பெண்களுக்கு எதிரான “வன்முறையை” எதிர்த்து கையெழுத்து

அன்னபூரணி (மட்டக்களப்பு,இலங்கை)

டிம்பர் 2012ம் ஆண்டிலிருந்து 2013 மே வரையான காலப்பகுதியில் பொதுமக்களிடமிருந்தும் குறிப்பாக ஆண்களிடமிருந்தும்  பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு அவ் வன்முறைக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டு அவ்  பெறப்பட்ட (100,000) கையெழுத்துக்களை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் ஒப்படைப்பது என்றும்  இவ்விவாதத்தில் திட்டமிடப்பட்டது

           

 அந்த வகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 13 மாவட்டங்களில் உள்ள 15 பகுதிகளில் பொது மக்களிடம் இருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
அனுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களிலேயே கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்வமைப்பினர் கூறுகையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக எமது நாட்டில் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன  பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் அதிகரித்துள்ளன 

வன்னியில் “ஒரு தந்தை அவரது மூன்று மகள்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். தற்போது அவர் சிறையில் உள்ளார். அவர்கள் அனைவரும் கர்ப்பமாகியுள்ளமையை நாம் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் உள்ளோம் இதே போன்று   பெண்களுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக  அங்குள்ள பெண்கள் உரிமைகள் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர் அதனால் அங்கும் நாம் கையெழுத்து வேட்டையை தொடங்கவுள்ளோம் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் பல வன்முறைகளை எதிர்நோக்குகின்றனர் எனவும் இவ்மைப்பின் பொறுப்பாளர் கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *