-தகவல்- யசோதா (இந்தியா)
இலங்கை அரசின் பொய் வாக்குறுதிகளில் நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம் – என இந்தியாவின் பெண்கள் உரிமைகளுக்கான செயற்பாட்டளர்கள் மையம் அறிவித்துள்ளது.இவ் அறிக்கையை புதுடெல்லி, மும்பை, மகாரிஷ்ரா, தமிழ்நாடு, என இந்தியாவின் பன்முக தளங்களில் இயங்குகின்ற பெண்ணிய வாதிகள், மனித உரிமைவாதிகள் இணைந்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.இலங்கை அரசின் பொய் வாக்குறுதிகளில் நம்பிக்கை இழந்துவிட்டோம். இலங்கை அரசு, சமாதானத்தையும், மறுவாழ்வையும் பாதிக்கப்பட்ட பெண்கள், மற்றும் கணவனையிழந்த பெண்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென, இந்தியாவின் (மகளிர்) பெண்களுகளின் உரிமைகளுக்கான வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர
பெண்ணியவாதிகள், மனித உரிமை: செயற்பாட்டாளர்கள் 35; பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;. கையெழுத்துயிட்டவர்களின் பெயர்கள் வருமாறு.
Dr. Uma Chakravarty, Historian, New Delhi – Dr. Ilina Sen, Professor, Wardha, Maharashtra / Dr. Rohini Hensman, Mumbai / Geetha.V, Chennai – Madhu Mehra, Partners for Law in Development, Delhi / Ammu Abraham, Mumbai – Saheli, Delhi / Forum Against Oppression of Women, Mumbai / Lesbians and Bisexuals in Action, Mumbai / Jeny Dolly, Chennai / Karuna, Chennai / Kabi Sherman, Mumbai / Pramada Menon, Delhi / Kamayani Bali Mahabal, Advocate, Mumbai / Shipra Nigam, Delhi / Amrita Shodan, London – Saumya Uma, Women’s Research and Action Group, Mumbai / Vimochana, Bangalore / Dr. Mary. E. JOhn, Director, Centre for Women’s Development Studies, Delhi / Meena Saraswati Seshu, Sangli, Maharashtra / Kaveri Indira, Bangalore / Programme on Women’s Economic Social and Cultural Rights, PWESCR, New Delhi – Lakshmi Lingam, Professor, Women’s Studies, Mumbai / Sonal Shukla, Mumbai / Dr. Leena Ganesh, Mumbai / Laxmi Murthy, Consulting Editor, Himal Southasian / Jayashree Subramanian, Eklavya, Madhya Pradesh / Ponni Arasu, Researcher, Chennai. / Paromita Vohra, Filmmaker, Mumbai. / Anusha Hariharan, New Delhi. / Dr. Kochurani Abraham, Dept. of Christian Studies, University of Madras / Ms. Virginia Saldanha -Satyashodak – Mumbai / Urvashi Butalia, Zubaan, New Delhi / Geeta Charusivam, Social Activist, Chennai / Mangai, Theatre person, Tamilnadu
இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாக இந்திய அரசின் மௌனத்தையும் இலங்கையின் மனிதஉரிமை மீறல்களில் இந்திய அரசின் பங்களிப்பையும் மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, இலங்கையில் தமிழர்களின் வாழ்விடங்களில், இந்திய அரசு நிறுவுகின்ற பாரிய உற்பத்தி மையங்களை நிறுவுவதையும் வன்மையாக கண்டிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அN வேளை ஐக்கிய நாடுகள் சபையில் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளை அகற்றுவதற்கான கூட்டமர்வில், இலங்கை;கு எதிராக பெருமளவிலான ஆதாரங்களை தாங்கள் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கூட்டறிக்கையில் அவர்கள் விடுத்துள்ள தீர்மானங்களாக
– போரினால் இடம்பெயர்ந்த பெண்கள் தமது வாழ்விடங்களில் வாழ உடனடியாக வழி செய்யப்பட வேண்டும்.
– உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு பெண்களும் குடும்பங்களும் வீடு திரும்ப வழி செய்யப்பட வேண்டும்.
– மக்களின் வாழ்விடங்களில் இந்திய அரசின் திட்டமிட்ட பாரிய உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கும் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
– நாட்டை இராணுவ மயமாக்குவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
– காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உடனடியாக முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.