பெண் எழுத்துக்களில் பின் நவீனத்துவச் சொல்லாடல்

 முனைவர். ஆர்.மல்லிகா(எ)அரங்கமல்லிகா  –சென்னை-8

தனித்துவதோடு வாழ இயலும் எனினும் சமூகத்தின் பிடிக்குள் சிக்குண்டு, ஓர் ஆணின் முயக்கத்தில் தன்னை மீறிய ,தனக்கு உடன்பாடில்லாத தன் ஆளுமையைச்  சிதைக்கிற  சூழலை விரும்பியும் விரும்பாமலும் ஏற்றுக்கொள்ளும் அவலத்தைப்  பின் நவீனத்துவச் சொல்லாடல் எனக்கொள்ளலாம்.

தமிழ்க்கவிதை மரபில் அகம்,புறம் என்ற வெளிகல் காதலும், வீரமும் தொடர்ந்து மனிதப்பண்பாட்டு அடையாளமாக இனங்கண்டு கொள்ளப்படும் சூழலில் விடுதலையை மையமிட்டு எழுந்த மேலைநாட்டு இனக்கலவரங்கள் ,அதன் தாக்கத்தில் பேசப்படும் பிரெஞ்சு புரட்சி இலக்கியத்தின் வடிவத்தை மாற்றியிருக்கிறது. தொடர்ந்து இந்த்திய விடுதலைப்போராட்ட  வரலாறும் பாரதி போன்றவர்களின் எழுத்தாளுமையில் அடிமைஒழிப்பும்  விடுதலை வேட்கையும் மையம் கொண்டது.

                 தமிழ்க்கவிதை தளத்தில்தொல்காப்பியத்தின் தாக்கம் விரிந்து ,   பிச்சமூர்த்தி வழியாக நவீனத்துவச்சிந்தனை ஒரு பாய்ச்சலை  ஏற்படுத்தியது.இது கவிதையின் கட்டமைப்பில் பொது புத்தியிலிருந்து மாற்றி பெண்ணிய, தலித்தியக்கோட்பாடுகளை உள்வாங்கி புதியக் கருத்தியலை  அறிமுகப்படுத்துகிறது. இதில் மொழி முதன்மைப்பெறுகிறது.மொழி சங்க இலக்கியமொழிப்புனைவிலிருந்து மாறி ஒவ்வொரு கவிஞரின் ஆளுமையுடனும் புறச்சூழலுடனும் இணைந்து பல்வேறுபட்ட வாசிப்பனுவத்தை வழங்குகிறது.புனிதம் என்ற மொன்னையானவாதம்,பக்தி இலக்கியத்தில் மறைக்கப்பட்ட காமம் எல்லாம்புது பாய்ச்சலாகப்பீறிடுகிறது.

            சமூக அடிமைத்தனம் ,பெண் உடல் இரண்டும் மையக்கருவாகிறது.கொழுநன் தொழுதெழுவாள் என்ற மாயைஉடைபடுகிறது.குடும்பம் சிதைகிறது.பெண் உடல் விசாரணை நிறைந்ததாகி வேதப்பண்பு கட்டுடைகிறது.தேட்டு கவிதைக்கு உயிரகிறது.அதிலும் குறிப்பாக தலித் மொழியும் ,தலித் பெண்மொழியும்

                            2

நவீனத்துவ எழுத்துக்களின் உச்சத்தைத் தொட்டுள்ளன.தொன்மங்களைச் சிதைக்க்க் கூடியது சுருக்கமாக ,அதிகாரக்குவிப்பைப் பரவலாக்குகிற ,அடிமைசிந்தனையை எதிர்த்துக் கலகம் செய்கிற ,கட்டுஒப்பாடுகள், புனிதங்கள் என்பனவற்றைக் கட்டுடைக்கின்ற எழுத்துக்களாஇப் பெண்கவ்ங்ஞர்கள் அதிகமாக ப் பயன்படுத்திஉள்ளனர்.பெண் உடலை விவாதப்படுத்தியக்கவிஞர்கள்  சுய இன்பமும், பலர்புணர்ச்சியும்  விவாத்த்தின் மையமாகும்.காயடிக்கப்பட்ட புனிதங்களைக் கிளறும் இத்தகைய சிந்தனையைப் பின் நவீனத்துவத்தின் சாரம் எனலாம்.

        

பொதுவாக பெண் எழுத்துக்களில் சங்க்காஅல எழுத்துக்கள் தொடங்கி நவீனத்துவ எழுத்துக்கள்வரை பெண்ணின் இருத்தல் காதல்,காம்ம் ,இரவில் உடல் இசைதல் ட்,தனிமைப்புலம்பல்,இறைக்காதல் எனப்பரவலாக பெண்ணின் அகமனம் பேசப்பட்டிருக்கிறது. இவை பின் நவீனத்துவக் கோட்பாட்டின் சாரத்தைக் கொண்டிருந்தாலும் கலைக்கான சூழலை நமக்கானதாக எடுத்துக்கொள்ளவும் , வாழ்க்கைச்  சூழலும் பின் புலமும்  இலக்கியத்தைக்கட்டமைக்கவும்  அந்தந்தக் காலக் கட்டத்திற்கேற்ப கலை  உருவாகும். பெண் ஆண் சார்ந்தும் ஆண் சாராத இறையிலியாகவும்,கொற்றவையாகவுன்ம்  சுழலில், நவீனப்பெண் கவிஞர்கள் அவரவர் சூழலில் இருந்து கவிதை பட்த்திருக்கிறார்கள் என்பதைக் கடந்த இருபது ஆண்கவிதை ப்படைத் திருக்கிறார்கள் என்பதைகடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்துள்ள எழுத்துக்களில் அவதானிக்கலாம். இக்காலக் கட்ட்த்தில்  போர்சூழல் பெண் கவிஞர்களின் பாடுபொருளின் முக்கியத்துவம் பெறுகின்றது. உலகளாவிய  இனப்போராட்டம்  இந்தியாவில் குறிப்பாக சாதியப் போராட்டம் கவிதையின் ஊடகமாக இருக்கிறது.புறநானூற்றில் போருக்கு மகனையும்  அனுப்பும் தாய் உணர்வுவீரம் நிறைந்த்தாக்க் காட்டப்பட்டுள்ளது. 

     ”புலிபோகிய  கல்லளைப்  போல

    ஈன்ற வயிறு இதுவே

                             3

தோன்றுவன் மாதே போர்க்களத்தானே ”என்ற பெருமிதம் இருபதாம் நூற்றாண்டு போர்சூழலில் இல்லை.இழப்பு கவிதையின் பெருவெளியாகீருக்கிறது.காதல் செய்ய ,கலவிகொள்ள ஆண் இருந்தால்பெண் இல்லை. பெண்ணிருந்தால் ஆண் இல்லை. மரணம் , துப்பாக்கி ஒலி, புகை நிறைந்த மயானக்காடு கவிதைகளைப் படிப்பவர்களை மூச்சுத் திணறவைக்கிறது.மயூ கவிதை வெறுமையைப் பதிவு செய்திருப்பதைக் கீழே காணலாம்.

  நீர்த்தப்பால் திரிவதப்ப

பகலிலிருந்து பிரிந்த இரவில் திட்டுத் திட்டாய் விரவிக்கிடக்கிறது .பகல்

பார்வைக்குப் புலப் படா நீள்கால்கள்

ஆழ ஊன்றுகின்றன.

அத்தனி தீவுகளில்

அத்தனி தீவுகளில் அலைகளற்ற

கடலாய் சூழ்கிறது இருட்டு.

பேசாது போன அடர்ந்த சொற்களைக் கூட்டி அள்ளி கவிதை புனைய முயற்சிக்கிறேன்.

நிரப்ப்படாமல் கிடக்கிறது தாழ்

கனத்த மயானத்தில்ன் அமைதியை

விரல்களை  விட்டுத் துழாவி பின்

பாதை செய்கிறேனெனக்கான செபம்

சவக்காலையில் ஒலிக்க ]

பரிசுத்த ஆவியின்

                         4

பாதி அப்பம்

அடிநாக்கில் இனிக்கிறது

சாம்பல் கோடிட்ட

நெற்றியில்கூட்டி எலும்பு ஒன்றின் தூசு

நாசியில் நிறையும்மரணவாசனை,,,,,யுகமாயினி,

      தனிதீவு, நிரப்ப்ப்படாமல் கிடக்கிறது தாழ், எலும்பு ஒன்றின் தூது,நசியில் நிறையும் மரணவாசனை யாவும் ஈழத்து மண்ணின் போராட்ட்த்தையும், வாழ்விழந்த வரலாற்றையும் பன்னாட்டு எழுத்துக்களாக  பரவிஉள்ளன.

   கனடாவிலிருந்து வெளிவரும் கனடா கவிதி தொகுப்பில் இடம் பெறும் மற்றொரு கவிதை

ஆஸ்பத்திரில் அலையும்

அமானுஷ்ய இறுக்கத்தைச் சொல்கின்றன

என் வாழ்நாளில் ஒரு எரும்பைக்

கொல்லாது விட்டிருக்கிறேன்

சொர்க்கத்தின் பொருட்டு

என்ன இருந்தும் என்ன

நேற்றைய இரவின் சவப்பெட்டி

ஆணி இறுக்கமாயில்லை

தூங்குவதுபோல சாக்காடு(கனடா கலை இலக்கிய மலர்,

                    கனடா பதிப்பு)

         5

நார்வே கவிதா

என்னால் புரிந்து கொள்ள

முடியவில்லை எங்களை

எம்மண்ணில்

ஆலையாய் இருப்பதைவிட

பிறர் பூங்காவில் தாவரமாய்

 இருப்பதையே விரும்புகிறோம்

                       யுகமாயினி,ஏப்ரல், 2008,ப.87

 

பறந்துபட்ட     வாழ்க்கையைக் கொண்டவர்களாக வாழும் ஈழத்தமிழ் மக்களின் யதார்தத்தை இது பேசுகிறது.

     ”இருக்கப்பிரியப்படும் இடம்” என்ற தலைப்பில் தீபச்செல்வன் எழுதிய கவிதை,

குளத்தின் மேலாக வட்டமிடும் பறவைகள் இல்லை

துப்பாக்கிகள் தொங்கும் மருத மரங்களின் கீழாக

பேசிக்கொண்டிருக்க யாருமில்லை

 ஆஷா! நாங்கள் எங்கு செல்வோம்?

இரவில் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தபடி

பேசிக்கொண்டு நடந்து வரும்பொழுது

 நான் துப்பாக்கிகளில் மோதுண்டேன்

 ஒரு தெரு எப்படியிருக்கும்?

                   6

 

கால்கள் அறியாத தெருக்களில் ஏதோவிளாஇய

அழிவின் நிழலில்

அழகிய தோட்டத்தைக் காண்பீர்கள் என்று

நாம் வாழும் காலத்தை சபிப்பது யார்?

உண்ணிப்பூக்கள் பூத்திருக்கும் ஈச்சைகளுக்குள் புணரும்

கைகளுக்குள் சிக்காத காணாங்கோழிகள்

பற்றைகளுக்குள் மிரண்டபடி பார்க்க

நீயும் நானும் ஆற்றங்கரையிலிருப்போமா?

ஆஷா இரத்தம்பட்டு வறண்ட கன்னங்களுக்கு

இனிக்கும் உனது முத்தம் வேண்டும்

என்னோடு நீயும் இருக்கபிரியப்படும் இடத்தை

 நன் எப்படி இழப்பேன்?

முத்தங்கள் பூத்த கொடிகள் படரும்

நாவல் மரத்தில் நீ பழங்களைப் பறிப்பாய்

நான் கிளைகளை வளைப்பேன்

பழங்களைத் தின்னப் பறவைகள் திரும்பும்

என்ற போரின் இழப்பும் மீண்டும் மரங்களும் ,பழங்களும் பறவைகளும், மனிதர்களும் இழந்த நாட்டைத் திரும்பப் பெற்று திரும்புவர் எனபதற்கான நம்பிக்கையைப் பேசும் கவிதைகளும் எழுதப்படுகின்றன.

   7

 

இன்னொரு கவிதையில் வாழ்வின் ஏமாற்றத்தைக்காணமுடிகிறது.

       “ என் கிராமத்தில் மன்னனாய் இருப்பதைவிட      

       அந்நிய ப்பட்டணத்தில் பிச்சையெடுப்பதையும்

       நேசிக்கிறோம்”

 ரேவதி இளாஇயபாரதி,

“மதிபீடுகளற்ற மனத்தின் பயணம்” என்ற கவிதையில்

        ”இழப்புகள் எதுவும்

        பெரிதல்ல

       இதயம் பழகியதுதான்”பூமிக்கு வந்தபோதே

சாமியான அம்மாவை

இவள்தான் அவளென

அடையாளாம் காட்ட

ஒரு புகைப்படம் எடுத்து வத்திராதாப்பாவை கிழிட்சல் உடையில் கரிக்கட்டை

பிடிது

சுவற்றில் கிறுக்குவது கண்டு

உணவு உடை படிப்பிற்கேன

பணம் கொடுத்து

விடுதி ஒன்றில் சேர்த்துவிட்டுச் சென்ற

                    8

 

அந்த அயல்தேச மனிதரை

 

கல்லூரி போட்டிகளில் வெல்லும் பரிசுகளைக் கண்டு காதலிப்பதாக்க் கூறி

கடிதம் கொடுத்தனுப்பி

முகம் பார்த்துச் செல்ல

முந்திக் கொண்டு ஓடி முச்சந்தியில் அடிப்பட்டு

அடையாளமின்றி இறந்துபோனவளை

 

உயிரின் மடல்களுக்குள்

நார் உரிந்தே

நான் கோர்த்த மாலைக்காகவே

என்னளவுக்கும் குறுகி

குள்ளமாகியே சூடிக்கொள்ளத் தலை சரிக்கிறாயோ

நம் செல்லக்குழந்தையாகியே!

என்ற மனப்பதிவு கூர்ந்து கவனிக்கத்தக்கது. அன்புக்காக ஏங்கும் உள்ளமும், உறவுகளின் பிரிவும் மனதைக்கனக்கச்செய்கின்றன.

மண்ணின் மணமிழந்த மண்வாசனை தேடும் மற்றொறுரு கவிதை

     ”நாற்றுமுதிர்ந்து நாள்பட்டு

     நாடுமாற்றி நடவுசெய்துட்தாலும்

    வேற்றுமண் பதிந்து வேர்பிடித்து

             9

 

 விளைச்சலிலே சாதனைப்படைக்கும்

    ஆணிவேர் தொலைத்த

   அவசிய வாழ்வின்

   அதிசயரகம் நாங்கள்”  என்றமலர்விழியின் (சிங்கப்பூர்), யுகமாயினி, அக்டோபர்.2007, ப.64 கவிதையில் மண்ணின் வாசனை இழந்த சோகம் தெறிக்கிறது.

மாதுமை என்ற 17 வயது பெண்

    சரியாக ஞாபகம் இல்லாத ஒரு பொழுதில்

   சேலைகட்டிய கம்பமென உட்கார்ந்திருக்கிறேன்

   விரும்பியும் பல நேரங்களில் விரும்பாமலும்

   விலகிக் கொள்கிறது முந்தானை.

   என் முலைகளின்  கண்ணீரில் சிக்கியவிதைகள்

   எப்போதோ துளிர்விடத் தொடங்கியிருந்தன.

   காயம்பட்ட என் விளைநிலத்தில்தான்

   தொடர்ந்த பயிரிடலும் தொடர்ந்த அறுவடையும்

   எப்போதும் சீராக இருந்ததில்லை

   என் மூச்சும் என் சரீரமும்

   வாழ்க்கைப்பட்ட  பின்னால்

   தூக்கி எரிந்துவிட்டு

   ஒடிபோய் மழையில் நனைந்தபடி

              10

 

 மணல் வீடு கட்ட

   வாய்ப்புகள் இருந்தும்

   சேலைகட்டிய கம்பமென உட்கார்ந்திருக்கிறேன்

   இயலாமையால் அல்ல! (யுகமாயினி,அக்டோபர்,2007,ப.98.)

 தனித்துவதோடு வாழ இயலும் எனினும் சமூகத்தின் பிடிக்குள் சிக்குண்டு, ஓர் ஆணின் முயக்கத்தில் தன்னை மீறிய ,தனக்கு உடன்பாடில்லாத தன் ஆளுமையைச்  சிதைக்கிற  சூழலை விரும்பியும் விரும்பாமலும் ஏற்றுக்கொள்ளும் அவலத்தைப்  பின் நவீனத்துவச் சொல்லாடல் எனக்கொள்ளலாம்.

    பெண்ணிமும் , தலித்தியமும் தமிழ்க்கவிதையியலைக்  கட்டுடைப்புச் செய்துள்ளன.நவீனத்துவத்தின் சிதறல்களால்தான்  அடிமைத் தளைநீக்கமும், விடுதலைவெளிப்பாடும்,உடலைக் கொண்டாடுதல், உடல்சார்ந்த சொல்லாடல்களைப்  புதுப்பித்தல் முதலியன சாத்தியமாயின என்பதை இக்கட்டுரையால் அறிய இயலும். 

   சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு மகனைப் பெற்று போருக்கு அனுப்பி வீரப்புண் பட்டு இறந்து போன மகனைப் பெருமையோடு பதிவு செய்திருப்பதைப் பின்நவீனத்துவச் சொல்லாடல் கலைத்துப் போடுகிறது.தாய், மகன் இறப்பு, கணவன்,மனைவி இறப்பு எல்லாம்  பெண்ணிடம் போர் வீரமரணம்   எனச் சொல்லிய சூழலை   மாற்றி இக்கட்டுரை இழப்பின்  யதார்த்தம் மிக கொடூரமானது: பெண்ணெழுத்தில் இழப்பு தலை முறைசோகம் எனப் பதிவு செய்கிறது.. பெண்ணை எழுதுவதன் மூலம் பெண் விளிம்புநிலையில் நிற்கிறாள் என உணரமுடிகிறது. எனவே மாற்று அழகியலையும் மனுஷி என்ற புரிதலையும் விரிவுபடுத்தும் எழுதுக்களைப் பெண்கள் தரவேண்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *