ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் மலையகப் பெண் படைப்பாளிகளுள் முதன்மையானவர் திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் -1935 களில் தொழிற்சங்க ரீதியில் மலையக மககளுக்காகப்பாடுபட்ட மீனாட்சியம்மையை நாம் பெருமதிப்புடன் நினைவுகூர வேண்டும். இவரே மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி
1935 களில் தொழிற்சங்க ரீதியில் மலையக மககளுக்காகப் பாடுபட்ட மீனாட்சியம்மையை நாம் பெருமதிப்புடன் நினைவுகூர வேண்டும். இவரே மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி. (ஊடறுவின் வெளியீடான இசைபிழியப்பட்ட வீணை என்ற கவிதைத்தொகுப்பு மீனாட்சியம்மைக்கே சமர்ப்பணம் செய்யப்பட்டது.) வரலாறு தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
– மீனாஷியம்மாளை பொறுத்த மட்டில் மலையக மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் சட்டங்களையும் நேரடியாக சாடியவர் அவ் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவர். மீனாஷியம்மாளின் செயற்பாடு சிந்தனை என்பன மலையக தோட்டத் தொழிலாளர்களை மையமாக கொண்டு அமைந்திருந்தமையால் ;அவரது கவிதைகளும் மக்களை தழுவியதாக மக்களின் மொழியில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரின் பாடல்கள் தொழிலாளர்களை சார்ந்ததாகவும் அவர்களை விடுதலை உணர்வுக் கொள்ள வைப்பதாகவும் அமைந்துள்ளது. அவரது பாடல்கள் பொதுவாகவே கூத்து மெட்டுகளிலும், சினிமா பாடல் மெட்டுகளிலும் அமைந்துள்ளன. அவரே தமது பாடல்களுக்கான மெட்டுகளையும் தமது நூலில் பதித்துள்ளார். மீனாஷியம்மாளை பொருத்தமட்டில் பெண்களை சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் பங்குபற்றச் செய்ததுடன் பெண்விடுதலையின் தேவையை சமூகவிடுதலையுடன் இணைததே முன்னெடுத்தார் என்பதை இங்கு கட்டாயம் குறிப்பிட்டாகவே வேண்டும்.
ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள்
கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் பா. பாலேஸ்வரி.
1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள் பெருமை தேடித்தந்த அன்னலட்சுமி இராஜதுரை