உரிமைகள் தேடிச் சென்ற உறவுகள் தொலைந்ததென்ன
உறவுகள் இல்லை என்றால் ஒரு உரிமையும் கிடைப்பதில்லை
ஒரு சோகம் வருகையில் கண்ணீர் பெருகி போனதே
அந்த உறவின் முகவரி இன்னும் அறியவில்லையே
இந்த வாழ்கையே அந்த உறவுதான்
அதை தேடி தேடி தேடும் உயிரும் பிரிகிறதே….
தமிழர்கள் என்றாலே உயிர் வாழ முடியாதா
உயிர் வாழும் என் இனத்தின் உரிமைகள் கிடையாதோ
காணிகள் போதுமே அட குடிசைகள் தேவையா
உறவுகள் போதுமே அதன் உண்மையும் தேவையா
வீட்டில் உறவு வந்துவிட்டால் கண்ணீர் தீர்ந்து விடும்
எம்மில் தோன்றும் கேள்வில்தான் உரிமைகள் கிடைக்கப்படும்
அட தேட போல நம் கூடல் கூட ஒரு பலமே…
கேள்வி ஒன்று இல்லாமல் உறவிங்கு கிடையாது….
கேள்வி என்ன இனியென்று தடுமாறி போகாதே…
அடிப்படை உரிமையே மிக அவசியமானது
உரிமைய பெறுவதே நம் இலக்குகள் ஆகுமே
தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் வலியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் துடிப்பிருக்கும்
அட தேடல் போல நம் கூடல் கூட ஒரு பலமே…
(தங்கள் உறவுகளை இழந்து தவிக்கும் பெண்கள் அழுகையில் இருந்து வரும் வார்த்தைகளைக் கொண்டு உருவ்வக்கப்பட்ட பாடல் இது )