இந்தியாவில் பெண்களை பணத்துக்கு விற்கின்ற பாலியல் .தொழில்அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமிகள், பெண்கள் 120 அமெரிக்க டொலருக்கு விற்கப்படுவதாகவும் இவர்களை அலங்கரித்து மணப் பெண் என்ற மாயை தோற்றுவித்து ஆண்களுக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆண்களால் விலைக்கு வாங்கப்படும் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள், வனமுறைக்களுக்குள்ளாக்கபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அல்ஜசீரா ஒரு ஆவணதப்படத்தை வெளியிட்டுள்ளது.
“மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே
வீட்டினில் எம்மிடம் காட்டவந்தார் – அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி” – என்று பாரதி பாடிச் சென்ற மண்ணில்… ஓ! மனது கனத்து வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொண்டு விட்டதான பரிதவிப்பு… விழிகள் பனித்துப் போயின.
மனிதர்கள் மிருகங்களை விடத் தரம் தாழ்ந்துதான் போய்விட்டார்கள்… ஏனெனில், எந்த மிருகமாவது காசு பெற்றுக்கொண்டு தன் உறவுகளை, தன் இனத்தை விற்பதில்லை, அல்லவா?
மிக்க வேதனையுடன்,
லறீனா அப்துல் ஹக்.