சந்தியா (யாழ்ப்பாணம்)
நாளுக்கு நாள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சிறுமிகள், மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. நான்கு வயதுச் சிறுமியைக் கூட விட்டுவைக்காத வெறிபிடித்த ஆண்களின் வக்கிரத்திற்கு என்ன தண்டனை கொடுக்காலம் என்று சட்டத்தைக் கேட்பதைவிட அந்த மக்களே அவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம். என்பது எமது கருத்து…
மண்டைதீவில் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை எதிர்த்து குற்றவாளிகளைத் தண்டிக்கவும் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் எனக்கோரியும் பொது மக்களால் இன்று அமைதிப்பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இப்பேரணியை றோஜாவனம் என்ற சிறுவர்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. மண்டைதீவு மக்கள் மற்றும் உப பிரதேசபை உத்தியாகத்தர்கள், தீவக கல்விப்பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் உத்தியோகத்தர்கள், மற்றும் சுகாதார உத்தியாகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் இவ் ஊhவலத்தில் கலந்து கொண்டோர் இச்சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படட்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஆத்துடன் பொலிஸ் நிலையத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கபட்டது.