MAMA

-பெண்ணியா

ஒரு முறை முத்தமிட்டேன்
பிறகு நடந்து கொண்டே இருந்தேன்
திரும்பிப் பார்க்காமல்
நடந்து கொண்டே இருந்தேன்.
உனது காலடியில் இருந்த
எனது நாட்களுக்குள்.
நினைத்துப் பார்க்கிறேன்இந்த எனது அவளின் கண்களை
இறைவன் எனக்குத் தந்து விட்டதாய்
காணும் எல்லாப் பொருட்கள் மீதும்
கருணை வழிந்து கொண்டே இருக்கிறது
எரிந்து விழும் எவரின் மீதும்
கோபம் எழுவதேயில்லை.
லேசாய் புன்முறுவலிக்கிறேன்எதையோ கண்டுபிடிக்க முடியாத ஒன்றை
எப்போதும் தனக்குள்ளேயே வைத்திருக்கும்
உம்மாவைப்போல்.
பிறகு ஒரு தரம்
வெளிச்சம் அதிகமாய் இருந்த
ஒரு பகல் பொழுதில்
கடவுள் எனது தாயின் உருவை
எனக்கு வழங்கி விட்டான்
ஒரு Insulin ஐ
நாங்கள் போட்டுக் கொள்வதைப்போல்
அதிகமான நோய்களுக்குள்
நாங்கள் அகப்படுவதைப்போல்
28 வயதில்
எனது உம்மா இருந்ததைப்போல்.
மிதமான சருகுகளில்
அவள் நடக்கத் தொடங்கும்
நாட்கள் வரும்
முடிகள் அதிகமாய் நரைத்த பின்
அவள் அதிகமாய் பேசத் தொடங்கும் காலம் வரும்
ஒரு House court ஐ
நாங்கள் அணிந்து
இருவரும் நடக்க நினைக்கும்
ஒரு சாலை
எங்கேயோ ஒரு இடத்தில்
எங்களுடைய ஒரு Walking க்காக
காத்துக் கிடக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *