சந்திரலேகா கிங்ஸ்லி (இலங்கை)
கடந்த முப்பது வருடங்களாய்
கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாய்
இன்னும்
காணாமல் போனோரை
தேடிக்கொண்டிருக்கிறோம்.
++-
ஏன் காணாமல் போனார்கள்
எப்படி காணாமல் போனார்கள்
எதைப் பற்றியாவது
அதிகமாய் பேசினார்களா?
அல்லது பேசாமலே இருந்தார்களா?
அதை பற்றி பேசினார்களா?
இதை பற்றி விவாதித்தார்களா?
++-
எப்படி காணாமல் போனார்கள்?
நின்ற இடத்தில் நிமிர முடியாமல்
சுட்டுக் கொன்றனரா?
அம்மணமாய் கட்டிப்போட்டு
அன்னியப்படுத்தி
துண்டு துண்டாய் சிதைத்து
துவண்டு விழ விழ
செத்துப் போனானோ?
++-
கண்களை இறுகக்கட்டி
கைகளை பின்னுக்கு கட்டி
தெரியாத தெருவுக்கு கூட்டிச் சென்று
சப்பாத்துக் காலால் பின்புறம் எத்தி
தலையில் மூளை சிதறி விழ
துப்பாக்கி இயக்கி
தலைகள்; சிதறி விழ செத்துப்போய்
சேத்து மண்ணில் குழி தோண்டி
அங்குமிங்குமாய்
குப்பைக் கொட்டுவதைப் போல்
எரித்தும் ஃ சிதைத்தும் புதைக்கப்பட்டனரா?
அவர்கள் காணாமல் போனார்களா?
++-
ஆழக்குழி வெட்டி
அள்ளி வந்து கண்கள் கட்டி
அத்தனை பேருக்கும் மொத்தமாய் குழிவெட்டி
மூச்சடக்கி விட்டனரா?
++-
குற்றுயிராய்இ கொலையுயிராய்
ஒட்டு மொத்தமாய் பெற்றோல் ஊற்றி
கொழுத்திக் கொன்றனரா?
++-
எங்கள் நாட்டில் பிறந்து
எங்களை எதிர்ப்பாயா?
கோபத்துடன் ஓங்கிக் குத்து
புpறந்த மேனியை வெளியரங்கமாக்கி
மெலிதான அந்தரங்களில்
சப்பாத்துக் கால்களை அழுத்தி
எச்சிலை துப்பி………..
பலசாலி பலமில்லாதவன்
எல்லோரும் விரும்பிய படி
காரி துப்பி……துப்பி
மூத்திரம் வருமாயின்
அவன்ஃ அவள் மூஞ்சில் பெய்து
ஆத்திரம் தீருமட்டும்
அடித்து சிதைத்து
எத்தி – எரித்துப் போட்டானோ?
காணாமல் போனோரை
படமெடுத்து காட்டி
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோமே…
காணாமல் போனோரை
இனியும் தேடாதீர்கள்
வரக்கூடிய சாத்தியங்கள்
வரலாறுகளில் இல்லை
இது தர்ம தேசமாம்
மிக உயர்ந்த பௌத்த தர்ம தேசமாம்
இதன்
சரித்திர எழுத்துக்களில் கூட
இரத்தக் கரைகளில்லையாம்!
எங்களையா நம்பச் சொல்கிறார்கள்?
இந்தப் பேரினவாதிகள்?
++-
மனசு வலிக்கிறது! 🙁