வன்னியில் நடத்திய போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் யுத்த மீறல்கள் மற்றும் இனப்படுகொலை விவகாரம் குறித்து இதுவரை பத்திரிகைகளில் கசிந்து வெளிவந்துள்ள ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி இந்தியா தனது நிலைப்பாட்டை அல்லது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. |
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? – என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது.வன்னியில் நடத்திய போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் யுத்த மீறல்கள் மற்றும் இனப்படுகொலை விவகாரம் குறித்து இதுவரை பத்திரிகைகளில் கசிந்து வெளிவந்துள்ள ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி இந்தியா தனது நிலைப்பாட்டை அல்லது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ நா நிபுணர்குழுவின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில், அதன் சில பகுதிகள் இலங்கை மற்றும் இணையத்தளங்களில் ஊடகங்களில் கசிந்துள்ளமை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இவ் அறிக்கை குறித்து இந்தியா தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்திய இயக்குநர் மீனாக்ஷி கங்கூலி கோரியுள்ளார். இது தொடர்பாக பி.பி.சி தமிழோசை வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்தியா தற்போது ஐ.நா வின் பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இருக்கிறது. எனவே இந்த அறிக்கை தொடர்பாக எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் எடுக்கப்படும் முடிவில் இந்தியாவுக்கும் ஒரு பங்கு இருக்கும் என்று நாங்கள் எதிர்பாக்கிறோம்’
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக விரும்பும் இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கைகளை அதற்கு ஏற்ற வகையில் வகுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மீனாக்ஷி கங்கூலி பி.பி.சி க்கு தெரிவித்துள்ளார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இந்தியா அது தொடர்பில் தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவிடம்இ போர் குற்றங்கள் இடம் பெற்றனவா என்று கண்டறிந்து, தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான பொறிமுறைகள் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிகட்ட போரின் போது அரச தரப்பினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்பதற்கான சான்றுகள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.
மோதலற்ற பகுதிகள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் அரச தரப்பால் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்இ போர் பகுதிகளிலிருந்து வெளியேற முயன்றவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமக்கு முன்னர் வைக்கப்படும் ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை என்று இலங்கை அரசு கூறுமாயின்இ எது உண்மை என்பதை ஒரு வெளிப்படையான விசாரணை மூலம் தெரிவிக்க வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பாகும் எனவும் மீனாக்ஷி கங்கூலி வலியுறுத்ததிக் கூறியுள்ளார்.
சீனாஇ ஜப்பான் போன்று இலங்கையுடன் நட்புடன் இருக்கும் நாடுகளும் இலங்கை அரசு ஒரு நியாயமான விசாரணையை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் நிலைப்பாடு எனவும் அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.