சந்தியா (யாழ்ப்பாணம்)
யாழ் மாவட்டத்தில் வறுமை, அறியாமை மற்றும் உரிய பாதுகாப்பு இன்மை காரணமாக யாழில் இளவயது பெண்கள் கர்ப்பம் தரிக்கும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக யாழ்.மாவட்ட அரச அதிபர். தெரிவித்துள்ளார். |
யாழ் மாவட்டத்தில் வறுமை, அறியாமை மற்றும் உரிய பாதுகாப்பு இன்மை காரணமாக யாழில் இளவயது பெண்கள் கர்ப்பம் தரிக்கும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக யாழ்.மாவட்ட அரச அதிபர். தெரிவித்துள்ளார். தாயாகுவதற்கு உரிய நிலையில் இல்லாத இவ் இளம் பெண்கள் கருத்தரிப்பது மிகவும் பிரச்சினைக்குரிய ஒரு விடயம் எனவும் இவ்வாறு இளம் வயதில் கர்ப்பம் தரிப்பது அதிகரித்துச் செல்வதையிட்டு கலாசாரச் சீரழிவுகள் பெருகுகின்றது என்று தொடர்ந்தும் பரப்புரை செய்வதை விடுத்து அவற்றை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட வேண்டும் என அவர் ஊடகத்திற்கு செவ்வி வழங்கும் போது தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் இரு மாதங்களில் மட்டும் இளம் பெண்கள் கர்ப்பம் ஆவது சடுதியாக அதிகரித்துக் காணப்படுவதாக கூறிய அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக .ளம் பெண்களின் கர்ப்பம் ஆவது அதிகரித்துக் காணப்படுவதாகவும் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் இளம் வயதுப் பெண்களின் கர்ப்பம் தரித்தமை 256 ஆகவும் அதற்குள் திருமணமாகாத இளம் பெண்கள் கர்ப்பமாகியளது 90 ஆகவும் இருந்தது.ஆனால் செப்டம்பர், ஒக்ரோபர் ஆகிய இரு மாதங்களில் இளம் பெண்கள் கர்ப்பம் ஆனது 346 ஆகவும் அவற்றுள் திருமணமாகாத பெண்கள் கர்ப்பம ஆனது 114 ஆகவும் அதிகரித்துக் காணப்படுவதாக மருத்துவமனை அறிக்கைகளை கொண்டு சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை வெறுமனே அபிவிருத்தி தொடர்பாக மட்டும் குரல் கொடுத்துவரும் பொது அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் திருமணம் ஆகாத இளம் வயதுக் கர்ப்பங்களை தடுப்பதற்குரிய மற்றும் சமூக கலாசாரம் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்
மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. 🙁