ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள்

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் பலர் நம்மிடையே இலைமறைகாயக உள்ளனர் அவர்கள் பற்றிய சிறு குறிப்புக்களை நாம்  ஊடறுவில் இயன்ற வரை பிரசுரிக்க உள்ளோம் படைப்பாளிகள் உங்கள் பற்றிய குறிப்புக்களை எமக்கு  அறியத் தந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.   

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள் ஆவார். இயற்பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். பயிற்றப்பட்ட ஆசிரியை. பட்டதாரி. 1955 இல் இவரது முதலாவது சிறுகதை ‘போலிக்கௌரவம்’ ஈழகேரியில் பிரசுரமானது ஈழத்தின் சஞ்சிகைகளிலும் தமிழக ஆனந்த விகடனிலும் தரமான சிறுகதைகள்எழுதியுள்ளார். ‘வாழ்வைத்தேடு’, ‘ஆளுமைகள் அழிகின்றன’, ‘அவள் கொடுத்த விலை’, ‘புளியங்கொப்பு’, ‘சோடி வேட்டி’ என்பன குறமகளின் நல்ல சிறுகதைகள். இவரது சிறுகதைகளில் பெண்ணியல் சம்பந்தமான கருத்துக்கள் விரவிக் காணப்படும். குறமகள் கதைகள் என்ற பெயரில்  சிறுகதைகளின் தொகுப்பு வெளிவந்துள்ளது. இன்று கனடாவில்உள்ளார். பெண்ணியல் ஆய்வுகள் நடாத்தியுள்ளார்.ஊடறுவில் குறமகள் பற்றிய குறிப்பு கேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளுக்கு எமது வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *