்தியாக இன்று வெளிவந்துள்ளது. இச் செய்தியை பார்க்கும் போது எனக்கு தமிழினி ஏதோ புரட்சி செய்துவிட்டு வெளியில் வந்தவர் போலவும் மரணதண்டனை பெற்றவர் போலவும் அவரைப் பற்றி முதன்மைச் செய்திகள். அருவருப்பாக உள்ளது.
பல்லாயிரக்கணக்கான பெண்களின் உயிர்களை காவு எடுத்தற்கும் பல பெண்கள் குழந்கைள் சிறுமிகளின் உயிர்களை கொன்றொழித்தற்கும் அப்பாவியான சிறுமிகளை புலிகளின் படைகளில் சேர்த்தது மட்டுமன்றி அவர்களின் உயிர்களை பறிப்பதற்கும் அவர்களை அநாதரவாக விட்டதற்கும் தமிழினி மக்களுக்கும் போராளிளுக்கும் பதில் சொல்லியோக வேண்டும். இவரால் உருவாக்கப்பட்ட பல பெண் போராளிகள் தமது பதின்ம வயதினை தொலைத்துவிட்டு பாலியல் தொழிலாளியாகவும் அநாதைகளாகவும் தங்களது பிரச்சினைகளை வெளியில் சொல்ல பயப்பட்டவர்களாகவும் இராணுவத்தின் அடிமைகளாகவும் உள்ளார்கள் ஆனால் மகளிர் பிரிவின் அரசியற்துறை பொறுப்பாளர் என்ற உயர் பதவியை வகித்த இவர் மட்டும் விடுதலை இதை எங்கே போய் சொல்லி அழ…?? பரிசுத்த எம் பிதாவே இவரை மன்னிப்பாராக…
தமிழினி வீராங்கனைகளில் ஒருத்தி. முள்ளிவாய்க்கால் வரையில் அவரை ஓட்டிவந்த தமிழ் தேசியம் அவருக்கு இன்னொரு தெரிவை வைத்திருந்ததா ?