அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா .

 தகவல்- கே.எஸ்.சுதாகரன் (அவுஸ்ரேலியா)

penss
  • அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும்   சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி. 2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சர்வதேச தமிழ்ச்சிறுகதை, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
  • .

சிறுகதை, கவிதைப் போட்டிகளுக்கான பொது விதிகள் –போட்டியில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் பங்குபற்றலாம்

– ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பற்றலாம். அத்துடன் எத்தனை ஆக்கங்களையும் அனுப்பலாம்.
–  ஆக்கங்கள் போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும். போட்டிக்கென அனுப்பப்படும் சிறுகதை,கவிதை மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இருப்பின் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
– ஆக்கங்கள் கையெழுத்தாகவோ அல்லது தட்டச்சாகவோ இருக்கலாம். ஆனால் தாளின் ஒரு பக்கத்தை மாத்திரம் உபயோகப்படுத்துதல் வேண்டும்.

 – போட்டிக்கு அனுப்பப்படும் ஆக்கம் அமைந்துள்ள தாளிலன்றிப் பிறிதொரு தாளில் போட்டியாளர் தனது பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை எழுதி இணைத்து அனுப்புதல் வேண்டும். சிறுகதை அல்லது கவிதை இடம்பெறும் எந்தத் தாளிலும் மேற்படி விபரங்கள்; இருத்தல் கூடாது.
– ஆக்கங்கள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது. போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – படைப்பை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்.
– போட்டியில் தேர்வு பெறும் ஆக்கமெதையும் சஞ்சிகையெதிலும் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திற்கு உரித்துண்டு.
– கவிதைகளின் பாடுபொருள் பின்வரும் துறைசார்ந்த விடயங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ உள்ளடக்கியனவாக இருத்தல் வேண்டும். குறித்த கவிதைக்கான பொருத்தமான தலைப்பைப் போட்டியாளரே கொடுத்தல் வேண்டும்.
உலகம் வெப்பமடைதல், உலகமயமாதல்
புலம்பெயர்ந்த தமிழர்களின் சமூக, பொருளாதார, வாழ்க்கை முறைகள்,
ஈழத்தமிழர் எதிர்காலம்,
தமிழ் மொழி, பண்பாடு, தமிழ் இலக்கியம்.

 இப்போட்டிகளுக்கான முடிவுத்திகதி: 30-03-2010 ஆக்கங்களைத் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்

மின்னஞ்சலூடாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். அனுப்பவேண்டிய முகவரி:

ATLAS                                  

 P. O . BOX 620 

 PRESTON 

VICTORIA  3072

  AUSTRALIA

மின்னஞ்சல்: 

atlas2001@live.com

–  போட்டி முடிவுகள் 2010 மே மாதம் இரண்டாவது வாரம் வெளியிடப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *