சர்மிதா (நோர்வே)
‘இனி அவன்’ திரைப்படத்தின் இயக்குனர் அசோகாஹண்டகம Emirates247.com கருத்து தெரிவிக்கையில் “நான் இத்திரைப்படத்தின் ஊடாக இதனைப் பார்வையிடும் ‘இனி அவன்’ ஊடாக என் இன மக்களுக்கு கருத்து ஒன்றைக் கூற விரும்புகிறேன் – . |
அசோக ஹண்டகாமவால் இயக்கி வெளியிடப்பட்டுள்ள இனி அவன் திரைப்படம் இலங்கையில் வெளியிடப்படுவதற்கு முன்னர் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இலங்கை தவிர ஏனைய உலக நாடுகளில் வெளியிடப்பட்டது.
Asoka Handagama
இனி அவன்’ திரைப்படத்தின் இயக்குனர் அசோகா ஹண்டகம Emirates247.com கருத்து தெரிவிக்கையில் “நான் இத்திரைப்படத்தின் ஊடாக இதனைப் பார்வையிடும் சிங்கள மக்களுக்கு செய்தி ஒன்றைக் கூற விரும்புகிறேன். ‘முன்னாள் புலி உறுப்பினர்கள் எப்போதும் ‘கூடாதவனாக’ சித்தரிக்கப்படுகிறான். இவர்கள் சமூகத்தில் எதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறார்கள். அதனாலேயே இப்படத்தை சவாலாகக் கொண்டு தயாரித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் டுபாய், ரொரன்றோ மற்றும் எடின்பெறோ போன்ற இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் விருதுகளைப் பெற்றுக்கொண்டதுடன் இத்திரப்படம் பற்றிய நேரடியான கலந்துரையாடல்களும் இடம்பெற்றது அது எனக்கு மிகவும் காத்தரமான விமர்சனங்களை தந்துள்ளது. ஆனாலும் இலங்கையில் எனது சொந்த மக்களிடம் இருந்து வரும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். எனவும் அசோக ஹண்டகம தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் யுத்தத்தின் பின்னான சமூகத்தை தழுவியதாக மட்டுமே இனிஅவன் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் மீளவும் தனது சமூகத்துடன் இணைந்து புதிய வாழ்வொன்றை வாழ முயற்சிக்கிறார். இவர் நீண்ட ஆண்டுகளின் பின்னர் தனது சொந்தக் கிராமத்திற்கு திரும்பி வருகிறார். இங்கே புதிய வாழ்வொன்றை ஆரம்பிக்க எண்ணும் போது, அவரது கிராமத்தவர்கள் இவரை எதிர்க்கின்றனர்.விடுதலைப் புலிகள் அமைப்பில் இவர் பணியாற்றிய போது அதில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமது பிள்ளைகளின் மரணத்திற்கு இந்த முன்னாள் புலி உறுப்பினரே காரணம் என அந்தக் கிராமத்தவர்கள் கூறுகின்றனர். தமது பிள்ளைகள் உயிருடன் திரும்பி வராதபோது இவன் மட்டும் தனது வாழ்வைத் தொடர்வதா என அவர்கள் எண்ணி இவரின் முயற்சிகளுக்கு தடைபோடுகின்றனர்.யுத்தத்தின் வடுக்கள் எப்போதும் எஞ்சியிருக்கும் என்கின்ற உண்மையும் இங்கு வலியுறுத்தப்படுகிறது.
இலங்கை முழுவதிலும் 700 திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடத் தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் மூன்று தமிழ் திரையரங்குகள் மட்டுமே இதற்கான அனுமதியைத் தந்துள்ளன. இது போன்ற உள்நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படம் ஒன்றை தமிழ் திரையரங்கு ஒன்றில் காண்பிப்பதற்கு தமிழ் திரையரங்கு உரிமையாளர்கள் முன்வருவது குறைவாகும்.
ஏனெனில் இவ்வாறான திரைப்படங்கள் வர்த்தக ரீதியான நன்மையைக் கொடுக்காது என்பதாகும். இங்கே இந்திய தமிழ் திரைப்படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன” எனவும் ஹண்டகம தெரிவித்துள்ளார்.”
இது போன்ற திரைப்படங்களைத் தயாரிக்குமாறு தமிழ் குறுந்திரைப்பட தயாரிப்பாளர்களை நான் உற்சாகப்படுத்துகிறேன்.
அசோக ஹண்டகாமவால் எழுதி இயக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தர்சன் தர்மராஜ், சுபாசினி பாலசுப்பிரமணியம், நிறஞ்சனி சண்முகராஜா, ராஜா கணேசன், கிங் ரட்ணம், மல்கம் மக்கடோ, திரு திருமதி தைரியநாதன், ஜி.பி.பெர்மினஸ், மகேஸ்வரி ரட்ணம் ஆகியோர் கதாபாத்திரங்களாக பங்கேற்றுள்ளனர். ஜெகதா வெலவற்ற மற்றும் அனுரா பெர்னாண்டோ ஆகியோருடன் திரைப்படத்திற்கான இசையை கபிலா பூகோலராச்சியும்; ஒளிப்படவியல் இயக்குனராக சன்ன தேசப்பிரிய மற்றும் கலை இயக்குனராக சுனில் விஜேரட்ண ஆகியோரும் பங்களித்துள்ளனர்.