யசோதா(இந்தியா)
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் பெண்கள் கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களில் மீட்கப்படுவது வெறும் 2 சதவீதம் தான். ஒரு பெண் கடத்தப்பட்டால் 14 விதமான வழிமுறைகளில் வௌ;வேறு தொழில்களுக்கு அவர்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள் கடத்தல்காரர்கள் என தெரியவருகிறது. |
உலகத்தில் மிக அதிகமாக நடக்கும் குற்றச் செயல்களில் முதலிடம் வகிப்பது போதை பொருள் கடத்தல். இரண்டாவது இடம் {ஹமன் டிராஃபிக்கிங் என்று சொல்லப்படும் இளம் பெண்களை கடத்துவது தான் இன்று முக்கிய குற்றச் செயல்களாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் பெண்கள் கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களில் மீட்கப்படுவது வெறும் 2 சதவீதம் தான். ஒரு பெண் கடத்தப்பட்டால் 14 விதமான வழிமுறைகளில் வௌ;வேறு தொழில்களுக்கு அவர்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள் கடத்தல்காரர்கள் என தெரியவருகிறது. அதில் முக்கியமானது பாலியல் தொழிலுக்கு அவர்களை வேறு நாடுகளுக்கு கடத்திச் சென்று விற்று விடுவது.
யுனெஸ்கோ நிறுவனத்தால் வெயிடப்பட்டுள்ள இப் புள்ளி விபரம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருவாகக் கொண்டு இயக்குநர் குழந்தைவேலன் பொறுப்புணர்வோடு இப் பெண்கடத்தல் பிரச்சினையை பொறுப்பாக கவனமாக சினமாவாக நமக்கு தந்துள்ளார்.
இரவுவேலை முடித்து அதிகாலை வீடு திருப்பும் டெலிகாலர் ஸ்ருதியை மூன்றுபேர் கொண்ட கும்பல் காரில் கடத்துகிறது. பிறகு அதே கும்பல் வௌ;வேறு இடங்களில் மூன்று பெண்களை கடத்திச் செல்கிறார்கள். ஸ்ருதியின் குடும்பம் தவித்துப் போகிறது. தொழில்முறை கடத்தல்காரர்களால் ஸ்ருதி கடத்தப்பட்டதை அவரது செல்போன் மூலம் கண்டுபிடிக்கும் காதலன் நேரடியாக களத்தில் இறங்குகிறார்.
காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரியான சம்பத் உதவியுடன் காதலியை தேடிச் செல்வதில் தொடங்குகிறது படம். இறுதியில் ஸ்ருதி உட்பட கடத்தப்பட்ட நான்கு இளம்பெண்களையும் நாயகனால் மீட்கமுடிந்ததா என்பதை சினிமாத்தனங்கள் அதிகமில்லாத திரைக்கதை மூலம் இயல்பாக காட்சிப்படுத்தியிருகிறார் இயக்குனர்.
மாதவிலக்கில் அவதியுறும் கடத்தப்பட்ட நான்கு பெண்களில் ஒருத்திக்கு கடத்தல்காரன் நாப்கின் கொடுக்கும் ஒரு காட்சி பெண்களை கடத்தி எத்தனை அவதானத்துடன் சர்வதேச மாபியாக்களிடம் விற்கிறார்கள் என்பதற்கு..! சாட்சியாக உள்ளது.
இதுபோன்ற கொடூர கடத்தல்களின் நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது என்பதைக் காட்ட இயக்குனர் செய்திருக்கும் உழைப்பு நம்மை மூக்கில் விரல் வைக்கத் தூண்டுகிறது. நமக்கு அருகாமையில் சம்பவங்கள் நிகழ்வது போன்ற காட்சிகளை யதார்த்தமாக அமைத்து காட்டுவதில் வெற்றிபெற்றிருகிறது.
முக்கியமாக உண்மைக் குற்றங்களின் அடிப்படையிலான இந்தக்கதையில் செயற்கைத்தனமாக அம்சங்களை அதிகம் நுழைக்காமல் யதார்த்தமாக உள்ளது
இப்பிரச்சினை இளம் பெண்களுக்கும், இளம் சகோதரிகள் மீது உயிரையே வைத்திருக்கும் சகோதரர்களுக்கும் பெண் பிள்ளைகளை தங்களின் கனவாக நினைத்து வளர்க்கும் பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை மணி அடித்திருகிறது இந்தப்படம் .பாரதியின் கம்பீரமான கவிதை வரியையை படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்கள். உண்மையில் இந்த தலைப்புக்கு மரியாதை சேர்த்திருக்கும் படம்!