தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள் ? அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாதத்துடன் செயல்பட்டார்கள். இலங்கை அகதிகளின் முகாம்கள் பற்றி இங்கிருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள் ? நான் அந்த முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். இலங்கைப் பிரச்சினையைத் தங்களுடைய சுயலாபத்துக்காக மட்டுமே தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.(சமீதா) |
பிரபல இந்திய எழுத்தாளர், மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்துவரும் அருந்ததி ராய் அவர்களிடம் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ஒரு இந்திய ஊடகம். அதாவது சாதரண ஏழை எழிய மக்களுக்கா நீங்கள் பாடுபடுகிறீர்களே , ஆனால் உங்களை ஏழை எழிய மக்களால் அணுக முடியவிலையே அது ஏன் ? நட்சத்திர அந்தஸ்தோடு நீங்கள் உலாவருகிறீர்கள். இக் கருத்தை உங்களால் மறுதலிக்க முடியுமா என்று கேட்க்கப்பட்டது.
உடனே பேச ஆரம்பித்த அருந்ததி ராய் அவர்கள், அரசியல்வாதிகளையும், காப்பரேட் உரிமையாளர்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இவர் தாக்குதலில் இருந்து தமிழ் நாடு அரசியல்வாதிகளும் தப்பிக்கவில்லை. குறிப்பாக ஈழப் பிரச்சனையைப் பற்றி பேசிய அவர், தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திவருகின்றனர் என்று கூறியுள்ளார்.
காஷ்மீரில் இருக்கும் இந்தியாவின் முகமூடிகளைக் கிழிக்கிறீர்கள். இலங்கையில் ராஜபக்சேவின் முகமூடியைக் கிழிக்க நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் ? அங்கு நடந்த இனப்படுகொலை பற்றி உங்கள் கருத்து என்ன ?
ஆரம்பத்திலேயே இதைப் பற்றி எழுதிய வெகுசிலரில் நானும் ஒருத்தி என நினைக்கிறேன். போரின்போது, அது நடந்துகொண்டிருந்தபோது நான் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் நீங்கள்(அதாவது அரசியல்வாதிகளை) உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: நான் என்ன சொன்னேன் என்பதல்ல, நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதுதான்.
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள் ? அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாதத்துடன் செயல்பட்டார்கள். இலங்கை அகதிகளின் முகாம்கள் பற்றி இங்கிருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள் ? நான் அந்த முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். இலங்கைப் பிரச்சினையைத் தங்களுடைய சுயலாபத்துக்காக மட்டுமே தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மேற்கண்டவாறு தனது கருத்தை ஆதங்கத்தோடு சொல்லியுள்ளார் அருந்ததி ராய். தமிழ் நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் ஈழப் பிரச்சனையை சுயலாபத்துக்காக அவ்வப்போது கையில் எடுப்பது வழக்கம். இதனை எவராலும் மறுக்கவும் முடியாது. இதனையே அவர் துணிச்சலோடு கூறியுள்ளார்.
//இலங்கை அகதிகளின் முகாம்கள் பற்றி இங்கிருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள் ? //
கேட்கப்படவேண்டிய ஓர் உண்மையான கேள்வி. தமிழ்நாட்டு முகாம்களில் வாழும், அல்ல, அல்ல, இருக்கும் இலங்கை அகதிகளின் அவல நிலைபற்றித் தெரிந்துகொள்ள, இந்தச் சுட்டியில் சென்று பாருங்கள். ஓர் இலங்கை அகதியின் கண்ணீர்க் கடிதம்:
http://www.inneram.com/articles/readers-articles/letter-by-a-srilankan-refugee-5085.html