காலநிலை மாற்றத்துக்கு நீண்ட கால இலக்குகள் குறுகிய நோக்குடையவை என தமிழ் மாணவி சவால்!Get It Done Urging Climate Justice, Youth Delegate Anjali Appadurai Mic-Checks UN Summit

காலநிலை மாற்றத்துக்கு நீண்ட கால இலக்குகள் குறுகிய நோக்குடையவை என தமிழ் மாணவி சவால்!

 

கடந்த வாரம் தென் ஆபிரிக்காவில் நடந்த டர்பன் காலநிலை பேச்சில் (Durban climate talk வன்கூவரிலிருந்து கலந்து கொண்ட இளம் தமிழ் பெண் அறிஞர் வியாப்பூட்டும் பேச்சினை வழங்கியிருந்தார்.

அட்லாண்டிக் கல்லூரியில் ( (College of the Atlantic (COA) in Maine) ) தனது 3 ஆம் ஆண்டு பட்டப்டிப்பைத் தொடரும் அஞ்சலி அப்பாத்துரை “காலநிலை மாற்றத்துக்கு எதிராக போராடுவதற்கு நீண்டகால நோக்கங்களை அமைப்பது ஒரு குறுகிய பார்வையைக் கொண்ட குறிக்கோள்” என அங்கு கூடியுள்ள பேராளர்களிடம் (delegates) சவால் விடுத்துள்ளார்.

“என்னுடைய முழு வாழ்க்கைக்கும் நீங்கள் இப்போது பேரப்பேசிக் கொண்டிருந்துகொண்டிருக்கின்’றீர்கள்” என்ற அவருடைய பேச்சு இன்று உலகம் முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் யூ ரிப்பில் பார்துதுக் கொண்டு இருக்கிறார்கள். இவருடைய இந்த பேச்சு பிரபல எழுத்தாளர்களும் பத்திக்கையாளர்களுமான நயோமி கிளன்  (Naomi Klein) அன்ரூ ரெவ்கின் ( (Andrew Revkin )மற்றும் அமி குட்மன்(Amy Goodman)  ஆகியோரால் புகழ்ந்து பாராட்டப்பட்டுள்ளார்.

“நான் உலகிலுள்ள அரைபங்கு மக்களுக்காக பேசுகிறேன்” என்று இளைஞர்களைக் குறிப்பிட்டு இதனைத் தெரிவித்த அஞ்சலி, நீங்கள் உறுதிமொழிகளை சந்திக்கத் தவறிவிட்டீர்கள், நீங்கள் இலக்குகளைத் தப்ப விட்டுள்ளீர்கள், மற்றும் வாக்குறுதிகளை நீங்கள் மீறி இருக்கின்றீர்கள் என தனது பேச்சினை தொடர்ந்தார்.

அஞ்சலி அப்பாத்துரை காலநிலை மாற்ற அரசியலும் அதன் கொள்கைகளும் என்ற பிரிவை தனது கற்கை நெறியில் ஒரு பாடமாக்க் கொண்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *