கோசத்திலிருந்து ஊடறுவிற்காக சந்தியா
‘பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எமது குரலை ஒலிக்கச் செய்வதற்கு நாம் போராட வேண்டி இருக்கின்றது என்பது வெளிப்படை. வாய்ப்பினை எமக்குத் தட்டில் வைத்துக் கெடுக்கப்படமாட்டாது” அரசியற் பங்குபற்றுதல் என்பதற்குப் பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக அரசியல் ஆய்வாளர்களால் இவ்வெண்ணக்கரு சார்ந்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அரசியற் பங்குபற்றுதல் என்பது உண்மையில் இன்று நிலைபேறான அபிவிருத்தியின் குறிகாட்டியாகவும் கொள்ளப்படுகிறது.
பால்நிலையும் அரசியலும் (Gender and Politics) தொடர்பான அக்கறையும், பகுப்பாய்வும், ஆராய்ச்சியும் இன்று வளர்ந்து வருகின்றது. பெண்நிலைவாதிகளும், பெண்களின் நலன் நாடுவோரும். பெண்களின் அரசியற் பங்குபற்றலை அதிகரிப்பதற்கான அவசியப்பாட்டினையும் அதற்கான பொறிமுறைகளையும் சமூக, அரசியல் விஞ்ஞான நோக்கில் நின்று ஆராய முற்பட்டும் வருகின்றனர். அவ்வாறு பகுப்பாய்வை மேற்கொண்ட பலரும் அரசியற் தளமானது மிக நீண்ட காலமாகவே ஆண்களுக்குரியதாகவும், தந்தை ஆதிக்க மரபுகளால் ஆட்சிப்படுத்தப்படும் ஒர் துறையாகவும் காணப்படுவதனை சுட்டிக் காட்டுகின்றனர்.
உலகளாவிய சமவாயங்கள், அரசியற் சாசனங்கள் பொருத்தனைகளின் பிரகாரம் அரசியற் பங்குபற்றலானது ஆண்கள், பெண்கள் இருசாராருக்கும் சமத்துவமான நிலையில் காணப்படுகின்றதை உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் நடைமுறையில் இவ்விடயம் சார்ந்து கணிசமான இடைவெளிகளும் குழப்பங்களும் முரண்பாடுகளும் நிலவவே செய்கின்றன. தேர்தலில் போட்டியிடுதல், வாக்களித்தல், பராளுமன்றத்தில் செல்வாக்குச் செலுத்துதல், தீர்மானம் நிறைவேற்றுதல். சட்டங்களை இயற்றுதல் முதலான விடயங்களில் இன்றுவரையிலும் பெண்களுக்குரிய ஸ்தானம் பூரணமாக வழங்கப்படவில்லை என்பதனையே மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. பெண்களின் பௌதீக உடற்கூறு மற்றும் வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அவர்களின் அரசியற் பங்கேற்பினை கதவடைப்பதற்கு அல்லது மட்டுப்படுத்துவதற்கு இந்த 21ஆம் நூற்றாண்டிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதனை நாம் அவதானிக்கின்றோம். எனவே, இலங்கையில் பெண்களின் அரசியற் பங்குபற்றுகை, அது சார்ந்து நிலவும் சவால்கள் அதற்கு நிகரான மாற்று வாய்ப்புகள் எதிர்காலத் திட்டங்களைப் பற்றியே இக்கட்டுரை பேச முற்படுகின்றது.
பெண்களும் அரசியல் ஈடுபாடும்.
இலங்கையின் அனுபவம் ஈடுபாடு பற்றிய பழமையான குறிப்புகளானவை வேதகாலம், சங்ககாலம் தழுவிய இலக்கியங்களிலும் காணக் கிடைக்கின்றன. கிராமிய சபா, மக்கள் சபா, நகரசபா என்பவற்றில் பெண்களின் அங்கத்துவம் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களிலும் அமைச்சர்களாகவும் சமாதானம் பேசுவோராகவும் அரசனுக்கு மதியுரை பகர்வோராகவும் பெண்கள் அரசியல் தளத்தில் இயங்கி உள்ளமையினை அவதானிக்கின்றோம்.
உலகலாவிய அரசியலை எடுத்து நோக்குவோமாயின், மேலைத்தேய மற்றும் தென் மற்றும் தென்கிழக்காசிய அரசியற் தளங்களைப் பார்த்தால், அரசியல் சார்பான வரலாறுகளில் தந்தையாதிக்கம், பாரபட்சம், அசமத்துவம் முதலான குணாம்சங்கள்
பிரதிபலிப்பதனை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அதாவது, தந்தையாதிக்கம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதனை மட்டுப்படுத்தி வந்துள்ளது, அன்றேல் இல்லாதொழித்து வந்துள்ளது.
இலங்கை வரலாற்றை எடுத்து நோக்கினால் குவேனி என்கின்ற குலமரபுப் பெண், அனுலாதேவி என்னும் சிங்கள அரசி முதலியோரின் அரசியல் ஈடுபாட்டினை அல்லது பங்குபற்றலை வரலாற்றுக் குறிப்புகளாகக் காண்கின்றோம் எனினும் காலனித்துவ காலகட்டத்தில் அதாவது போhத்துக்கேயர் காலம் முதல் பிரிட்டி~; காலம் வரை வெளியூர் அல்லது உள்@ர் பெண்களோ அரசியலில் பாரியளவில் செல்வாக்கினை செலுத்தவில்லை என்பதாக அறியப்படுகின்றது.
டாக்டர் திருமதி மேரி இரட்ணம் அவர்கள் அமைப்பு என்கின்ற ரீதியில் ‘இலங்கைப் பெண்கள் சங்கம்” என்கின்ற அமைப்பினை 1905 இல் ஸ்தாபித்தார். கிராமப்புற பெண்களின் கல்வி மேம்பாடு, சுகாதார விழிப்புணர்வு, தொழில்வாய்ப்பு என்பவற்றோடு சிறப்பாக பெண்களின் அரசியல் பங்குபற்றல் சார்பான விருத்தியிலும் அவ்வமைப்பு கவனம் செலுத்தியது. மூவினப் பெண்களும் இச்சங்கத்தில் அங்கத்துவம் வகித்தனர். இவர்கள் இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்குதல் தொடர்பான தீர்மானமும் அதனையொட்டிய விவாதங்களும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ‘பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்” என்ற வலுவான கோரிக்கையை முன்வைத்தனர். பின்னர் இக்கோரிக்கையின் பேரில் ஏற்பட்ட ஆர்வமும் ஈடுபாடுமே ‘பெண்களின் வாக்குரிமைச் சங்கம்” என்கின்ற அமைப்புத் தோன்ற வழிகோலியது.
இந்த நிலையில் வர்க்க, மத, பண்பாட்டு, இனத்துவத் தளங்களில் முற்போக்கு முகங்காட்டிய சில கலைஞர்களின் ஆணாதிக்கப்போக்கும் அதனைப் பிரதிபலிக்கும்படியான அபிப்பிராயங்களும் வெளியில் வந்தமையினையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதானது ‘பன்றிகளுக்கு முன்பாக முத்துக்களைத் தூவுவதற்கு சமமாகும்” என்ற வகையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டபோது படித்த முற்போக்குப் பெண்கள் கொதித்தெழுந்தனர். மிக நிதானமாக அதேவேளை நியாயபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியப்பாட்டினை வலியுறுத்தினர். இறுதியில் தமது கோரிக்கையில் வெற்றி பெறவும் செய்தனர்.
இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் போது சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலும் அதன் பின்னரும் பல பெண்கள் சட்டசபை உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் மாகாணசபை, உள்@ராட்சி, எதிர்கட்சித் தலைவிகளாகவும், பிரதமர்களாகவும், ஜனாதிபதியாகவும் இருந்து தமது பங்குபற்றலை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் பெண்களின் அரசியல் பிரவேசமும் ஏனைய செயற்பாடுகளும் அவர்களது குடும்ப ஆண் வழிசார்ந்து அமைந்திருக்கின்றமை பற்றிய விமர்சனங்களையும் நாம் மறுப்பதற்கில்லை.
அரசியற் பங்கேற்பில் பெண்களின் ஈடுபாட்டைத் தடுக்கும் பாரம்பரியக் காரணிகள்.
அரசியல் என்றவுடன் அது பொதுத்தளம் சார்ந்தது, ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்னும் கருத்தியல் பாரம்பரியமாகவே நிலவி வருவதனைக் காணலாம். கௌரவமான குடும்பப் பெண்களுக்கு அரசியல் என்றுமே உகந்ததில்லை என்கின்ற வாசகங்களையும் அடிக்கடி படிக்கிறோம்: கேட்கிறோம். இத்தகைய கருத்துகளின் பின்புலத்தில் தந்தையாதிக்க நலன்கள் இழையோடுவதனை (Pயவசயைசஉhயட டீநநெகவைள) நாம் தெளிவாக இனங்காண முடியும்.
அரசியல் தளமானது சலனப் போக்குடையது. நெளிவு சுழிவுகள் நிறைந்தது. ஆபத்தானது எனும் படியான கருத்துப் படிமங்களின் கீழ் பெண்கள் போ~pக்கப்பட வேண்டியவர்களே அன்றி ஆபத்தை எதிர்நோக்கிடவல்லவர்கள் அல்லர். அவர்களால் உணர்ச்சிபூர்வமாகவே தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும், பெண்களினால் இராஜதந்திர இரகசியங்களைப் பேணிப் பாதுகாக்க இயலாது என்பதாகவும், சான்றாதாரமற்ற பொதுப்புலன் ((Comment Sense சார்ந்த, தவறான முற்சாய்வுகள் சமூக மட்டத்தில் காணப்படுதோடு அவை குடும்பம், பாடசாலை, மத ஸ்தாபனங்கள், அரசியல், ஊடகங்கள் வாயிலாகவும் மீளுற்பத்தி செய்து நிலை நிறுத்தப்படுகின்றன. வேறு வகையில் அரசியல் என்பது நாட்டின் அரசாங்கத்தோடு தொடர்புடைய ஒன்றாகவும் ஆட்சி நிர்வாகத்தின் விருப்பு, வெறுப்புகளை ஈடேற்றும் ஓர் நிர்வாக இயந்திரமாகவும், இன்னுமொரு வகையில் ஆணாதிக்க அதிகார செயற்பாடாகவும் நோக்கப்படுகின்றது.
நாட்டின் சனத்தொகையில் அரைப்பங்கிற்கு மேலான விகிதாசாரத்தைப் பெண்கள் கொண்டிருக்கும் நிலையில் பெண்களின் அபிலாசைகள், அபிப்பிராயங்கள், கருத்துகள், பங்கேற்பு என்பன அரசியல் துறையில் உள்ளீர்த்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பதனை ஆணாதிக்க அரசியல் மரபுகள் மறந்து செயற்படுகின்றன. எனினும் இத்தகைய பாரபட்சமும், கதவடைப்பும் இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. பெண் அமைப்புகளும் பெண்களின் அரசியற் பங்கேற்புத் தொடர்பில் காத்திரமான பணிகளையும் முன்னெடுத்து வருகின்றன.
வரலாற்று நிலையில் இலங்கை அரசியலில் பெண்களின் பங்கேற்பு 1928 ஆம் ஆண்டில் வுhந ர்iனெர ழுசபயn பத்திரிகை ஆசிரியர் குறிப்பிடும்போது ‘பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதானது,
எமது பண்பாடு, சாதி, சமயக் கோட்பாடுகளுக்கு முரணானது” என எழுதினார். இக்கூற்று சமூகத் தலைமைகள், பெண்களின் அரசியற் பங்கேற்புத் தொடர்பில் கொண்டிருந்த பிற்போக்குத்தனமான கருத்தியலை எடுத்துக் காட்டுகிறது. ர்iனெர ழுசபயn (இந்து சாதனம்) ஆனது ‘ஒரு பெண், தனது மேற்கத்தேய ஆணைக்குழு சிபார்சு செய்வது போல, ஆணும், பெண்ணும் சமத்துவமானவர்கள் அல்லர்” எனவும் கருத்து வெளியிட்டது.
இதற்கு எதிர்வினையாக ‘நாங்கள் ஆண்களுக்குச் சமமான உரிமை கொண்டவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு மட்டுமல்ல, நகரசபை மற்றும் சட்டவாக்க சபைகளிலும் நிற்கத் தகுதியானவர்கள்” என்பதைத் ‘தமிழ்மகள்” செய்தித்தாளின் ஆசிரியை மங்களம்மாள் எழுதினார்.
சுதேசிய மட்டத்தில் வீறார்ந்து எழுந்த ஆணாதிக்க எதிர்ப்பலைகளையும் பொருள் கொள்ளாமல், டொனமூர் ஆணைக்குழுவானது 1931 இல் 21 வயதுக்கு மேற்பட்ட இருபாலாருக்குமே வாக்குரிமை உண்டென்பதைச் சிபார்சு செய்தது. 1931 இல் சட்ட சபைத் தேர்தல் இடம் பெற்றது. அத்தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தவொரு பெண்ணும் முன்வரவில்லை. எனினும் அதன் பின்பாக இடம்பெற்ற இடைத் தேர்தலில் இரு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமையானது இலங்கையின் அரசியல் வரலாற்றில் பொறிக்கப்பட்ட சம்பவம் ஆகும்.
முதலாவது சட்டசபையின் பெண் பிரதிநிதியாக எட்லின் மொலமூரே பெருமை தேடிக் கொண்டார். 1932 இல் நேசம் சரவணமுத்து என்பவர் கொழும்பு தெற்கில் போட்டியிட்டு 13114 வாக்குகளைப் பெற்று குறிப்பிடத்தக்க வெற்றியைச் சுவீகரித்துக் கொண்டார். அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டு வரை தமிழ்ப் பெண்கள் எவரும் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1980 ஆம் ஆண்டைப் பொறுத்தளவில் பொத்துவில் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக ரங்கநாயகி பத்மநாதன் தனது சகோதரனின் இறப்பு நிமிர்த்தம் நியமிக்கப்பட்டார். 1989 இல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த புலேந்திரன் இறப்பின் காரணமாக அவரது மனைவி இராஜமனோகரி புலேந்திரன் வவுனியா மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு இவர் தெரிவு செய்யப்பட்டதுடன் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார், இவரே அமைச்சர் பதவி வகித்த முதலாவது தமிழ்ப்பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தங்கேஸ்வரியும் யாழ் மாவட்டத்திலிருந்து பத்மினி சிதம்பரநாதனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவாட்டத்திலிருந்து விஜயகலா மகேஸ்வரனும் தெரிவு செய்யப்பட்டார்.
1947 ஆம் ஆண்டு கொழும்பு மத்திய தொகுதியில் போட்டியிட்ட ஆயி~h ரவூப் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆயினும் தேர்தலில் போட்டியிட்ட முதலாவது முஸ்லீம் பெண் இவரே ஆவார். இவர் 1949 ஆம் ஆண்டு உள்@ராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு கொழும்பு மாநகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தவகையில் ஓர் அரசியல் பதவியைப் பெற்ற முதலாவது முஸ்லீம் பெண் இவரே ஆகும். 1999 ஆம் ஆண்டு உள்@ராட்சி சபைத் தேர்தலில் பிரதேச சபைக்காக அஞ்ஞான் உம்மா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்தில் இடம்பிடித்த முதலாவது முஸ்லீம் பெண் ஆவார். எம்.எச்.எம். அ~;ரப் அவர்களின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி பேரியல் அ~;ரப் பாராளுமன்ற அரசியலில் உள்நுழைந்தார். தேசிய ஐக்கியக் கூட்டணித் தலைவராகவும் செயற்பட்டமையால் அரசியற் கட்சியின் தலைமைப் பதவியை வகித்தவர் என்ற வகையில் பெருமைக்குரியவராவார். அத்துடன் அமைச்சராக பதவி வகித்த முதலாவது முஸ்லீம் பெண்ணும் இவரே ஆகும். ஆயினும் 2010 ஆம் ஆண்டு தேசிய ஐக்கிய கூட்டணிக் கட்சியைக் கலைத்ததுடன் அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலிலும் தோல்வியைத் தழுவிக் கொண்டார். இன்றைய பாரளுமன்றத்தில் முஸ்லீம் பெண் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டமையானது மிகவும் வருந்தத்தக்க ஓர் விடயமாகும்.
(Sources: www.Parliment.lk hand book of Parliament lady member’s
www.guide 2 women leaders.com/srilanka.)
சுதந்திரம் பெற்ற கையோடு சிங்களப் பெண்களின் அரசியற் பங்கேற்பில் ஒரு வேகமான அலை எழக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அது அவ்வாறு நிகழவில்லை. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட அமைச்சரவையில் விமலா கன்னங்கரா முதலான ஒரு சில பெண்களின் பங்கேற்பினையே எம்மால் அவதானிக்க முடிகின்றது. பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் மரணத்தைத் தொடர்ந்து ஸ்ரீமாவோ பாண்டாரநாயக்கா அரசியலுக்குள் நுழைந்தார். தென்னாசியாவில் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். அதேபோன்று சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா கணவனின் இறப்பின் பின் 1994 இல் அரசியலுக்குள் நுழைந்து ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார். பிரதமரும் ஜனாதிபதியும் பெண்களாக இருந்தபோதிலும் அரசியலிலும் கொள்ளை உருவாக்கத்திலும் பெண்களை வலுவூட்டுவதற்கும், பெண்கள் உரிமையை நிலைநாட்டுவதற்கும் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். இதன்படி 1947-1977 இற்கு இடைப்பட்ட காலத்துப் பொதுத் தேர்தலில் தமது பங்கேற்பை நல்கிய பெண்களின் எண்ணிக்கையும் கூட மிக வரையறுக்கப்பட்ட நிலையிலேயே பதிவாகியுள்ளது.
இவ்வகையில் சமசமாஜக்கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியுமே கணிசமான அளவில் பெண்களைத் தேர்தலில் நிறுத்த முற்பட்டன. எவ்வாறாயினும் பெண் வேட்பாளர்களின் விகிதாசாரம் ஆண் வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது, 1947 இல் 1.1 வீதமாகவும் 1970 இல் 12 வீதமாகவும் 1994 இல் 1.6 வீதமாகவும் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. 1989 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 52 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
பாராளுமன்ற அரசியல் நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு ஆணாதிக்கத்தின் இரும்புக் கோட்டையாகவே திகழ்ந்தது. எனினும் அதனை முறியடிக்கும் சவாலையுடைய பெண்களும் கருத்தியல்வாதிகளும் இன்று தோன்றி வருகின்றமையும் அவதானிக்கத்தக்கது. 1947 இல் 2.1 வீதப் பெண்களே பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்டுள்ளனர். 1977 இல் அவ் விகிதாசாரம் ஆனது 4.8 வீதமாகவும் 1989 – 1994 காலப்பகுதியில் அது 5.3 வீதமாகவும் காணப்பட்டு 2000ஆம் ஆண்டில் 4 வீதமாகவும் வீழ்ச்சியுற்றது. 2010 தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.7 வீதமாகவும் சற்று அதிகரித்துள்ளது. இவ்வாறே 1957 ஆம் ஆண்டிலிருந்தே பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டார்கள். 1994, 2000, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் சராசரி மூன்று பெண்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். 2010 ஆம் ஆண்டு புதிய அமைச்சரவையில் இருவர் மட்டுமே பெண் அமைச்சர்களாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது வெறும் புள்ளி விபரங்களுக்கு அப்பால் பாரம்பரியக் கருத்து நிலைகள், பெண்கல்வி, குடும்ப ஆதரவு சமூக மனோபாவ மாற்றம், பாதிப்பு, இரட்டைச் சுமையைத் தணித்தல், பாலியல்பு பற்றிய கண்ணோட்டத்தைச் சீர்திருத்தல் முதலான அம்சங்களையும் நாம் இவ்விடயம் சார்ந்து இணைத்துச் சிந்திக்க வேண்டும்.
இலங்கையின் சட்டசபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் (1947-2010) எவ்வாறு நிலவியது என்பதை பின்வரும் அட்டவணை காட்டும். அவ்வாறே இலங்கையின் அமைச்சரவை சார்ந்த பெண்களின் பிரதிநித்துவத்தை (1947-1994) பின்வரும் அட்டவணை காட்டி நிற்கும்.
பரிந்துரைகள்
(Sources: www.Parliment.lk hand book of Parliament lady member’s
www.guide 2 women leaders.com/srilanka.)
எனவே இதுவரை நாம் நோக்கியவற்றில் இருந்து பெண்களின் அரசியல் பங்கேற்ப்பு சார்ந்து பல்வேறு தடைகள், சவால்கள், காணப்பட்டாலும் மாறிவரும் காலதேச, வர்த்தமானங்களுக்கேற்ப புதிய வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. தென், தென்கிழக்காசிய நாடுகளில் எவ்வாறாயினும் அப்பிரதிபலிப்பு அத்துணை திருப்திகரமானதாகவோ அல்லது பாரிய முன்னேற்ற காரணமானதாகவோ இல்லை. எனவே நாம் பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கலாம்.
1. மகாண சபைகள், உள்@ராட்சி சபைகள், பாராளுமன்றம் ஆகியவற்றில் குறைந்த பட்சம் 30 வீத ஒதுக்கீடும், தேசியப்பட்டியல் நியமனத்தில் 50 வீதப் பெண்களும் காணப்படுதல் அவசியம்.
2. அதிகளவு பெண்கள் அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாகவும், அமைச்சுகளின் செயலாளர்களாகவும், நிறுவனங்களின் தலைவர்களாகவும் இருப்பதுடன் சட்டத்துறையிலும் அதிக பெண்கள் பணியாற்றல்.
3. 2003 இல் நிறுவப்பட்ட தேர்தல் சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் விடயங்களை நடைமுறைப்படுத்தல்
4. அரசியற் கட்சிகள் பெண் வேட்பாளர்களுக்கு அதிகளவான ஆதரவும் வளங்களும் வழங்குதல். அத்துடன் கட்சித்தலைமைத்துவம் கொள்கை வகுப்புக் குழுக்கள் என்பவற்றில் பெண்கள் பங்குபற்றுவதற்கு வாய்ப்பளித்தல்.
ளுழரசஉநள: றறற.Pயசடiஅநவெ.டம hயனெ டிழழம ழக Pயசடயைஅநவெ டயனல அநஅடிநசள றறற.பரனைந 2 றழஅநவெ டநயனநசள.உழஅஃளசடையமெய.
19
(ளுழரசஉநள: றறற.Pயசடiஅநவெ.டம hயனெ டிழழம ழக Pயசடயைஅநவெ டயனல அநஅடிநச’ள றறற.பரனைந 2 றழஅநn டநயனநசள.உழஅஃளசடையமெய.)
5. அரசியல் கட்சி சட்டங்கள் மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய சட்டங்கள் பெண்களுடைய பங்களிப்பினை குறைவுபடச் செய்யாமல் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.
6. அரசியற் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு சமமான இடம் வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்தல் அவசியம்
7. தேர்தலில் பெண்களின் பங்களிப்பினை உயர்த்தும் வகையில் தேர்தல் முறைகள் சட்டவாக்கம் என்பவற்றுக்கு அரசாங்கம், ஏனைய அமைப்புகளுக்கு சர்வதேச செயற்பாட்டாளர்கள் ஆலோசனை வழங்குதல்.
8. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம் கொண்டுள்ள பெண்களை இனம் கண்டு ஊக்கமளித்து உதவிகளைச் சிவில் சமூக அமைப்புகள் செய்வது சாலப் பொருத்தமாகும்.
9. பெண்களை மையப்படுத்திய வகையில் வாக்காளர், சிவில் கல்வி நிலையங்களை உருவாக்குதல்.
10. பெண் தலைமைத்துவம் தொடர்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளைத் தவிர்த்து ஆக்கத்திறன் கொண்ட நிகழ்ச்சிகளை ஊடகங்கள் வழங்குதல் வேண்டும். குறிப்பாகப் பெண்கள் அரசியற் பங்குபற்றுகையை ஊக்குவிக்கும் பல்வேறு வகையான செயற்றிட்டங்களை மக்களிடையே பகிர்ந்து கொள்ளுதல் அவசியமாகும்.
இலங்கையில் பெண்கள் அரசியல்வாதிகளாக பங்குபற்றுவது பொதுவாக கணவன் வழி, ஆண் உறவினர்களின் துணையுடன் இடம்பெறுவது அவர்களின் தலைமைத்துவத்தை, ஆளுமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது எனலாம். ஏனெனில் பெண் அரசியல்வாதிகளும் பெண்களின் அரசியல் பங்குபற்றுகையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து, அழுத்தி உரைத்து, நடைமுறைப்படுத்துவது மிகவும் குறைவு என்பதை அனுபவரீதியாக உணர்ந்து கொள்ள முடியும். ஆயினும் இன்று கண்டி பெண்கள் அபிவித்தி மன்றம், சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், விழுதுகள் மேம்பாட்டு மையம் முதலான பல அமைப்புகளின் பணி விதந்துரைக்கற்பாலது. இன்னும் அவை விஸ்தரிக்கப்பட்டு பெண்களின் அரசியற் பங்கேற்பினை உள்ளார்ந்த இயக்காற்றல் மிக்க சமூகப் பொறிமுறையும் (SocialMechanism) சமூகச் செயல்வாதமும் (Social activism)முன்னெடுக்கப்படும்போதே அரசியல் களத்திலான பால்நிலை சார்ந்த அசமத்துவம் இல்லாதொழிக்கப்படுவது சாத்தியமாகும்.
உசாத்துணைகள்
1. Kamalawathie, I.M. Women in parliamentary politics in Sri lanka,
in women at the cross Road: A Sri Lanka perspective adited by
srim kiribamune & vidyamali samarasinghe, kandy. ICES, 1990
2. Kiribamuna sirima (Ed) Women in Politics and srilanka: A
Comparative Perspective, kandy, ICES, 1999
3. Thiruchandran, selvy The Politics of Gender and Women’s
Agency Post colonial srilanka, Colombo, Women and Education
and Recearch centre 1997
4. Heywood Andrew, Political theory, 2005, Palgrave MacMillan,
New York
5. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு பெண், தொகுதி:- 06:இல03, 04.2001,
6. பெண்களின் கொள்கை விளக்க அறிக்கை, 2004 பெண்களின் அரசியல் வட்ட வெளியீடு, கொழும்பு
7. ஜெயவர்த்தனா, கி~hலினி பின்ரோ கொடிக்கார சூலனி, இலங்கையில் பெண்களும், ஆட்சிமுறையும் இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் கொழும்பு 2003
8. ஜெயவர்த்தனா குமாரி டாக்டர் மேரிரட்ணம், சமூகவிஞ்ஞானிகள் சங்கம். 1993 கொழும்பு.