எழுதப்படாத வெள்ளைத் தாள்களும் ஈபிடிபியின் தார்மீகப் பொறுப்பும்

சந்தியா (யாழ்ப்பாணம்)

3ஆம் இணைப்பு:- ஈபிடிபியின் கோட்டைக்குள் கிளம்பிய எதிர்ப்பு!
எதையும் நம்புகின்ற நம்ப வைக்கக் கூடிய வஞ்சனையற்ற நெஞ்சமும் துடிப்பும் மிக்கவர்கள் சிறுவர்கள். ஆர்வமும் உத்வேகமும் துணிவும் கொண்ட இச்சிறுவர் பராயமே ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கான விளை நிலமாகிறது. நாம் நமது சிறுவர்களின் வளமான உள்ளங்களில் எதை விதைக்கிறோம். இன்று உலகெங்கிலும் மில்லியன் கணக்கில்லான சிறுவர்கள் இந்த யுத்தத்தின் கோரத்தினுள்  ஆட்பட்டிருக்கின்றனர். உள் நாட்டு யுத்தங்களில் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்து வருகின்றது. இதே போல் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் படுமோசமாக பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களும் பெண்களுமே.

வருடத்தில் இதுநாள் வரையிலும் சிறுமிகள் மீதான 24 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன் தெரிவித்திருக்கின்றார்.  இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்முறைச் சம்பவங்களை விட கடந்த 3ம் திகதி  நெடுந்தீவில் சிறுமி லக்சினியின் மீது மேற்கொள்ப்பட்ட பாலியல் சித்திரவதைகள் எம்மை எம் உதிரத்தை உறைய வைத்துவிட்டன. இந்தக் கொலைகார பாவிகள் பச்சிளங் சிறுமியை இப்படி சித்திரவதை செய்ததை பார்த்துக் கொண்டு இந்த தமிழ் சனம் வாய் மூடி மௌனித்து இருப்பது ஈபிடிபிக்கு பயந்தா அல்லது மக்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றா?  புலிகள் இருந்த காலத்தில் இப்படி நடக்குமா? புலிகள் இல்லாதது இப்போ தெரிகிறது இவன்களுக்கெல்லாம் புலிகளின் பாணியில் தான் தண்டனை வழங்கவேண்டும் என மக்களின் புலம்பல்கள் எம் காதை குடைகிறது. சட்டமும் ஒழுங்கும் கொடிகட்டிப்பறப்பதாக இணக்க அரசியல் புலி எதிர்ப்பு அரசியல்  செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  நெடுந்தீவில் சிறுமிக்கு நடந்த கொடூரத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

1 Comment on “எழுதப்படாத வெள்ளைத் தாள்களும் ஈபிடிபியின் தார்மீகப் பொறுப்பும்”

  1. அந்த சேவலை நரி தின்று நாளாகிறது. கூவு கூவு என்றால் எப்படி கூவும்?
    தார்மீக பொறுப்பாவது, மண்ணாவது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *