மாலதி மைத்ரி(இந்தியா)
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் தாமரை, கவிஞர் இன்குலாப், ஓவியர் டிராட்ஸ்கி மருது, கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் மீனா கந்தசாமி ஆகியோரை அமைப்பாளர்களாகக் கொண்ட இவ்வியக்கம் மரண தண்டனையை ஒழிக்கும்படி இந்திய அரசுக்கும், அதற்கு ஆவண செய்யும்படி தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
இவர்களின் இக்கோரிக்கைக்கு ஆதரவளித்து கையெழுத்திட்டுள்ளோர்,விபரங்களும் பெயர்களும் கீழே தரப்பட்டுள்ளன.இந்திய அரசே மரண தண்டனையை ஓழித்திடுக! – தமிழக அரசே இதற்கு ஆவண செய்திடுக!! –
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் தாமரை, கவிஞர் இன்குலாப், ஓவியர் டிராட்ஸ்கி மருது, கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் மீனா கந்தசாமி ஆகியோரை அமைப்பாளர்களாகக் கொண்ட இவ்வியக்கம் மரண தண்டனையை ஒழிக்கும்படி இந்திய அரசுக்கும், அதற்கு ஆவண செய்யும்படி தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இவ்வியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கிப்பட்டுள்ளதாவது:
‘சமூக வளர்ச்சிக்கேற்பக் குற்றங்களுக்கான தண்டனைகளும் தண்டனைகளை நிறைவேற்றும் வழிமுறைகளும் மாறியுள்ளன, தொடர்ந்து மாறியும் வருகின்றன. ஆண்டான் ஆடிமை, மேற்குடி கீழ்க்குடி என்ற சமூக உறவுகளையும், முடியாட்சி முறையையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த தண்டனைகளையும் தண்டனைமுறைகளையும் நாகரிக சமூகம் தொடரல் கூடாது. மரண தண்டனையும், அதைக் கொடிய முறையில் நிறைவேற்றுவதும் முடியாட்சிக்குரிய அடையாளங்களில் ஒன்று. முடிமன்னர் விரும்பினால் பலியிடப்படுகிறவனின் முடிவை மாற்றி எழுதலாம். , தண்டிக்கவும் மன்னிக்கவும் அவருக்கே அதிகாரம்.
வளர்ந்து செல்லும் உலகம் மரண தண்டனையை உதிர்த்து விட்டு முன்னேறிச் செல்கிறது. இன்றைய உலகில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்பு வகிக்கும் நாடுகள் 193. அவற்றில் 95 நாடுகள் மரணதண்டனையை அறவே ஒழித்து விட்டன. 8 நாடுகளில் போர்க்காலத் துரோகக் குற்றங்களுக்கு மட்டும் சாவுத் தண்டனை சாகாமல் வைக்கப்பட்டுள்ளது. 49 நாடுகள் மரண தண்டனையை ஏட்டளவில் எழுதி வைத்திருப்பினும் நடைமுறையில் பயன்படுத்துவதில்லை. 41 நாடுகள் மட்டும் மரண தண்டனையைக் கைவிடாதுள்ளன. இந்த நாடுகளில், கௌதம புத்தரையும் வள்ளலாரையும் காந்தியாரையும் உலகிற்களித்ததாகப் பெருமை பேசும் இந்தியாவும் ஓன்று.
விடுதலைப் போராட்டக் காலத்தில் அதை ஒடுக்க தூக்குத் தண்டனையை விரிவாகப் பயன்படுத்திய பிரித்தானியர் இப்போது தமது நாட்டில் அத்தண்டனையை ஆறவே ஒழித்துவிட்டனர். இந்தியாவிடமிருந்து பிரிட்டன் காந்தியத்தையும், பிரிட்டனிடமிருந்து இந்தியா குரூரத் தனத்தையும் கற்றுக்கொண்டது போலும்.
இந்தியாவிலும் கூட மரண தண்டனையாகிய தூக்குத் தண்டனையின் பயன்பாடு சுருங்கிக் குறைந்து விட்டது. சமூக விழிப்புணர்விலும் சட்டத்திலும் நீதிமன்றங்களின் ஆணுகுமுறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ‘சக்கியடித்தல்’ அரிய நிகழ்வாகி விட்டது.
தூக்கிலிடுவது குறைந்து போனதால் கொடுங்குற்றங்கள் தூக்கலாகி விட்டன என்று எவராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. இந்த நிலையில் இந்த நாட்டில் கொஞ்சநஞ்சம் மிச்சமிருக்கும் கொலைத் தண்டனையையும் அடியோடு ஒழித்துக் கட்டுவது உடனடித் தேவையாகும்.
தூக்கைத் தூக்கிலிடுவோம் என்று மனித உரிமைப் போராளிகள் ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, இந்திய அரசு ஓர் ஆரசியல் ஆயுதமாகத் தூக்குக் கயிற்றை கையில் எடுத்திருக்கிறது. பஞ்சாபைச் சேர்ந்த தேவிந்தர் பால் சிங், காசுமீரத்தைச் சேர்ந்த அப்சல் குரு, அசாமைச் சேர்ந்த தேவேந்திரநாத் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்து அவர்களைத் தூக்கிலிட முனைந்துள்ளது அரசு.
தமிழ் நாட்டிலும் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவரும் தூக்கிலிடப்பட வில்லை என்ற நிலையை மாற்றி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை இந்திய அரசின் உள்துறை ஆமைச்சகப் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவர் மறுதலித்து விட்டார் என்ற செய்தி நம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி திருப்பெரும்புதூரில் ஒரு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்குப் பின் 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் கருணை மனுக் கொடுத்து 11 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இவ்வளவு நீண்ட காலம் இருட் சிறையில் தூக்குக் கயிற்றின் நிழலில் செத்துச் செத்து வாழ்ந்த பின் அவர்களுக்கு இத்தண்டனையை நிறைவேற்ற முற்படுவது கொடுமையிலும் கொடுமை. மிக மிக நீண்ட இந்த காலத் தாழ்விற்கு இந்திய அரசு எந்த விளக்கமும் தரவில்லை. இது போல் நீண்ட காலத் தாழ்வு ஏற்பட்ட பல வழக்குகளில் அந்த ஒரு காரணத்திற்காகவே இந்திய உச்ச நீதிமன்றம் தண்டனைக் குறைப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. காலங்கடந்து தூக்கிலிடுதல் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது ன்பது ந்தியாவில் மட்டுமல்ல, ஊலக ஆளவிலும் நிலைபெற்று விட்ட ஓரு நீதிக் கட்டளையாகும்.
ராசீவ் கொலை வழக்கில் அரசுத் தரப்பினால் முன்னிறுத்தப்பட்டு, நீதி மன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்று முழுவதையும் அப்படியே உண்மை ஏன்று வைத்துக் கொண்டாலும் குற்றச் சதியிலோ குற்ற நிறைவேற்றத்திலோ பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் பங்கில்லை என்பது தெரியவரும்.
சதித் திட்டம் தீட்டியவர்களும், அத்திட்டத்தை நிறைவேற்றி முடித்தவர்களும் பிடிபட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டு ஆவர்களின் குற்றமும் மெய்பிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றம் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்திருக்கக் கூடும். அப்படி நடைபெறும் போது இந்த மூவருக்கும் அதே தண்டனையை விதித்திருக்க முடியுமா என ஏண்ணிப் பார்க்க வேண்டும்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய இந்த மூவரும் கடந்த 20 ஆண்டுக் காலத்தைச் சிறையில் எவ்வாறு கழித்துள்ளார்கள் என்பதும் கவனத்திற்குரிய செய்தி. பேரறிவாளன் தன் சிறை வாழ்க்கையில் கணினிப் பயன்பாட்டில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார், வேறுபல கல்விச் சாதனைகளும் புரிந்துள்ளார் என்பதற்கும் மேலே, சிறைப்பட்ட எளியோர் பலரின் கல்விக் கண் திறக்கவும் துணை புரிந்துள்ளார்.
ஈழத்தமிழர்களான சாந்தனும் முருகனும் கல்வித் துறையிலும் கலையிலக்கியத் துறையிலும் செயல் துடிப்பு மிக்கவர்கள் ஏன்பதைச் சிறையதிகாரிகளே சொல்வார்கள். வெளியே நடைபெற்ற இலக்கியப் பெரும் போட்டிகளில் உள்ளிருந்தபடி பரிசுகள் வென்ற பெருமை சாந்தனுக்கு உண்டு.
இந்த மூன்று உயிர்களையும் காக்குமாறு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் முதல் அமெரிக்கப் பேரறிஞர் நோம் சோம்ஸ்கி வரை எத்தனையோ பெருமக்கள் இந்திய அரசுக்கும், இந்திய அரசிடம் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மூவரையும் மீட்டுத் தரும்படி தமிழக ஆரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். தமிழகத்தின் கலை – ஈலக்கியப் படைப்பாளிகளாகிய நாங்களும் இந்த உணர்வார்ந்த வேண்டுகோளில் எம்மை இணைத்துக் கொள்கிறோம்.
இந்திய அரசே, மரண தண்டனையை அறவே ஓழித்திடுக! தமிழக அரசே, இதற்கு ஆவண செய்திடுக! பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிரைக் காத்திடுக!
தமிழ்நாட்டின் கலை – இலக்கியப் படைப்பாளிகள் சார்பில் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.
இது குறித்த மேலதிக தொடர்புக்கு: 98401 52455, 94440 90186.
இவர்களின் இக்கோரிக்கைக்கு ஆதரவளித்து கையெழுத்திட்டுள்ளோர்:
எழுத்தாளர்கள்:
கி.ராஜநாராயணன் – சாகித்திய அக்கடமி விருது, தி.க.சிவசங்கரன் – சாகித்திய அக்கடமி விருது, நீல.பத்மனாபன் -சாகித்திய அக்கடமி விருது, பிரபஞ்சன் – சாகித்திய அக்கடமி விருது, பொன்னீலன் – சாகித்திய அக்கடமி விருது
நாஞ்சில் நாடன் – சாகித்திய அக்கடமி விருது, ம.ஈ.லெ.தங்கப்பா – சாகித்திய அக்கடமி விருது (குழந்தைகள் இலக்கியம்), தோப்பில் முகமது மீரான் – சாகித்திய அக்கடமி விருது, பேரா. தொ.பரமசிவன், தமிழவன், பா.செயப்பிரகாசம், பேரா. வீ.அரசு, எஸ்.வி.இராசதுரை, பேரா. ந.முத்துமோகன், பேரா. ஆ.ராமசாமி, பேரா. க.பஞ்சாங்கம், பேரா. அ.மார்க்ஸ், பேரா. அரசேந்திரன், பேரா. திருமாவளவன், பேரா. மறைமலை இலக்குவனார், சிகரம் ச.செந்தில்நாதன், மா.ஆரங்கநாதன், கோவை ஞானி, ஞாநி, பூமணி, வாசந்தி, வண்ணதாசன், அமரந்தா, . தமிழ்நாடன், சோ.தர்மன், ஸ்டாலின் ராஜாங்கம், தேவிபாரதி, கண்ணன் (காலச்சுவடு), அம்பை, சிவசங்கரி, சுரேஸ்குமார் இந்திரஜித், கோணங்கி, ஈரா.மகராசன், பூங்குழலி, பவா.செல்லதுரை, காமுத்துரை, குறிஞ்சிவேலன், கீரனூர் ஜாகிர் ராசா, இளசை அருணா, கிருஷி, நெய்வேலி பாலு, ச.பாலமுருகன், பாமரன், ஈரா. முருகவேள், ஜமாலன், தமிழ்நதி, பெருமாள் முருகன், அருண்மொழிவர்மன், குரு. ராதாகிருட்டிணன், விழி பா.இதயவேந்தன், தளவாய் சுந்தரம், ஆப்பணசாமி, சி. சண்முக சுந்தரம், ஆ.முத்து கிருஷ்ணன், வெளி ரங்கராசன், தமிழ் முகிலன், மணவை. தமிழ்மணி, பத்திநாதன், ரவிந்திர பாரதி, வசந்த குமார், நிழல்வண்ணன், பிர்தேளஸ் ராஜகுமாரன், நசீர், தங்கவேல், சுப.தேசிகன், அழகிய பெரியவன், அபிமானி, புதிய ஜீவா, பாட்டாளி மூர்த்தி, ந.முருகேச பாண்டியன், வ.கீதா, மருதன், ரவிகுமார், ஜென்ராம், ஜி. குப்புசாமி, பவியா, இந்திரன், ச.தேவதாஸ், தி.சிகாமணி, கழனியூரன், கே.வி.ஜெயசிறி, யோ.திருவள்ளுவர், வரிதையா கான்ஷ்டைன், ஜெரோம், ஜஸ்டின் திவாகர், மேரி ரேச்சல், மேரி ஜெரின், சூசை அருள், வெனிஸ், சோரிஸ் அண்டனி, ராஜேந்திரன், மெல்கிஸ், பாஸ்கர் சக்தி, முத்துமீனாள், அனிருத் வாசுதேவன், ராஜன்குறை. சந்திரா, களந்தை பீர்முகமது, ரமேஷ்பிரேம், தென்பாண்டியன், மணிகண்டன், விஷ்ணுபுரம் சரவணன், அகதா அருள், தூரன்.குணா, ஏன்.டி.ரவிக்குமார், ஆதவன், சுபா, சுதேசமித்திரன், தமிழ்மகன், பாரதி தம்பி, தமயந்தி, நாதாரி, உமாசக்தி, அரங்க மல்லிகா, பாமா, கிருதியா, இர்.இர்.சீனிவாசன், பாலுமணிவண்ணன், செந்தமிழன், கவிதா பாரதி, அருள்செழியன்.
கவிஞர்கள்:
புவியரசு – சாகித்திய அக்கடமி விருது, சிற்பி -சாகித்திய அக்கடமி விருது, ஈரோடு தமிழன்பன் – சாகித்திய அக்கடமி விருது, அப்துல் ரகுமான் -சாகித்திய அக்கடமி விருது, மு.மேத்தா – சாகித்திய அக்கடமி விருது, புலமைப்பித்தன், இன்குலாப், தணிகைச் செல்வன், அறிவுமதி, வாலி, முத்துலிங்கம், பழமலய், விக்கிரமாதித்யன், மனுஷ்யபுத்திரன், பாரதிபுத்திரன், பச்சியப்பன், தமிழ்நாடன், கவிபாஸ்கர், யாழன் ஆதி, மாலதி மைத்ரி, தாமரை, சுகிர்த ராணி, குட்டி ரேவதி, சல்மா, தமிழச்சி தங்கபாண்டியன், கிருசாங்கனி, ச.விசயலட்சுமி, ஆ.வெண்ணிலா, மதுமிதா, நா.சுப்புலட்சுமி, தி.பரமேஸ்வரி, மீனா கந்தசாமி, இளம்பிறை, பழனிபாரதி, கபிலன், யுகபாரதி, பிரான்சிஸ் கிருபா, யுவபாரதி, ஏச்.ஜி.ரசூல்,அன்பாதவன், சமயவேல், லீனா மணிமேகலை, கடற்கரய், ரவிசுப்ரமணியம், அனிதா தம்பி (கேரளா), வி.ஏம்,கிரிசா (கேரளா), அன்வர் அலி (கேரளா), பி.பி. hமசந்திரன் (கேரளா), கே.ஆர்.தோனி (கேரளா), எஸ்.ஜோசப் மனோஜ் கரூர், பி.இராமன், பி.என்.கோபிகிருஷ்ணன், இரபீக் அகமத், சிறிபதி பத்மநாபா, இசை, நெல்லை ஜெயந்தா, லட்சுமி மணிவண்ணன், தபூ சங்கர், ஒப்பமாதவன், செல்மா பிரியதர்சன், மீனாட்சி சுந்தரம், பாலை நிலவன், திலகபாமப, உமா மகேஸ்வரி, நா.விசுவநாதன், பூவை செங்குட்டுவன், நா.காமராசன், இந்திரன், பொன்.இளவேனில், இளந்சேரல், நா.முத்துக்குமார், பா.விஜய், சினேகன், விவேகா, கவிவர்மன், சங்கரராம சுப்ரமணியன், இளங்கோ.கிருஷ்ணன், அமிர்தம் சூர்யா.
எழுத்தாளர்கள் – பிற நாட்டினர்
நோம்சாம்ஸ்கி (அமெரிக்கா), பினாயக் சென், ஆனந்த் பட்வர்த்தன், மார்கரெட்டிராவிட், வரவர ராவ் (இந்திரா), மகாசுவேதா தேவி (வங்காளம்), மகேஸ்தத்தானி, எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (டெல்லி), கி.பி.அரவிந்தன் (பிரான்ஸ்), சோபா சக்தி (பிரான்ஸ்), கலையரசன் (நெதர்லென்ட்ஸ்), அரித்தாஸ் (தென் ஆப்ரிக்கா), நாக இளங்கோவன் (துபாய்), யமுனா ராசேந்திரன் (லண்டன்), மு.புஸ்பராசன் (லண்டன்), செல்வம் (கனடா), முல்லை அமுதன் (லண்டன்), கவிமதி (துபாய்), பானு பாரதி விமல் (நார்வே), பெருந்தேவி (அமெரிக்கா), காஞ்சனா தாமோதரன் (அமெரிக்கா), அனலை நித்திஸ்குமார் (பிரான்ஸ்), சர்லொட் ஹில்ல் ஃநீல் (தான்சானியா), ரவி சங்கர் – எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்பாளர் (கேரளா), ராயான் நாகாஸ் (காஷ்மீர்), ரஜினி ராசம்மா (ஜெர்மனி), பாரதிதரன் (லண்டன்), கார்த்திகா நாயர் (பிரான்ஸ்),
உமா வரதராசன் (ஈழம்), அரசி (ஈழம்), இனசுதலக் (பிரான்ஸ்), கோபிதாஸ் தர்மராசா (இலங்கை),இசிப் மீரான் (துபாய் தமிழ் மன்றம் சார்பாக), தமிழ்நாடன் (குவைத்), தீபச்செல்வன் (ஈழம்) எம்.எஸ்.கோபாலரத்னம் (ஈழம்).
பத்திரிக்கையாளர்கள்:
அமுதா, பகவான் சிங், கவிதா முரளிதரன், பிரியா தம்பி, கவின்மலர், கார்டுனிஸ்ட் பாலா, அருள்ஏழிலன், மீ.தா.பாண்டியன், ஜீவா சுப்ரமணியன், கார்த்திக், சுரேஷ், ஸ்டாலின், வால்டர்ஸ் ஸ்காட், சேகர், கோலப்பன், சுரேஸ், பாரதி தம்பி, ராஜமுருகன், சகினா நபிசா (புது டெல்லி), கோ.வி.லெனின், வெற்றிவேல், ஏகலைவன், திருமாவேலன், ஈரா.சரவணன், தமிழ்க்கனல், மணல்வீடு ஹரிகிருஷ்ணன், புது எழுத்து மனோன்மணி, பாரி செழியன், உயிர் எழுத்து கதீர் செந்தில்.
ஓவியர்கள்:
மணியம் செல்வன், மாருதி, டிராஸ்ட்கி மருது, வீரசந்தனம், புகழேந்தி, மனோகர், சிவா, ஷியாம், சிவராம், தங்கவேல், செழியன், விஸ்வம், ஆரஸ், பாலா, வள்ளிநாயகம், சந்துரு, எ.எல்.அபராசிதன், என்.ராமசந்திரன், அனாமிகா ராமசந்திரன், பி.ராமசந்திரன், பெனிட்டா பெரிசியால், எஸ்.குமரேசன், வி.யுவன், போதிசத்துவர், கே.ஆர்.அனிஸ், சரவணன், லட்சுமணன், கௌதம் மாதவன் நாயர், பி.மணிவண்ணன், உஸ்வந்திரன், டி.புருசோத்தம்மன், நரேந்திரன், சி.பி.கிருஷ்ணபிரியா, காந்திராஜ், எழில், வின்சண்ட் டேவிட், ஹரி, விஸ்வநாதன், சக்கரபாணி, யுவராஜ், பிரகாஷ், ஜீவமணி, சித்திரை, ராசசேகர், ஆபரகாம், சுரேஷ்குமார், நாகராஜ், மதன், திருநாவுக்கரசு.
திரைத்துறைக் கலைஞர்கள்:
ஆர்.சுந்தராஜன், ஆர்.கே.செல்வமணி, சீமான், ராம், மணிவண்ணன், சேரன், அமீர், எஸ்.பி.சனநாதன், தாமிரா, சீனு ராமசாமி, சிம்புதேவன், கரு.பழனியப்பன், சத்யராஜ், ஆர்.பார்த்திபன், அஜயன் பாலா, அமுதன், குரு, வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், தங்கர்பச்சான், புகழேந்தி தங்கராஜ், கௌதமன், சுசீந்திரன், திருமுருகன், கே.வி.ஆனந்த், தேனி ஈஸ்வரன், இளவரசு, சுப்ரமணியம், காமகோடியன், அருண்மொழி, ஈஸ்வரி, வேலு, ஆனந்த்.
நாடகவியலாளர்கள்:
அ.மங்கை, முருக பூபதி, வெளி ரங்கராசன், சிறிதேவி, தரணிதரன், குமார் அம்பாயிரம், அஷ்வின், பெனிட்டோ, குமார், குமரன், வசந்த், வினோத்.
தொலைக்காட்சிக் கலைஞர்கள்:
தினேஷ், பாலா, கூ.கூசிவராஜ், ஏஞ்சல் கிளாடி, காளிஸ்வரி, முருகதாஸ், வேலு, ஆனந்த், கார்த்தி, பாலு, கன்யா பாரதி, முத்துச் செல்வன், திருச்செல்வம்.