கி.கலைமகள்
எங்களை இப்படியே தனியே இருக்க விடுங்கள்
எந்த பாதையையும் கடக்க விருப்பமில்லை
முன்னமே வகுக்ககப்பட்ட இந்த விதிகளை சுமந்தபடி
முன்னம் ஒரு பொழுது
கடக்க முனைந்த அதே இடத்தில்
அப்படியே நீங்கள் எண்ணியபடி
இங்கு அதிக வெளிச்சமோ காற்றோ
உங்களை பயமுறுத்தும் சுதந்திரமோ
எங்களிடமில்லைஎங்களை இப்படியே
தனியே இருக்க விடுங்கள்
உங்களை அச்சுறுத்தும் எந்த காரியத்ததையும்
நாங்கள் இனிசெய்யப்போவதில்லை
நீங்கள் விட்ட அதே இடத்தில்
எல்லாம் உங்களுக்கு ஏற்றவாறே
ஆனால் கெட்டியாக
எங்களோடு பிணைக்கப்பட்ட
விடுதலைக் கனவுகளை
நீங்களோ நாங்களோ என்ன செய்யதிட முடியும்
கவிதை நீட். டைட்டில் குட்