ஈழத் தமிழர்கள் பலர் சுவிஸ் ஐநாவுக்கு முன்னால் கூடி இறுதிச் சமரில் உயிர் நீத்த பொது மக்கள் போராளிகள; அனைவரையும் நினைவு கூருமுகாவம் , ஐ. நா நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில், இனப்படுகொலை மேற்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையிலும் ஐநா முன்றலுக்கு முன்னால் அணிதிரண்டுள்ளனர்
ஒருஇலட்சம் தமிழ் மக்கள் இன்னமும் மீள் குயேற்றப்படாத நிர்க்கதி நிலையில் – ஐ.நா. அமைப்பு
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. ஆயினும் யுத்தத்தின் காரணமாக சொந்த வாழ்விடங்களைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களில் இன்னமும் ஒரு லட்சம் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று தெரிவித்திருப்பதாகச் செய்தித்தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருப்பதாக மேலும் அறியப்படுகிறது.
இடைத்தங்கல் நலன்புரி முகாம்களில் இருந்து வெளியேறிய மக்களில் பெரும் அளவிலான மக்கள் இன்னமும், அவர்களது வீடுகளுக்கோ விவசாய நிலங்களுக்கோ திரும்பவில்லை என்றும், இவ்வாறான மக்கள் நீண்ட காலமாகத் தங்கள் சொந்த வாழ்விடங்களைப் பிரிந்து, உறவினர்கள் வீடுகளிலேயே வசித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது. இதேவேளை தடுப்பு முகாமில் இருந்து இன்னமும் 4,981 குடும்பங்கள் வெளியேறவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.