சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமாவின் அ-புனைவு இது (Non- Fiction). தஸ்லிமா பல்வேறு காலகட்டங்களில் பெண்ணியம் சார்ந்து பல இதழ்களிலும், பத்திரிகைகளிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இதில் இவர் முன்வைக்கும் வாதம் பெண்களுக்கு நாடு என்பது இல்லை என்பதாகும். மனித பாலின அடையாளங்களை மீறிய சர்வதேச ஒருங்கிணைவு சாத்தியமில்லை தான். கிழக்கின் பெண்ணியம் மேற்கின் பெண்ணியத்தோடு பல விஷயங்களில் வேறுபடுகிறது. இரண்டும் வெவ்வேறு சூழல் சார்ந்து இயங்குபவை. சில நேரங்களில் உள்ளடகத்திலும், வடிவத்திலும் கூட அவை மாறுபடும். மேலும் தஸ்லிமா இந்நூலில் பெண்ணியம் சார்ந்த பல்வேறு நுண்கூறுகளை தெளிவாக ஆராய்ந்து முன்வைக்கிறார். பெண் உடல், வங்காளப்பெண், வங்காளப்பெண்ணின் கடந்த காலமும், நிகழ்காலமும்,அழகு, என் சொந்த அறை, ஆண்களுக்கு 364 நாள் பெண்ணிற்கு ஒரே ஒரு நாள், தற்கொலைப்பெண்கள், பாலியல் சித்திரவதை, யார் குற்றவாளி ஆணா அல்லது தந்தைவழி சமூகமா? என் தாயின் மொழி, அன்றாட வாழ்க்கையின் சிறிய விவரங்கள், பெண்ணியம்- தாராளம்- விடுதலை, பெண்= உடல் போன்ற பெண் குறித்த மரபான ஆணாதிக்க சமூகத்தின் மனோபாவத்தை தகர்க்கக்கூடிய பல உள்ளடக்கம் சார்ந்த ஆழமான கட்டுரைகள் இருக்கின்றன.
ஆசிரியர்: தஸ்லிமா நஸ்ரின்
வெளியீடு : VITASTA PUBLISHING PVT LTD
2/15 ANSARI ROAD
DARYAGANJ
NEW DELHI – 110 002
Thanks எச்.பீர் முஹம்மது