இடிக்கப்பட்டது இன்னொரு தீண்டாமைச்சுவர்!

 
sangagiri untouchablity wall இப்போதெல்லாம் யாரும் பெரிதாக ஜாதி பார்ப்பதில்லை என்றும், தீண்டாமை என்பதெல்லாம் முன்னைப் போல  இல்லை என்றும் ஒரு கருத்து உருவாக்கப்பட்டு,  அது உண்மை போலவும் ஒருபுறம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நிஜத்தில் தீண்டாமை, புதுப்புது வடிவங்களோடு அதன் தீவீரம் குறையாமல் சாதீய ஆதிக்க சக்திகளால் மறுபுறம் புனிதம் போல காப்பாற்றப்பட்டு வருகிறது.
 இந்தத் தீண்டாமைச் சுவர் அகற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டங்களைத் துவக்கின. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழுத்தலைவர் அ. சவுந்தரராசன், மாவட்டச் செயலாளர் ஆர். வெங்கடபதி உள்ளிட்ட தலைவர்கள் தீண்டாமைச் சுவரைப் பார்வையிட்டதோடு, மக்கள் நடத்திய போராட்டத்திலும் இணைந்து கொண்டனர். அதிகாரிகளைச் சந்தித்த அ.சவுந்தரராசன், தீண்டாமைச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

sangagiri untouchablity wall

  உறுதியான போராட்டத்தால் டிசம்பர் 4 ஆம் தேதியன்று காலை சங்ககிரி தாசில்தார் தலைமையில் வந்த அரசு ஊழியர்கள் பொதுச் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப் பட்டிருந்த தீண்டாமைச் சுவரை இடித்து தரை மட்டமாக்கினர். மீண்டும் மக்கள் பயன்படுத்தும் வண்ணம் பாதை அமைக்கப்பட்டது.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சகல அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் தொடர்ந்து கண்காணிப்பதும், அம்பலப்படுத்துவதும் அவைகளை எதிர்த்துப் போராடுவதும் அவசியம் என்பதை சங்ககிரி தீண்டாமைச்சுவர் மீண்டும் ஒருமுறை சமூகத்துக்கு உணர்த்தியிருக்கிறது.அதன் ஒரு வடிவம்தான் தீண்டாமைச்சுவர். தாழ்த்தப்பட்ட மக்களை பொதுவெளியிலிருந்து பிரித்து வைக்கிற எல்லைச்சுவர்களாக இவை எழுப்பப்படுகின்றன. உத்தப்புரத்தில் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்ட பின்னரும், தமிழகத்தின் சில பகுதிகளில் அதுபோன்ற தீண்டாமைச்சுவர்கள் இருக்கவேச் செய்தன. அவைகளுக்கு எதிரான உறுதியான போராட்டங்களை முன்னின்று  நடத்தி வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் இந்த மானிடக் கறைகள் போன்ற சுவர்கள் உடைத்தெறியப்பட்டன. மிகச் சமீபத்தில் அப்படி தகர்க்கப்பட்டதுதான் சங்ககிரி தீண்டாமைச் சுவர்.

சங்ககிரியிலிருந்து ஈரோடு செல்லும் பிரதான சாலையில் இந்த சன்னியாசிப்பட்டி கிராமம் அமைந் துள்ளது. சுமார் 450 அருந்ததிய மக்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஊராட்சி தலைவராக இருந்து வந்துள்ளனர். இம்முறை பொது ஊராட்சி யாக மாற்றப்பட்டதால், மற்ற சமூகத்தினரின் ஆதரவுடன் மகேஸ்வரி என்பவர் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்குப் பிறகு அருந்ததிய மக்களுக்கு பல் வேறு தொல்லைகள் துவங்கின. அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்படுவதில்லை. இந்நிலையில்தான் இந்த மக்கள் பேருந்து நிறுத்தத்திலிருந்து தங்கள் பகுதியை அடைவதற்காகப் பயன்படுத்தி வந்த தார்ச் சாலையின் குறுக்கே திடீ ரென்று சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. நவம்பர்29 ஆம் தேதி கட்டப்பட்ட இந்த சுவரின் கட்டுமானப்பணியை ஊராட்சித்தலைவர் மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட பலர் மேற்பார்வை செய்ததாக அருந்ததிய மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் செய்தனர்.

 நன்றி புதுவிசை

1 Comment on “இடிக்கப்பட்டது இன்னொரு தீண்டாமைச்சுவர்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *