-புதியமாதவி –(மும்பை)
என் ஆகாயத்திளிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக
கருமேகங்கள் களவாடப்பட்டன.
என் தோட்டத்திலிருந்து
பறித்துவந்த
பச்சையங்க்களை
குரோட்டன்ஸ் இலைகள்
பூசிக்கொண்டன
ஈரம் கசிந்த என் பூமி
வெப்பத்தால் வெடித்து
வாய்ப்பிள ந்து கிடந்தது.
இதழ்கள் உதிர்ந்த
பூவின் காம்புகளாய்
கவிழ்ந்த முலைகள்
தேனீக்களின்
ரீங்க்காரமில்லாத
தோட்டம்.
மவுனத்தால் நிரம்பி
மரணம் தழுவிக்கிடந்தது
நிகழ்காலம் எங்கும்
கடந்த கால நினைவுகள்
வருங்காலத்தை
தனிமைத் தின்று
துப்பிய படுக்கையில்
தூ ளி யென அசைந்தது
உடல்
காலமெல்லாம்
கனவுகளில் எட்டிப்பார்த்த
பரமாத்மா
மெதுவாக அருகில் வந்து
முத்தமிட்டதோ?
சப்தமின்றி அடங்கிப்போனது
வீடு.