வன்னியில் உள்ள பெண்களின் துன்பங்களை பார்க்காமல் பெண் உரிமை பேசுவதா? சாடுகிறார் பிரியாணி குணரத்ன

 அன்னபூரணி (மட்டக்களப்பு, இலங்கை)

 போரினால் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ள வன்னி நில தமிழ் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமலும், அவர்களது உரிமைப் போராட்டங்களை உள்ளடக்காமலும் இந்த நாட்டில் எந்த மூலையிலும் எவரும் பெண்ணுரிமை பற்றிப் பேச முடியாது என்று நான் சொல்கிறேன்.

போரினால் சொல்லொணாத் துயரங்களை அடைந்து இன்று வன்னியில் நிர்க்கதியாகக் கண்ணீர் சிந்தி வாழும் தமிழ்ப் பெண் சகோதரிகளின் துன்பங்களைளை பார்க்காமல்  பெண் உரிமை பேசுவதா?; சாடுகிறார்  பிரியாணி குணரத்ன போரினால்  பல சொல்லொணாத் துயரங்களை அடைந்து கண்ணீர் சிந்தி நிர்க்கதியாகக் வன்னியில் ; இன்று வாழும   தமிழ்ப் பெண் சகோதரிகளின் துன்பங்களைக் கணக்கில் எடுக்காமல் அவர்களின் உரிமைப் போராட்டங்களை உள்ளடக்காமல் இந்த நாட்டில் எந்த மூலையிலும் எவரும் பெண்ணுரிமை பற்றிப் பேசமுடியாது பேசவும் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் நிர்வாக செயலாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான ப்ரியானி குணரத்ன ஆவாசத்துடன் இக்கருத்தை முன்வைத்துப் பேசினார். கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் சமூக நீதிக்கான பெண்கள் நடவடிக்கை அமைப்பின் மாநாடு இடம் பெற்றது அக் கூட்டத்திலேயே இக்கருத்தை முன் வைத்ஆதுப் பேசினார் இக் கூட்டத்தில்
 
 விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜெயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா ஆகியோர் கலந்து கொண்டனர்.  
 
வடக்கு கிழக்கில் 90,000 கணவனையிழந்த பெண்கள்  இருகின்றார்கள் என்ற விடயம்  உண்மையே இவ்வடயமானது இலங்கையின்  கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகிறது. இதைப் புரிந்துகொண்டாலே வடக்குகிழக்கு பெண்களின் அவல வாழ்வு பற்றிப் புரியும்.
 
குடும்பங்களை தலைமை தாங்கிட வேண்டிய நிலைமையிலும்  வாழ்வாதார தேவைகள் கிடைக்காமை, பலவந்தமாக சம்பூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக சொல்லப்படும் மின் ஆலை ஒன்றிற்காக மக்கள் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர். தங்கள் சொந்த நில வரம்புகளுக்கு உள்ளே இவர்கள் செல்ல முடியாது.
 

 சொந்த நிலங்கள் பறிக்கப்பட்டுப் தெரியாத பழக்கமில்லாத  காட்டு நிலங்களில் குடியேற்றப்படுகின்றமைக்கு, முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராம மக்களின் அவலவாழ்வு கண்முன் நிற்கும் உதாரணமாகும். இங்கேயும்  பெண்களே பெருந்துன்பங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.காணாமல் போன,தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு நமது தமிழ் சகோதரிகள் இடும் ஓலம் இங்கே கொழும்பில் கேட்கவில்லை என எவரும் சொல்ல முடியாது. நமது தலைவர் மனோ கணேசன் நீண்ட காலத்திற்கு முன்னமேயே அந்த ஓலங்களை கொழும்புக்கும் கொண்டு வந்துவிட்டார். கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களின் நிலைமைகளுக்கு சமீபகால உதாரணமாக நிமல்ரூபன், தில்ருக்சன், லலித், குகன், சதீஷ் ஆகியோரது பெயர் பட்டியல் காணக்கிடக்கிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கும் படியும் அல்லது புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றிஇ புனர்வாழ்வு பயிற்சிகள் அளித்து அவர்களை தம் குடும்பங்களுடன்  சேர்க்கும்படி தமிழ் தாய்மார்களும், சகோதரிகளும் குரல் எழுப்புகிறார்கள்.  
 
யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது பிள்ளையின், கணவரின், தந்தையின் நினைவுக் கல்லறைகளைப் இராணுவத்தினர் அழித்துள்ளதைத் தமிழ் பெண்களால் மன்னிக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கொல்லப்பட்டவர்களை நினைவுகூர முடியாதுள்ள வன்னி நில தமிழ் பெண்களின் இன்றைய யதார்த்தத்தை நாம் அறியவேண்டும். இறந்தவர்களை நினைவுகூர அவர்களுக்குத் தேசிய துக்க தினத்தை நிர்ணயிக்க  நாம் வழி காண வேண்டும்.
 
வடக்குகிழக்கின் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தமிழ்ப் பெண்களை ஆக்கிரமித்துள்ளன. இராணுவ வலயங்களும் படைத்தரப்பினரின் தொந்தரவுகளும் வன்னிப் பெண்களை அச்சுறுத்துகின்றன  இவற்றை களைய நாம் முன்னிற்க வேண்டும்  ஆகவேதான், போரினால் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ள வன்னி நில தமிழ் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமலும், அவர்களது உரிமைப் போராட்டங்களை உள்ளடக்காமலும் இந்த நாட்டில் எந்த மூலையிலும் எவரும் பெண்ணுரிமை பற்றிப் பேச முடியாது என்று நான் சொல்கிறேன். அவர்களை நினைந்து கொழும்பிலே நமது மனசாட்சிகள் உறுத்த வேண்டும் என்றும் சொல்கிறேன்’ என ஜனநாயக மக்கள் முன்னணியின் நிர்வாக செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான  பிரியாணி குணரத்ன தனதுரையில் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *