அரசி
மனிதங்கள் மரத்து மரமான யுகத்தில்..
மரணத்தை நேசிக்கும் மனிதர்களில் ஒன்றாய் நானும்
மனித வாசம் அற்ற இருட்டில் தனியாக நீயும்
தவற விட்ட வாய்ப்பு ஒன்றால்
தனியாக அந்நிய தேசமதில்….
தடைகளை தாண்டியும்
தலை குப்புற விழுந்து எழுந்தும்
தமிழனின் தலைவிதியிலிருந்து
தப்புமா எம் தலைகள் மட்டும்..??
தவிப்பு ஒன்றே எமக்கு எந்நாளும் சொந்தம்…!!!
இளநீர் குடித்தவன் மரமேறி விட்டான்..!
இடையில் வந்து கோம்பையை தூக்கி…
இளிச்சவாயர்களாய் இன்றும் நாம்….!
இன்னும் எத்தனை காலமோ….???
இருளோடு எம் வாழ்வு
இரண்டறக்கலந்து விட்டது….!
மின்மினியின் ஒளி கூட..
மிகத்தொலைவிலும் இல்லை…!
கடந்து போன தருணங்கள்…
கலைந்து போன நினைவுகள்…
கனவாகிப்போன நிஜங்கள்….
கண் துடைப்பில் உறவுகள்…
துடி துடித்து உயிரை விட்டபடி..
துளித்துளியான கண்ணீரோடு மட்டும்..
துருவங்கள் ஆக்கப்பட்ட உறவுகளாய் நாம்…!!!
உயிருக்கு பயந்து…
உறவுகளை பிரிந்து ஓடோடி வந்தால்
உதைக்கின்றார்களே…
உண்மை தெரியாமல் இங்கும்..!!!
உயிரை கசக்கி பிழிந்து
உலர்த்தி சலவை செய்யும்
உயிர் இயந்திரங்கள்…!!!
உலகத்தை அறிந்திடா மானிடங்கள் இவை..!!
உணர்ச்சிகள் உணர்வுகளும் செத்து
உயிரற்ற உடலங்களாக…
உலவி வீரம் காட்டும் இவர்களை விட
உயிர்களை கொல்லும் இலங்கை இராணுவம்
உயர்வானது…!!!
உணர்வுகளை கொன்று
உறவுகளை பிரிக்கின்ற
உன்னதமான இராச்சியத்தின் தடுப்பு மையத்தை விடவும்
உயிர் வதை பூஸா முகாமும் நாலாம் மாடியும்
உயர்வானது…!!!
//இளநீர் குடித்தவன் மரமேறி விட்டான்..!
இடையில் வந்து கோம்பையை தூக்கி…
இளிச்சவாயர்களாய் இன்றும் நாம்….!
இன்னும் எத்தனை காலமோ….???
இருளோடு எம் வாழ்வு
இரண்டறக்கலந்து விட்டது….!
மின்மினியின் ஒளி கூட..
மிகத்தொலைவிலும் இல்லை…!//
உள்ளத்தினுள் வலியை ஏற்படுத்தும்… உயிர் வார்த்தைகள்..!
என் தங்கை என்ற ரீதியில் மிகவும் பெருமை கொள்கிறேன்.
வளர்க உங்கள் இலக்கியப் பணி..!
அண்ணா
-வல்வை அகலினியன்.