பெண் சமைப்பாள், படுப்பாள், பெற்றெடுப்பாள், விற்பாள் இழிவுபடுத்தப்பட்ட பிம்பங்களாய் பெருகி வழியும் வெளியில்
தினம் தினம் செத்துமடியும்
உடலை சுமந்து திரியும்
சடலங்களுக்கு மத்தியில்
உடலையே ஆயுதமாய்
உயர்த்தி பிடித்தாயோ
பெண் சமைப்பாள் படுப்பாள்
பெற்றெடுப்பாள் விற்பாள்
இழிவுபடுத்தப்பட்ட பிம்பங்களாய்
பெருகி வழியும் வெளியில்
மானுட விடுதலையும் வெளிச்சமும்
ஆள்வதும் அரசியலும்
ஆணின் கைகளில்
பச்சைக்குத்தப்பட்டதாக
பன்நூற்றாண்டுகளாக
கதைக்கும் சரித்திரத்தின்
கழிவுகளை எரியூட்டினாயோ
மக்கள் மன்றத்தில் நின்று
மானுட விரோதிகளுக்கெல்லாம்
தீர்ப்பு வழங்கினாயே
மூவரின் மரண தண்டனை
ரத்து செய்ய
மாமன்றம் மறுத்தால்
என்ன தோழி
மக்கள் மன்றம்
நியாயத் தீர்ப்பு வழங்க
மூன்று தோழிகள் உணவிழந்து
தமிழகமே திரண்டு நிற்க
உணர்வூட்டுகிறார்களே
தீயின் கொடூம் நாவுகளுக்கு
உன்னை தின்ன கொடுத்து
வீழ்ந்து கிடக்கும் தமிழரை
விழிப்பூட்ட நினைத்தாய்
தினம் தினம் செத்துமடியும்
உடலை சுமந்து திரியும்
சடலங்களுக்கு மத்தியில்
உடலையே ஆயுதமாய்
உயர்த்தி பிடித்தாயோ
மூன்று லட்சம் உறவுகளை
இழந்து நிற்கும் சோகம்
போதாதாம்மா
விழி விளக்கின் சிற்றொளியே
இனி; தோல்விகள் நமக்கில்லை தோழி
அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!
http://arulgreen.blogspot.com/2011/09/3.html