அன்னபூரணி (இலங்கை)
கடந்த வாரம் பல்வேறு சமூக அமைப்புக்கள் பெருமளவு கிறிஸ்தவ நிறுவனங்கள் ஒன்றிணைந்து கொழும்பில் நடாத்திய இந்நிகழ்வில் இலங்கையில் இடம்பெற்ற நீண்ட போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பிலான உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். |
மனிதவுரிமைகளுக்கான கிறிஸ்தவச் செயற்பாட்டாளரும் காணாமல் போன குடும்பத்தவர்கள் என்ற அமைப்பின் தலைவருமான பிறிற்றோ பெர்ணாண்டோ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் ‘தென்னிலங்கையில் கடந்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பாக நாம் பெரும் பணி ஆற்றியிருக்கிறோம். ஆனால் தற்போது நாம் எமது நாட்டை நேசிக்காதவர்களாக உள்ளோம் எனக் காரணங்காட்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எம்மை புறக்கணித்துள்ளார்.
தமது அன்புர்க்குரியவர்கள் காணாமல் போனதால் இத்தாய்மார் உருக்கும் கண்ணீரை நாங்கள் போதியளவு பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என எந்தவொரு இன, மத வேறுபாடும் காட்டாது தமது பிள்ளைகளைத் தேடியலைகின்ற தாய்மார்கள் அனைவரும் இந்நாட்டின் தாய்மார்கள் என்ற வகையில் அவர்களுக்கு நாங்கள் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றோம்.அவ்வகையில், தமது பிள்ளைகளைத் தேடியலைகின்ற இக்குடும்பங்களுக்காக நாங்கள் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.இலங்கையில் கடந்த முப்பது ஆண்டு காலமாக இடம்பெற்ற போரின் போது இலங்கை அரசாங்கமும், தமிழ் இயக்கங்களுமே இவ்வாறு பெரும் எண்ணிக்கையானவர்கள் காணாமல் போனதற்குப் பொறுப்புடையவர்களாவர்.இந்நிலையில் இலங்கையில் போர் முடிவுற்ற போதிலும் உண்மையில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்..
‘காணாமல் போன தமது பிள்ளைகளைத் தேடியலையும் இத்தாய்மார்களின் உளவுறுதியை நாம் பாராட்டுகின்றோம். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் தொடர்பான விபரங்களை காலதாமதமின்றி வெளியிட வேண்டும்.அத்துடன், இலங்கை படைத்தரப்பினரின் செயற்பாடுகள் சட்டத்தன் கீழ்ப்பட்டதாகவும் அரசியலமைப்புக்கு முரணாகாத வகையிலும் அமைதல் வேண்டும்.அதனடிப்படையில் இச்சம்பவங்களுக்குக் காரணமான தனிப்பட்டவர்களும், நிறுவனங்களும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ என மனிதவுரிமைகள்செயற்பாட்டாளரான நிமால்கா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்’ என ஊடகவியலாளரான மெலானி மானெல் பெரேரா எழுதிய செய்திக் கட்டுரையில் தெரிவக்கப்பட்டுள்ளது.