இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு- (தமிழ்நாடு)
கடந்த 21-09-2012 அன்று, முகம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடந்த அறப்போராட்டத்தில் நாங்களும் கலந்து கொண்டோம். அப்போது காவல்துறையினர் எங்களை இழிவாகப் பேசவும், தாக்கவும் செய்தனர்.
(மாவட்ட ஆட்சியரிடம் முறையிடும் பெண்கள்)
பின்னர் ஐந்து நாட்கள் கழித்து 26-09-2012 அன்று நள்ளிரவில் எங்களது வீடுகளில் சோதனை என்ற பெயரில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தவும், காமதூரமான, மததுவேச வார்த்தைகளால் இழிவுபடுத்தவும் செய்தனர்.
‘தற்காப்புக்காக சுட்டோம்’ எனக் கூறி எங்கள் கணவன்மார்களை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டினர். இவ்விடயத்தை வெளிப்படுத்துவதின் மூலம், எங்களுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கும் என்று நம்புகிறோம். இத்தகைய மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவும், அத்துமீறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல்துறையினரால் எங்களின் உயிருக்கோ மானத்திற்கோ இழப்பு, எங்கள் கணவர்களின் உயிருக்கோ ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றவும் வேண்டும்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள & உதவியை நாடியுள்ள,
இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு, திருநெல்வேலி
எங்களின் கையெழுத்துடன் கூடிய முழுகடிதத்தையும், படங்களையும் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளோம்.
அநீதிக்கு எதிராய்க் குரல் எழுப்ப முன்வந்த இந்தச் சகோதரிகள் பாராட்டுக்கு உரியவர்கள்.