தேர்தல் உத்வேகம்: கூட்டல்களும் கழித்தல்களும்

சுமதி சிவமோகன் (இலங்கை)

SRI LANKA-POLITICS-UNREST-VOTE
  • மேற்கு வன்னியின் கிராஞ்சியில் இருக்கும் இடம்பெயர்ந்தவர்கள்
  • அண்மையில் கொழும்புக்குச் சற்று வெளியே உள்ள ஒரு செக்பொயின்றில் என்னை மறித்தார்கள். அப்போது நேரம் இரவு எட்டு மணி இருக்கும். அப்போது நான் ஒரு ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தேன்.  செக் பொயின்றில் நின்றவர் என்னுடைய அடையாள அட்டையைக் கவனமாகப் பரிசீலித்தபடி ‘நீங்கள் தமிழரா?’ என்று என்னிடம் சிங்களத்தில் கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் நான் சற்றுத் திடுக்கிட்டுப் போனேன்.

தேர்தல்கள் மற்றும் சிறுபான்மையினர் பிரச்சினை குறித்து விவாதித்தல்

ான் ஒ”ம்’ என்று பதில் சொல்வதற்குச் சற்றுத் தாமதமாகியது. ஆனால் நான் உண்மையில் சொல்ல நினைத்தது, ‘இங்கு தமிழர், முஸ்லிமகள்,சிங்களவர் என்று எவருமே இல்லை என்று ஜனாதிபதி சொல்லவில்லையா எல்லாரும் ஒன்று என்று ஜனாதிபதி  ஏற்கனவே சொல்லவில்லையா?’ என்றுதான். இருந்தும், ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு எதிராக நான் ‘ஓம்’ என்று சொன்னேன்.

இது என்னுடைய செக் பொயின்ற் அனுபவங்களில் ‘ஒன்று. எங்களில் பலர் இதுபோல் நிறையக் கதைகள் வைத்திருக்கிறோம். ஒரு வகைப்படுத்த முடியாத இந்தச் சம்பவம் எங்களுக்கு எதை வெளிப்படுத்துகிறது? அது தன்னளவில் வெகு சாதாரணமான ஒரு விடயம் என்று எங்களுக்குச் சொல்கிறது. புதிய வருடத்துக்குள் நாங்கள் நுழைகின்ற நேரத்திலும்   மற்றும் ஒரு இறுதியான தேர்தலுக்கு முகம் கொடுக்கின்ற நேரத்திலும் எங்களில் பலருக்கு இது ஒரு சிக்கலான விபரீதமான நிலைமையை வெளிப்படுத்துகிறது. செக் பொயின்ற்றுகள் வரலாம் போகலாம். நாளைக்கு உயர்பாதுகாப்பு வலயங்கள்கூட இல்லாமற் போகலாம். இவைகள் எல்லாவற்றையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் எனக்கு இன்றைக்கு இருக்கும் கேள்வி, இந்தக் கண்ணுக்குப் புலப்படும் வகையில் அமைந்துள்ள வெறும் செக் பொயின்ற்றுகள் பற்றியதல்ல. ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால், நாங்கள் இந்த நாட்டிற்குச் சொந்தமானவர்கள் என்பதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கான எங்களுடைய போராட்டப் பாதையின் மீதான செக் பொயின்ற்றுகள் பற்றியதே. 

தேர்தல் உத்வேகம்: கூட்டல்களும் கழித்தல்களும்

வாக்குறுதிகளும் அவற்றைச் சரிக்கட்டுவதற்கு ஈடான வாக்குறுதிகளுமான வெறிபிடித்த செயற்பாட்டின் அதியுச்ச நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் தீவிரம் இருக்கின்ற வேளையில் நாங்கள்;  மீண்டும் மீண்டும் எதிர்கொள்கின்ற கேள்வி ஒன்றுதான். இந்த ஆரவாரங்களிற்கு இடையில் சிறுபான்மையினருக்கான பிரச்சினையொன்று இந்த நாட்டில் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கவேண்டியுள்ளது. நாட்டில் பாதுகாப்பு பணிபுரியும் ஊழியரைக் கேட்டால் அதற்கான பதில் ‘ஆம்’ என்பது. சிறுபான்மையான குழுக்களின் பல்வேறு கூட்டணிகளால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளையும்   சம்பந்தப்பட்ட விவகாரங்களையும்  ஒருவர் உன்னிப்பாக அவதானிக்கின்றபொழுது இந்த சிறுபான்மையினர் குறித்த பிரச்சினையானது எப்போதும் அங்கு பிரசன்னமாயுள்ளது.

சிறுபான்மையினரின் சமூகங்களுடன் பழகி அவர்களுடன் வேலை செய்யும் ��’ருவரினால் இதனை ஊர்ஜிதப்படுத்த முடியும். ஒரு தெளிவான, இன்னும் ஒளிவு மறைவில்லாத ஒரு பதில் கிடைக்கும். மொத்தத்தில் நாட்டில் உள்ள மு;லிம்கள், தமிழர்கள் மற்றும் ஏனைய விளிம்புநிலை சமூகங்களுடன் தங்களை அடையாளப்படுத்துகின்ற எங்களில் பலருக்கு சிறுபான்மையினரின் பிரச்சினையானது எங்களது வாழ்க்கையை எல்லாவிதத்திலும் இடைஞ்சல்படுத்துகிறது.

30 வருடகாலமாகத் தொடர்ந்த போரும் அதைவிட நீண்ட காலமாக இருக்கின்ற இனப்பிரச்சினையும் இலங்கையின் அரசியலில் ஊடுருவியும் அதிகாரம் செலுத்தியும் வந்திருக்கின்றன. சிறுபான்மையினரின் அரசியல் பற்றியும் அந்த அரசியல் சார்ந்தும் பேசுவதற்கு எடுக்கின்ற எந்த முயற்சியும் சிக்கல் நிறைந்த மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரத்தினால்; தடுக்கப்படுகின்றது. அரசியலமைப்பு தெரிவிக்கின்ற  மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, ஒரே கட்டுமானம்  என்னும் இரண்டையும் கொண்டதென்று கூறுகின்றது. ஆனால் இந்த விடயமானது வெறுமனே மேலிருக்கின்ற அரசு பற்றி பேசுவதும் சீர்திருத்துவதும் என்பதைவிட அடிப்படையில் மிகவும் சிக்கலானது. இவ்விடத்தில் ஒருவர் கடந்த 30 வருட கால அரசியல் இயங்கியலைப் பார்க்க வேண்டும். மறுபுறம் அரசானது, ஒரே கட்டுமானமாகத் தன்னை ஆழப் பதித்துக் கொண்டு விட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது என்று கொடுக்கப்படும் வாக்குறுதியானது மக்களிடையே எதிர்பார்ப்புகளை வளர்த்தபோதிலும் அரசு அந்த நிலையில் இருந்து நகருவதற்கு விருப்பம் இல்லாதிருக்கின்றது.

இன்னொரு பக்கத்தில் எங்களைத் தொடர்ந்து வருகின்ற துன்பியல் அபத்தின் நிமித்தம் சகல சச்சரவுகளின்போதும் மக்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள், இந்தப் போராட்ட காலப்பகுதியில் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தார்கள். மக்கள் மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் கட்டுப்பாட்டை இழந்திருந்தார்கள். ஒரு மாற்றத்தை வேண்டி வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று நாற்புறமும் இருந்து எழுகின்ற ஆத்திரமும் கூக்குரலும் ஒரு அவசர தேவை பற்றி எங்களுக்குச் சொல்கின்றது. இங்கு நான் திட்டவட்டமாகவும் உருவகப்படுத்தியும் பேசுகிறேன். மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரத்தில் இருந்து தாங்கள் இன்னும் இன்னும் அந்நியப்பட்டிருப்பதாக  ‘ஒட்டுமொத்தமாக மக்கள் உணருகின்ற அதேவேளை, அரசியல்வாதிகளின் எண்ணிக்கை வளர்ந்து வருகின்றது. வருடம் முழுவதும் சுப்பர் ;ரார்களுக்கான போட்டிகள்போல் பல்வேறு தேர்தல்கள் நடைபெறுகின்ற போதும், உண்மையான அதிகாரம் என்பது மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்துடன் அது ஒரு சிலரின் கைகளில் இன்னும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷ குடும்பத்தின் எழுச்சி என்பது இந்த வெளிப்பாடுகளில் ஒன்றே ஒன்று.

ராஜபக்ஷ ஆட்சியானது போர்க்களத்தில் ஈட்டிய வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்திற்கு ஒரு அரசியல் தீர்வை வழங்குவதற்கான அழுத்தங்களை ஏன் கொடுக்கவில்லை என்று  ‘ஒருவர் ஆச்சரியப்படக் கூடும். அந்த ஆட்சியானது போர்க்காலச் சூழலின் அறுவடைக்குப் பின்னால் உடனடியாக மிகவும் பிரசித்தி அடைந்தது. ஆனால் அந்த ஆட்சிக்கு அரசியல் தீர்வொன்றுக்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் துணிவும் அரசியல் பார்வையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தது. அதே சமயம், தன்னுடைய சொந்தக் கட்டுப்பாட்டுக்குள் இந்த அரசை வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டதால் ஒரு தவறைத் தெரிந்தே இழைத்துள்ளது.

அதாவது சிறுபான்மையினர் தொடர்பான விடயங்கள் பற்றிய புறக்கணிப்பு, குறிப்பாக , இடம்பெயர்ந்தவர்களின் நிலை குறித்த இவர்களது புறக்கணிப்பு. இச்செயலானது நாட்டைக் கட்டியெழுப்புகின்ற அரசியல் போக்குகளுடன் தங்களை ஈடுபடுத்துவதற்கான ஆர்வம் மிகுந்து இருக்கின்ற ஒரு சமூகத்தை அந்நியப்படுத்துவதற்கு வழிவகுத்தது. ஆனால் ராஜபக்ஷவின், தனது ஆட்சியைக் கட்டமைத்தல் என்ற ஒரே திட்டமானது, நாட்டிற்குள் தங்களுடைய நிலையை ஒரு குறிப்பிட்ட எல்லை வரையாவது நிலைநிறுத்துவதற்கு என்ன செயதிருக்கலாம் என்று சிந்திக்கவே விடவில்லை. அத்துடன் 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் வடக்கில் இருந்து துரத்தப்பட்ட முநான் ஒ”ம்’ என்று பதில் சொல்வதற்குச் சற்றுத் தாமதமாகியது. ஆனால் நான் உண்மையில் சொல்ல நினைத்தது, ‘இங்கு தமிழர், முஸ்லிமகள்,சிங்களவர் என்று எவருமே இல்லை என்று ஜனாதிபதி சொல்லவில்லையா முஸ்லிம்கள் நாட்டில் தங்களுடைய ஸ்திரமற்ற நிலை குறித்த ஒரு தெளிவான பதிலுக்காக இவ்வளவு காலமும் காத்திருக்கிறார்கள்.  இன்று அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவது பற்றி அறிவிக்கிறது.  இதற்காக அரசாங்கம் ஏன் இவ்வளவு காலமும் காத்திருந்தது? ஒரு வேளை இதற்கான பதில் வேறெங்காவதுதான் இருக்கவேண்டும்.  முலிம் சிறுபான்மையினர், தமிழ் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றிப் பேசுகின்ற எந்த ஒரு தீர்வுப்பொதியும், ராஜபக்ஷ ஆட்சி தன்னுடைய அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்குப் பாரிய அளவில் தங்கியிருக்கும், மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரத்துக்கு இடைஞ்சலாகவே இருந்திருக்கின்றது.

அதேசமயம் சிறுபான்மைக் கட்சிகளும் எதிர்க் கட்சியினரைச் சூழ்ந்து இருக்கின்றவர்களும், சரத் பொன்சேகா என்பவரும், தங்களுடைய வாக்காளர்களுக்கு என்ன செயற்திட்டத்தை வழங்கப் போகிறார்கள் என்று ஒருவர் கேட்பதற்கு விரும்பக்கூடும். இன்று இந்தச் சங்கடமான தறுவாயில் எங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் சிறுபான்மை குழுக்களுக்கும் சிறுபான்மையினரைப் பற்றிப் பேசுகிறவர்களுக்கும் தற்போதைய இந்த நிலைமை பற்றிய ஒரு தெளிவான மதிப்பீடு இருக்க வேண்டும். இவர்களுடைய நம்பகத்தனமான வாக்குறுதிகள் அரசுடனானதும் ஏனைய கட்சிகள், குழுக்களுடனுமான ஒ’ப்பந்தங்கள் மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் என்பவற்றில் அவர்களுடைய தந்திரோபாயங்களுடன் பொருந்திப் போகவேண்டும். ஒரு நின்று பிடிக்கக்கூடிய அரசியல் திட்டத்திற்காக வேலை செய்யவும் இன்றைக்கு நெருக்குதலாக இருக்கின்ற பிரச்சினைகள்பற்றி  மக்களுடன் உரையாடுவதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும்படி இவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்.

இதனைச் செய்வதற்கு நாங்கள் ஆட்சி மாற்றம் பற்றிய விவாதத்தில் இருந்து, போரின் முடிவு மற்றும் தேர்தலை நோக்கிய துரிதம் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் எவ்வாறு விவாதங்களிற்கான வெளிகளைப் பயன்படுத்துவது என்ற நிலைக்குச் செல்ல வேண்டும். ஜனநாயகம் பற்றியும் சிறுபான்மையினரின் பிரச்சினை பற்றியும் பல்வேறு மட்டங்களிலும் விவாதங்கள் நடத்தப்படவேண்டும். அத்துடன் பல்வேறு பிரிவினருடனும் சமூகங்களுடனும் இணைப்பை ஏற்படுத்துதல் வேண்டும்.

மேலிருந்து கிடைக்கும் சிறிய நம்பிக்கைகள்?

அரச ஆதரவு அரசியல், அரசும் சிவில் சமூகமும் இனப்பாகுபாட்டுக்குள்ளாதல்

மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரம் ஆதரவு அரசியலுக்கு மகுடம் சூட்டி மிகவும் அருவருக்கத்தக்க ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. என்னுடைய பார்வையில் இது ஒரு ஆபத்தான இனப்பாகுபாட்டு வடிவத்தை எடுக்கின்றது. குறிப்பாக, கிழக்கை எடுத்துக் கொண்டால், அங்கு இனரீதியான முறுகல்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தன. பின்காலனித்துவ அரசின் வெகு ஆரம்பத்தில் இருந்தே இது வளர்ந்து வந்திருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் இருந்த புலிகளின் அச்சுறுத்தலான ஆட்சிக்காலம் இந்த முறுகல்களை இன்னும் அதிகரிக்கச் செய்தது. அதேநேரம் அரசும் தொடர்ந்து வந்த  அரசாங்கங்களும் இந்த வன்முறைகள் அதிகரிக்காமல் இருப்பதற்கான எந்தவிதமான முன்னெடுப்பையும் செய்யவில்லை. மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரம்  மற்றும் அரச ஆதரவு அரசியல் என்பன சமூகங்களைக் கூறுபடுத்துவதற்கு மாத்திரம் சேவை செய்தன. ஒன்றுக்கொன்று எதிராகக் குழி தோண்டின. மறுபுறம் உயர்ந்து வருகின்ற வாழ்க்கைச் செலவு என்பது வறுமையான மட்டத்தில் உள்ளவர்களை மட்டும் பாதிக்கவில்லை. கஷ்டப்படுகின்ற நடுத்தர வர்க்கத்தையும்தான் அது பாதிக்கின்றது. இது சகல வகுப்பினருக்கும் பொதுவானது.

தங்களுடைய குறைகளைப் பற்றிக் கவனம் எடுக்கும்படி சிறுபான்மை குழுக்களும் கூட்டுகளும் விடுத்த அழுத்தமான கோரிக்கைகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியின் ‘ஒரே ‘அனுகூலமான’ பதில் ‘அபிவிருத்தி’ என்கின்ற பெரும் கருத்து என்பதாக வெளிப்பட்டது – அதாவது வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தித் திட்டங்கள். ‘அபிவிருத்தி’ என்பது சகலரோக நிவாரணியாக பாவிக்கப்பட்டது. இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், அவை யதார்த்தமானவை அல்லது பிரேரிக்கப்பட்டவையாக இருக்கலாம்.  ஆனால் இவை சிறுபான்மையினரிடம் பீதியை அதிகரித்துள்ளது. ஒருபுறம் அங்குள்ளவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை. அபிவிருத்தி என்பது இன்று ஊழலின் இன்னொரு வடிவமாக உணரப்படுகின்றது அதேநேரத்தில் வன்முறைவரை செல்லுமளவுக்கு அங்கே இனரீதியான முறுகல்கள்  அதிகரித்திருக்கின்றன. அபிவிருத்தி என்பது இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினையை முன்னரைவிட அதிகரிக்கச் செய்துள்ளது. நாடும் மக்களும் பேரெண்ணிக்கையில் இடம் பெயர்ந்தவர்கள் பற்றிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றபொழுது அரசாங்கமானது அதுபற்றிய எந்த ஒரு யோசனைத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. நடைமுறைப்படுத்தவில்லை. மிகவும் முக்கியமாக, அவர்களை நிரந்தரமாகக் குடியமர்த்துவதற்கான அல்லது மீள் குடியமர்த்துவதற்கான ஒன்றிணைந்த வேலைத்திட்டம் எதையும் வைக்கவில்லை.

அவர்களையும் எங்களையும் ஒரு நரகலுக்குள் தள்ளிவிட்டு, மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரத்தில் இருந்து இன்னும் இன்னும் அந்நியப்பட்டிருப்பதை நாங்கள் உணருகிறோம். இதன் விளைவாக அதிகாரமற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். தற்போதைய அரசாங்கமானது அரச கரும மொழிக் கொள்கையில் சில முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்ற அதேவேளை அதனுடைய அமுலாக்கம் தொடர்பாக ஒரு சட்டம் இயற்றியுள்ளது. மக்களின் வாழ்க்கைக்குத் தெவையான தற்போதைய நிவாரணம் குறித்த எந்தக் கவலையுமற்று கொண்டு வந்த இந்தச் சட்ட உருவாக்கத்தின் பலன் மறக்கப்பட்டுவிட் ஒ ன்றாகத்தான் இருக்கின்றது.

நாங்கள் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்களா? எப்படி? லசந்த விக்கிரமதுங்கவின் நினைவு

எவ்வளவு காலத்திற்கு சிறுபான்மையினர் பிரச்சினை தீர்க்கப்படாது இருக்கின்றதோ, அந்தளவிற்கு உடனடியான பிரச்சினையான ஜனநாயகம்பற்றிய பிரச்சினையும் கவனிக்கப்படாத தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருக்கும். மலையக சமூகங்கள் அல்லது தோட்டத் தொழிலாளர் உள்ளடங்கலாக சிறுபான்மை சமூகங்களிற்கு எந்தத் திருப்தியும் கிடைக்காத தீர்க்கப்படாத ‘ஒன்றாகவே இருக்கும். இவர்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது பாதுகாப்பு. பாதுகாப்பு என்புது நிலம், ஒருவர் வசிக்குமிடம், பரந்த அளவில் பாரக்கும்போது அவர் வதியும் நாடு என்பதுடன் தொடர்புடையது. சட்டத்திற்குப் புறம்பான சிறையிடுதல், இன்னும் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பன பாதுகாப்புத் தொடர்பான கேள்விகளை எழுப்புகின்றன. எந்த ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இதுதான்.

இந்த மாதம் நாங்கள் லசந்த விக்கிரமதுங்கவை நினைவுகூருகின்றபொழுது இன்றைக்கு ஒரு வருடத்திற்கு முன் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் அளவற்ற துணிவுடன் ஆட்சியில் இருந்த அரசை எதிர்த்து நின்றார். மக்களின் மனித உரிமைகள், சமூக உரிமைகள் என்பன இனப்பாகுபாடற்று அரசியற் செயற்பாட்டாளர்களினதும் அரசியல் குழுக்களினதும்  முக்கிய குவிபுள்ளியாக அமைகின்றது என்று நாங்கள் நம்புகிறோம்.

துணிவும் அரசியற் செயற்பாடும் பற்றி நாம் பேசுகின்றபொழுது எங்களுடைய காலத்தில் நடந்த மிகமோசமான தோல்விபற்றி சொல்ல விரும்புகிறேன். சிறுபான்மையினர் பற்றிய பிரச்சினை என்பது பல வழிகளில் கிளைக்கின்ற ஒரு விடயமாகும். அது பலவிதமான வழிகளில் தன்னை வெளிப்படுத்த முடியும். நானும் ஒரு பலவகையானவர்தான்.

நான் நாட்டில் உள்ள வேறோரு குறிப்பிடத்தக்க விசேட சிறுபான்மை குழுவிற்கு சொந்தமானவர். அதாவது இடதுசாரி போக்கிற்கு. ஆனால் இன்று நாட்டின் இடதுசாரிப் பாரம்பரியமானது கசாப்புக்கடையாகியுள்ளது. அது பெரிய அளவில் பேரின சிங்கள தேசியவாதத்திற்குள் தன்னைச் சிறையிட்டுக் கொண்டது. பாரம்பரிய இடதுசாரிகள் தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்வதற்கு தற்போது மிகவும் தாமதமாகிவிட்டது. அவர்கள் தோற்றுப்போனார்கள். அவர்களுக்குத் துணிவு போதவில்லை. ஆனால் தற்போது புதிய தலைமுறை சிந்தனையாளர்களுக்கான, இவர்கள் ஒரு விமர்சனச் சிந்தனைப் போக்குள்ள பாதையில் நிதானமாக முன்னேறுவதற்கான காலம். 

அத்துடன் வர்க்கம், பாலினம் மற்றும் குறிப்பாக, சிறுபான்மையினர் பிரச்சினை என்பன குறித்த விவாதங்களை ஏற்படுத்தி பல்லினச் சமூகங்களுக்கிடையில் ஒரு நிதானமான உரையாடலை திறக்கவேண்டும். போர்ப் பொருளாதாரமானது சிறுபான்மை சமூகங்களைப் பெருக்கியுள்ளது; இவற்றில் இடம்பெயர்ந்த சிங்களவர்கள், காயப்பட்ட போர்வீரர்கள் ஆகியோர் அடங்குவர். இவர்கள் சிறுபான்மையினரின் பிரச்சினையின் ஒரு பகுதி ஆவார்களா? போருக்குப் பின்னான பொருளாதாரச் சூழலில் இன்னும் வேறு சிறுபான்மையினரும் உருவாகுவார்களா? நாங்கள் இவற்றை அலட்சியப்படுத்தாது சிந்திக்கவேண்டிய தேவை இருக்கின்றது.

களநிலைமையை மீள்மதிப்பீடு செய்கின்றதென்ற வகையிலும் அனுகூலங்களை முன் தள்ளும் ஒரு வழியாகவும் விவாதங்களுக்கான ஏதாவது ஒரு வெளி திறக்கும் என்றால் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களான எங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்புகிறேன்.

எங்களுக்கு இது சிந்தனைக்கானதும் மீள்மதிப்பீட்டு நிகழ்ச்சித் திட்டமிடலுக்குமான காலமாகும். இது நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறுகிய காலநோக்கிலும் நீண்ட கால நோக்கிலும் பயனுள்ளதாக அமையவேண்டும்.
 

தமிழாக்கம் : புகலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *