ரிசானாவுக்கு நடந்த அநீதியை கேள்வி கேட்காமல் இருப்பது முட்டாள்தனம் – சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர்-(நன்றி பி.பி.சி.)
சகோதரி ரிசானாவுக்கு கொடுக்கப்பட மரண தண்டனையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் வீடியோ இணைப்பு ஊடறு ஆர் குழு’
அதேவேளை, ரிசானா விவகாரத்தில் ஆரம்பம் முதலே இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தின் பங்களிப்பு போதுமானதாக இருக்கவில்லை என்று இலங்கையின் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர் கூறுகிறார்.
முஸ்லிம்களின் பங்களிப்பு போதாது
மூதூர் மக்கள் சில முயற்சிகளை செய்தாலும் அவர்களால் உயர் மட்டம் வரை செல்ல முடியவில்லை என்றும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இலங்கை அரசாங்கமும் இந்த விடயத்தில் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இந்த விவகாரத்தில் எதுவும் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நடக்கவில்லை என்றும், அந்தச் சட்டத்தை சரியாக புரிந்துகொள்ளாமல், அந்தச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக ரிசானாவுக்கு நடந்த அநீதியை கேள்வி கேட்காமல் இருப்பது முட்டாள்தனம் என்றும் அவர் கூறுகிறார்.
கொலைக்கு கொலை என்பதேஷரியா சவ்தி தெரிந்தே இது போன்ற கொடுமைகளை அரங்கேற்றி வருகிறது மதத்தை காப்பாற்ற நினைப்பதே முட்டாள் தனம்