கவிதைகளின் சமகாலத்தன்மை சமூக அரசியில் நிகழ்வுகளின் மீதான தனது சிந்தனைகளை நேர் பட பதிவு செய்தல்புதியமாதவியின் பலம் தம் வாழ்வோடு மிகத் நெருங்கிய தொடர்படைய அரசியல் இயக்கதத்தையும் வெளிப்படையாக விமர்சிக்கும் புதியமாதவியின்நம்மூர் கவிதாயினிகளுக்கு வாய்க்காதது துரதிஷ்டமே.
தாம்
கவிதையில் சொல்கிற சங்கதிகளை, தாம் சார்ந்திருக்கிற இயக்கம்
ஏற்றுக்கொள்கிறதா என்று கூட உணராமல் பதவியின் மீது கண் வைத்து
இசை நாற்காலியில் சுழலும் கவிதாயினிகளைப் பார்த்துப்
பரிதாபப்படவே செய்கிறார்கள் தொடர்ச்சியான வாசிக்கும் வழக்கம்
கொண்ட நேர்மையான விமர்சகர்களும், வாசகர்களும் கூடவே
இலக்கியத்தின் உபாசகர்களும். (அன்பாதவன் எழுதிய முகவுரையிலிருந்து)
ஐந்திணையிலிருந்து ஓர் கவிதை நன்றியுடன் பிரசுரமாகிறது.
என் முகம்
தூரத்திசையிலிருந்து
காற்றின் அலைகளில்
கலந்து ஒலிக்கும்
உன் இசையில்
என் ராகத்தைத் தேடித்தேடி
களைத்துப் போய்விட்டேன்
நீ விரும்பி சேர்த்துக் கொண்டதும்
விரும்பாமல் சேர்ந்து கொண்டதுமான
இசைக்கருவிகளின்
ஓங்கார ஒலிமேடையில்
சிதைந்துப் போய்விட்டது
என் பாடல்
அனுபவக்கடலில்
மூழ்கி மூச்சடைத்து
பவளப்பாறைகளில்
மோதிக் கண்டெடுத்த
முத்து மாலை
கைதட்டல்களில்
காணாமல் போய்விட்டது
உன் உயிர்த்துடிப்பில்
ஒளிந்திருக்கும்
என் கவிதையின் ஜீவனை
அடைகாப்பதற்குள்
உடைந்து போகும்
கருமுட்டைகள்
ஓர் ஆடையைக் களைவதற்குள்
ஓராயிரம் ஆடைகள்
ஓடிவந்து ஒட்டிக்கொள்கின்றன
என் முகம்
பழசாகிப்போன ஆடைகள்
கிழிந்து தொங்கும் ஆடைகள்
வெளியில் தெரியாமல்
மறைத்துக் கொண்டு
புதிய ஆடைகளுடன்
ஆடைகளின் அங்காடியாய்
நடுத்தெருவில்
நிர்வாணத்தில் மட்டுமே
எப்போதாவது
விழித்துக்கொள்கிறது
என் முகம்.