சர்வதேச பெண்கள் தினத்தை “நினைவு கூருவோமா? போரடுவோமா?” என்கிற கோஷத்துடன் ஊர்வலமொன்றினை சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் மார்ச் 8 ம் திகதி நேற்று ஏற்பாடு செய்திருந்தது. அவ்வமைப்பின் தலைவி திமுது ஆட்டிகல இது குறித்து சமீபத்தில் உத்தியோகபூர்வமான அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.
மார்ச் 08 அன்று பி.ப. 3 மணிக்கு கொழும்பு டெக்னிக்கல் கொலேஜில் இந்த ஊர்வலம் தொடங்கியது.
புதிய தாராளவாத பொருளாதார கொள்கையினால் வடக்கு மற்றும் தெற்கு பெண்கள் எதிர்நோக்கும் இன்னல்களை வெளிச்சத்திற்கு கொணர்வதே தமது தற்போதைய தொனிப்பொருள் என திமுது ஆட்டிகல தெரிவித்துள்ளார்சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கமானது மக்கள் விடுதலை முன்னணியின் மகளிர் பிரிவான சோஷலிச பெண்கள் இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வெகுஜன இயக்கமாகும். பல பெண்கள் அமைப்புகளையும் ஜனநாயக அமைப்புகளையும் ஒன்றுசேர்த்து இந்த இயக்கம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.