சை.கிங்ஸ்லி கோமஸ்
அது ஒரு அழகிய விடியல் மனதிற்கு இதமான காலைப் பொழுதின் அமைதியினை சிதைத்தது எதிர் வீடொன்றில் இருந்து வந்த கதறியழும் சத்தம். 09ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் தற்கொலை செய்துக் கொண்டான் என்ற செய்தியினையே காலை நேரத்து முதல் செய்தியாக காதுகளை வந்தடைந்தது. மலையக பிரதேசத்தில் அதிகமான நாட்களில் இது போன்ற செய்திகளை கேட்கும் துர்ப்பாக்கிய நிலைமை இன்றும் தொடர்ந்த வண்ணம் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்;. |
பத்திரிகைக்கு செய்திகளை அறிந்து கொள்வதற்காய் மலையகப் பிரதேசத்தின் எந்த வைத்திய சாலையின் வைத்திய அதிகாரியை தொடர்புக் கொண்டாலும் தற்கொலை முயற்சிகள் பற்றியும் மரணங்கள் பற்றியும் செய்திகள் கிடைக்காத நாட்கள் இல்லை என்றே கூற வேண்டும். எனவே மலையக பிரதேசத்தில் தற்கொலைகளையும் தற்கொலை முயற்சிகளையும்; தடுக்க முயற்சிகளை எடுக்க வேண்டியது காலத்தின் கடமையாகும்.
இது தொடர்பில்ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பொறுப்பு யாது?
சுகாதார கல்வி நிறுவனமும் ஊடகவியலாளர்களும் இணைந்து தற்கொலைத் தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும் போது கடைப் பிடிக்க வேண்டியசில வழிமுறைகளை அறிமுகப் படுத்தியுள்ளனர்.
1). தற்கொலை செய்துக் கொள்பவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பத்திரிகையாளர்கள் ஆழமான அறிவினை பெறல் வேண்டும்.
2). தற்கொலை தொடர்பான செய்தியினை பிரசுரம் செய்யும் போது மேலோட்டமான செய்திகளை வழங்காமல் மிகவும் ஆழமான கருத்தக்களோடு பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் முன்வைப்பது.
3). தற்கொலை செய்துக் கொள்பவர்களை அல்லது தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்களை செய்திகளில் முதன்மைப்படுத்தாமல்,அவர்களை அடையாளப்படுத்தாமல் செய்திகளை பிரசுரம் செய்வதில் கவனம் செலுத்ததல்.
4). தற்கொலை செய்துக் கொள்பவர்களின் குடும்பத்திற்கும் அவரின் சமுகத்திற்கும் ஏற்படும் இலப்புகள் தொடர்பாக உரையற்றுவதில் பத்திரிகைகள் அக்கறை செலுத்த வேண்டும்.என்பதுடன் இலங்கைப் பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளஇலங்கை செய்தி ஆசிரியர்களுக்கான தொழில் நடைமுறைக் கோவையில் தற்கொலை தொடர்பான செய்தியினை பிரசுரம் செய்யும் போது அதனைக் கவனமாக கையாளுவதுடன் எவ்வாறு தற்கொலை மேற் கொள்ளப் பட்டது என்பது தொடர்பான விபரங்களை பிரசுரித்தல் தவிர்க்கப் பட வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டடுள்ளது.இவற்றினை அவதானிக்கும் பொழுது மலையகம் மாத்திரம் அல்ல முழு இலங்கையும் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினைகளில் தற்கொலையும் பிரதான இடத்தினை வகிப்பது புலனாகின்றது.
கல்வி உயர்கல்வி நிறுவனங்களின் பொறுப்புக்கள்
ஆலோசனை வழிகாட்டல் Guidence and counceling) ஆரம்ப காலம் தொட்டே இந்த வழி முறைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டியது கட்டாயமாகும் இதற்கு ஆசிரியர்களை பயிற்றுவித்து இதற்கான விசேட பயிற்சிகளை வழங்குதல் அவசியமாகும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஆலோசனை வழிகாட்டல் பயிற்சியினை வழங்குதல் கட்டாயமாகும் விசேடமாக கல்வியியற் கல்லூரிகளிலும் ஆசிரிய வாண்மைத்துவப் பயிற்சியினை வழங்கும் நிறுவனங்களிலும்
ஆசிரியர் கலாசாலைகளிலும் தொழில்சார் வழிகாட்டல், உளவியல் சார்வழிகாட்டல், குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழிகாட்டல், கற்றல் வழிகாட்டல் என்பவற்றுடன் மனஉளைச்சல் ,மனஅழுத்தம் (*/stress)என்பவை தொடர்பான வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் எதிர்கால ஆசிரியர்கள் விசேடமாக தங்களின் ஆளுமையை விருத்தி செய்யக்கூடியதாய் இருக்கும்.இதில் விசேடமாக அன்மைக் காலத்தில் மலையகப் பிரதேசத்தில் ஆங்கங்கே ஒரு சில ஆசிரியர்கள் தற்கொலை செய்துக் கொண்டதனை சுட்டிக்காட்ட வேண்டியதும் கட்டாயமாகின்றது.குடும்பத் தகராருகளும் அதிக கடன் சுமைகளும் குடும்ப வன்முரைகளுமே ஆதிக காரணமாக காணப் படுவதனை காணலாம்.எனவே மலையகத்தில் காணப்படும் உயர்கல்வி நிறுவனங்கள் சுய ஆளுமை விருத்தி தொடர்பான கற்கைகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு ஆசிரியர் சமூகத்திற்கு பயிற்சிகளை வழங்க வேண’டியது கட்டாயமாகும்.இன்று சிலப் பதவி உயர்வுகளுக்காகவும்,சிறு சிறு சலுகைக்காகவும் அரசியல் வாதிகளின் கால்களின் கீழ் வீழ்ந்து மற்றவர்கள்பற்றி புகார் செய்தும்,சாதாரன கல்விக்காரியாலய காரியாலய உதவியாளர்களிடம் கூட கைக்கட்டி நின்று தங்களின் பதவியையும் சமுக அந்தஸ்தினையும் அடகு வைத்து அடிமை தொழில் செய்துக் கொண்டிருக்கும் மலையகத்தின் கற்றவர்கள் என்று கூறிக் கொள்பவர்களின் செயல்பாடுகள் ஆளுமை குறைப்பாட்டினை எடுத்தியம்புவதனை அவதானிக்கலாம்.மலையக உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து பயிற்சி பெற்று வரும் ஆசிரியர்கள் மலையக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்வதற்கு ஆசிரியர்களின் ஆளுமை வளர்க்கப் படுவது காலத்தின் கட்டாயமாகும்;.
பாடசாலைகளின் பொறுப்புக்கள்
இலங்கையின் தற்கால இளைஞர் யுவதிகள் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு வாழ்க்கையின் விளிம்பு நிலைக்கு தள்ளப் படுவதற்கு சமூக பொருளாதார அரசியல் கலாசார நிலைகளும் காரணம் என்ற போதும் இந்த இளைஞர் யுவதிகள் சமுகத்தில் இருந்து தங்களை நோக்கி தொடுக்கப் படும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் தைரியத்தினை இழக்கும் அந்த நொடி அவர்களை தற்கொலையின் பக்கம் தள்ளிவிடுவது குறிப்பிடத் தக்கது.இந்த நிலைமையை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுவது பாடசாலைகளுக்கு என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது .
கட்டிளமைப் பருவம் ,இளமைப் பருவம் பாடசாலை சூழல் என்பவற்றிற்கு இடையில் உள்ள தொடர்பினை அவதானிக்கும் பொழுது இலங்கையில் பாடசாலைக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 90 வீதத்திற்கும் அதிகமாக காணப் படுவதனால் மாணவர்கள் தங்களின் வாழ்க்கையில் அதிக காலத்தினைப் பாடசாலைகளில் கழிப்பதனைக் காணலாம் .பெற்றோர்கள் இன்றைய பொருள் தேடல் எனும் மகா யுத்தத்தில் போராடிக் கொண்டிருப்பதனால் மாணவர்கள் பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்திருப்பதுடன் ஆசிரியர்களின் அரவணைப்பில் அதிக காலம் கழிப்பது குறிப்பிடத் தக்கது. இலங்கையின் மாணவர்கள் சாதாரணமாக 08 வருடங்களுக்க அதிகமான காலம் பாடசாலைகளில் இருக்கின்றனர். மாணவர்களின் சமுக உளவியல் பொருளாதார பண்பாட்டு நலன்புரி சார்ந்த அனைத்து விடயங்களிலும் ஆசிரியர்களுக்கு பூரண கட்டுப்பாட்டினையோ ஆதிக்கத்தினையோ செலுத்துவதற்கு பாடசாலை யில் இயங்கும் காலம் ஒத்துழைப்பதாக அமையாது ஆனாலும் இன்றைய ஆசிரியர்களில் அநேகமானவர்கள் தங்களின் மாணவர்கள் மீது அதிக அக்கரை செலுத்தி வருவதனைக் காணலாம் .
சாதாரணமாக அதிபர் ஆசிரியர்களுக்கு தனது பாடசாலையின் மாணவ மாணவிகளின் அசாதாரண செயல்ப்பாடுகள் தொடர்பாக அவதானிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகும் இவ்வாறானமாணவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டியது கட்டாயமாகும்;. ஏனெனில் தற்கொலை என்னும் நிலைமைக்கு தள்ளப்படும் ஒருவரைப் பாதிக்கும் புறக் காரணிகல் காரணத்தினால் குறிப்பிட்ட நபரின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று செறோன் செய்லர் என்னும்ஆங்கில எழுத்தாளர் தனது வட் யுவர் பொடி சேய்ஸ்(SHARON SAYLER’S WHAT YOUR BODY SAYS) ) என்னும் நூலில் கூறியுளள்ளார்.
மலையக பாடசாலைகளின் நிலைமையினை அவதானிக்கும் போது நாட்டின் ஏனைய பாடசாலைகளின் ஆளுமை விருத்தியையும்சமநிலை ஆளுமையையும் ஏற்படுத்துவதில் மந்தமான நிலைமையினை காணலாம் மலையகப் பிரதேசங்களின் அதிகமான பாடசாலைகளில் வருடாந்த விளையாட்டுப் போடடிஉட்பட இணைப் பாட விதான செயற்பாடுகளை முறையாக நடத்தாத நிலைமை மாணவர்களின் ஆளுமையின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என்றால் வியப்பில்லை.தமிழ் தினப் போட்டிகளில ; கூட இவ்விருத்தி சரியான முறையில் வளர்க்கப் படுவது தொடர்பில் அவதானம் செலுத்துவது குறைவு.
இதுமாத்திரம் அன்றி மதநிறுவனங்கள் சமூக நிறுவனங்கள் அரசியல் தலைமைகள் பொலிஸ் காவல் துறையினர் சுகாதார நிறுவனங்கள் உட்பட மக்கள் சார் அமைப்புகளும் மனித ஆளுமையினை நேர்த்தியாக கட்டி எழுப்புவதில் அதிகஅக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகும்.
நவீன கற்றலில ;மாதிரிகளை உள்வாங்கும் முறையானது அடையாளப் படுத்தப் படுத்தப் பட்டுள்ளது இவ்வாரானமாதிரிகளினூடாகவே ஆளுமைக் கட்டி எழுப்பப் பட வேண்டும் எனவே மலையக எதிர் கால சமுகம் ஆளுமை மிக்க சமுகமாக மாற வேண்டும் எனின் சரியான மாதிரிகளை தங்களின் பிள்ளைகளுக்கு அடையாலம் காடட் வேண்டியது பெற்றோரின் ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.பெற்றோர்கள் போற்றும் வாழ்த்தும் வளர்க்கும் தலைமைகளின் மாதிரிகளே பிள்ளைகளின் இதயங்களில் பதியும் மாதிரிகளாகும் ஆசிரியர்கள் உததாரணப் புருசர்களாய் யார் யாரைப் பற்றி வகுப்பறைகளில் எடுத்தியம்புகின்றார்களோ?அவர்கள் மாணாக்கரின் மானசீக மாதிரிகளாக காணப்படுவார்கள் பாரதியினதும் பாரதி தாசனதும் விழாக்கள் தொலைந்து போய் சுவர்களில் கடைசியாக தொங்கிய பாரதியினதும் பாரதி தாசனதும் விகோநந்தரினதும் படங்கள் காணாமல் போய்அந்த இடங்களை ஆக்கிரமித்திருக்கும் அரசியல் வாதிகளின் முகங்கள் எதிர்கால மலையக சமூகத்திற்கு எதை செய்யப் போகின்றது.