சுவிட்சர்லாந்தின் அகதிகளுக்கான தஞ்சக் கோரிக்கை கடுமையாக்கும் சட்டங்களை அமுல்படுத்த மக்கள் வாக்கெடுப்பு

Essen auf dem Boden: Asylzentren sind überfüllt.

சுவிற்சர்லாந்தில் அகதிகள் வருகை   பிரச்சினைக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் இனிமேல் அகதி அந்தஸ்து கோராத படியும்  அச்சட்டத்தை இறுக்கமடையச் செய்யும்  வாக்கெடுப்பு இன்று நடைபொற்றது. இதற்கு சுவிஸ் 80 வீதமான சுவிஸ்  மக்கள் ஆதரவு தெரிவத்துள்ளனர்.

அகதிகள் தொடர்பிலான கொள்கைகளை மேலும் இறுக்கமடையச்செய்யும்  வாக்கெடுப்புக்குஇ சுவிற்சர்லாந்து மக்கள் பெரும்பான்மையுடன் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட சுவிற்சர்லாந்தின் புதிய அகதிகள் கொள்கைகள் படி வெளிநாடுகளில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகங்கள் ஊடாக அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிப்பவர்களும்இ இராணுவத்திலிருந்து தப்பிவருபவர்களும் அகதி அந்தஸ்து கோர முடியாது. எனினும் இப்புதிய நடைமுறை தொடர்பில் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்நடைமுறை தொடர்ந்து கடைப்பிடிப்பதா என மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகின.

அதன் படி சுமார் 80மூ வீதத்திற்கு அதிகமான சுவிஸ் மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். சுவிற்சர்லாந்தில் தற்சமயம் 48இ000 பேர் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளனர். இது சுவிற்சர்லாந்தின் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் 0.5மூ வீதமாகும்.
Essen auf dem Boden: Asylzentren sind überfüllt.
 எனினும் கடந்த 10 வருடங்களில் சுவிற்சர்லாந்துக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்ததை அடுத்து சுவிஸ் மக்களிடையே அகதிகள் தொடர்பிலான எதிர்மறையான இனவாதம்  வளர தொடங்கியுள்ளது

இதேவேளை இவ்வாக்கெடுப்புக்கு எதிராக மனித உரிமை குழுக்களும் சுவிற்சர்லாந்தின் இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ந்து பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தன. இப்புதிய நடைமுறைகள் அகதிகள் தொடர்பில் மேலும் பாரபட்சத்தையே உருவாக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இவ்வாக்கெடுப்பில் அகதிகள் கொள்கைகளை மேலும் இறுக்கமடையச் செய்ய மக்கள் வாக்களித்துள்ளமை நிச்சயம் அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக சுவிற்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரும் பெருமளவிலான எரித்திரியர்கள் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கையிலிருந்து தப்பிவந்தவர்கள் ஆவார்கள்.  இனிமேல் அவர்களுடைய அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது.

சுவிற்சர்லாந்தில் 332 சுவிஸ் மக்களுக்கு ஒரு அகதி எனும் விகிதத்தில் சனத்தொகை இருக்கிறது. எனினும் ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக 625 பேருக்கு ஒரு அகதி எனும் விகிதம் காணப்படுகிறது.  அதோடு அகதிகள் மிகவும் பணக்கார நாடுகளில் வாழ்வதாக 10 இல் 9 சுவிஸ் மக்கள்  நினைக்கிறார்கள்.   எனவே இச்சூழ்நிலையில் மாற்றம் அவசியமானதே என மக்கள் நினைக்கிறார்கள் என சுவிஸ் மக்கள் கட்சியின் செலின் அமாண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *