வ. கீதா
பெண்களின் தனித் தன்மையை, ஆற்றலை அவ்வப்போது சிலாகிக்கும் ஆண்கள் கூட, கருணை, பாசம், சொந்தம், பெருமிதம் என்பன போன்ற, மனதுக்கு இதம் தரும் உணர்வுகளினூடாகவே பெண் விடுதலையை அணுகியுள்ளனர். அல்லது பெண்கள் படும்பாட்டை துயரத்தை, வலியை கண்டு இரங்குபவராக தம்மை இனங்காட்டிக் கொண்டுள்ளனர். |
1970களின் இறுதி ஆண்டுகளிலிருந்தே பெண்ணுரிமை, பெண் விடுதலை, சோசலிச சமுதாயம் அமைக்க நடத்தப்படும் போராட்டங் களுக்கும் பெண் விடுதலை செயல்பாடுகளுக்கும் இடையிலான உறவு ஆகியன குறித்து தமிழ் நாட்டில் பலர் பேசியும் எழுதியும் வந்துள்ளோம். செயல்பாட்டிலும் இவ்விஷயங்களை அன்று ஆராய்ந்தோம்இ இன்றும் ஆராய்ந்து வருகிறோம் என்றாலும், பெண் விடுதலை செயல்பாடுகளின் வரலாறு பொது நினைவில் தனக்கான இடத்தைப் பெறுவதென்பது இன்று வரைக்கும் குதிரைக் கொம்பாகவே உள்ளது. என்னதான் பெண்கள் பேசினாலும், வித்தியாசமான வாழ்க்கைகளை வாழ்ந்தாலும் ஆண்கள புழங்கும் அறிவுலகமும் சரி, அவர்களது அகவுலகமும் சரி, மிக ஜாக்கிரதையாக இவற்றை தமது எல்லைகளுக்குள் வரவிடாது தடுத்துள்ளன. பெண்களின் தனித் தன்மையை, ஆற்றலை அவ்வப்போது சிலாகிக்கும் ஆண்கள் கூட, கருணை, பாசம், சொந்தம், பெருமிதம் என்பன போன்ற, மனதுக்கு இதம் தரும் உணர்வுகளினூடாகவே பெண் விடுதலையை அணுகியுள்ளனர். அல்லது பெண்கள் படும்பாட்டைஇ துயரத்தை, வலியை கண்டு இரங்குபவராக தம்மை இனங்காட்டிக் கொண்டுள்ளனர்.
ச. தமிழ்ச்செல்வனின் “பெண்மை என்றொரு கற்பிதம்” இத்தகைய உணர்வுகளால் கட்டமைக்கப்படும் மனவெளியை கடந்து விட்டதாகக் கொள்ள முடியாது என்றாலும்இ இதில் துலங்கும் வாதபிரதிவாதங்கள் தனிnயhருவரின் உளப்பாங்கைக் கடந்த நியாயத்தை இந்நூலுக்கு வழங்குகின்றன. பெண்ணிய சிந்தனை, இயக்கங்கள் குறித்து தமிழச் சூழலில் அண்மைக் காலங்களில் வெளியாகியுள்ள பல நூல்களின் சாராம்சத்தை தனக்கேவுரிய எழுத்துப் பாணியில் இவர் இந்நூலில் வழங்கியுள்ளார் – கொஞ்சம் நகைச் சுவை, தேவைப்பட்ட அளவுக்கு இலக்கியம், வாசகரின் மனதை அவ்வப்போது கரிக்கச் செய்யும் கோபம், எந்த காரணங்கொண்டும் வாசகரின் கவனத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காக வாதங்களின் அரசியல் சுவையை மட்டுப்படுத்தும் வாஞ்சை என்றரீதியில் இந்த நூல் தனது செய்திகளைச் சொல்லி செல்கிறது. ஆண் வாசகரை நோக்கியே இது எழுதப்பட்டுள்ளது என்றும் தோன்றுகிறது. நமக்கென்ன, எது எப்படியோ போகட்டும், உள்ள நிலைமைகளை பற்றி யோசிப்பது ஆபத்து, விதிக்கப்பட்ட வரம்புகள் தனது நன்மைக்குதான் என்ற பொய்யை உண்மையாக்க பிரயத்தனப்படும் பெண்களை நோக்கியும் இந்நூல் பேசுவதாகக் கொள்ளலாம்.
தனது அனுபவங்கள், பிறரது அனுபவங்கள், தான் பார்த்து, கேட்ட, உணர்ந்த விஷயங்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு பெண் விடுதலை, சமத்துவம் தொடர்பான வாதங்களை அவர் விளக்குகிறார், விவாதிக்கிறார். பிள்ளை பேற்றுடனும், அழகு என்பதுடனும் மட்டுமே பெண் ஏன் தொடர்புபடுத்தப்படுகிறாள்? மென்மை என்பதற்கும் பெண்மை என்பதற்கும் அப்படி என்னதான் உறவு இருக்கிறது? தாய்மையை பெண;ணுக்குரிய அடிப்படை அறமாக அடையாளப் படுத்தும் வழக்கத்தையும், தாய் என்பவளை உணர்ச்சி நிலையில் மட்டுமே வைத்து கணும் போக்கையும் கட்டிக்காக்கும் கற்பனைகளில் என்ன உண்மை இருக்கிறது? உழைத்துக் களைத்து “அக்காடா” என்று கிடக்கும் பெண்ணுடலையும், அன்றாட வாழ்வின் ஆயிரக்கணக்கான சிக்கல்களை சமாளித்து, பல்வேறு அநீதிகளுக்கிடையே மனுஷியாக அவள் தொடர்வதை சத்தியப்படுத்தும் உளவியல் திண்மையையும் நமது இலக்கியங்கள் ஏன் போற்றுவதில்லை? பெண்களின் உடல்கள் குறித்து பத்தி எழுதித் தள்ளும் இலக்கிய கொள்வது? பெண்ணுக்கு எவற்றை முன்னிட்டு «இன்ன உடையைதான் உரிமையுடன் விதி செய் கோலங்களை எப்படி பெண் படும்பாட்டை படுத்தியுள்ள தொலைக்காட்சி பெண்மை என்பதன் பின்பெண்ணும் வேறுபட்டு காரணம் என்று கொமனப்பாங்கு உண்மைய ல் போர்வையா அல்லது பாற்பட்டதா? முடிவா பெண்ணுடலின் கூறாக சுமத்தப்பட்ட கற்பிதமா நமது மதிப்பீடுகளை உளளோமா?
இப்படி பல கேள்விகள் அவற்றுக்கான விடை அவ்விடைகளை கேள்விகளுக்களாகக் கொளளாது புளளிகளாக கொளளலாம். பிள்ளை பெற்று கொள்ளும் பெண்ணின் கதையை பிளளைகளை பெற்றுக் என்பதில்லை என்பவிளக்குகிறார். அவர் பெண் ஒரு குழந்தையை அவள் ஒரு முறை பார் இல்லத்தில் இருந்த பிள்ளை உணர்வை தோற்றுவித்கிறாள். அவளது வாநிராயுதபாணியாகிவிட்டதை பதிவு செய்கிறார். தத்துவ விளக்கங்களை தோழர் மூலம் உணர்த்துகிறார் கொள்ள விரும்பும் அவளது நியாயத்தை உணர்வாவாதம் முற்று பெறுகிற ஒரு பிள்ளையை எடுக்காவிட்டாலும், பிள்ளை வேண்டாமா என்பதை பெண்ணுக்கு உண்டு அமைப்புகளும் (அவர்அவரது இயக்கத்தினர் காட்டியுள்ளனர். என்ற அழுத்தமாக சொல்லாகாருண்யத்தை எடுத்துதமிழ்ச்செல்வன் தனசேர்த்துள்ளது வாதத்துக்கு விடுகிறது.
இன்றைய சூழலில் காலமாகி வந்த அரசியலேனும்…பெண்மை என்றொரு கற்பிதம் ஏகாதிபத்தியாக ஒரே பாணியிலாகிய மரபை எப்படி புரிந்துணுர்வுக்கான ஆடைகள் என்பன தோற்றம் பெற்றன? பெண்தனியதான் அணிய வேண்டும் என்று செய்யும் ஆண்களின் மனக்கண்ணாடி புரிந்து கொள்ளலாம்? கண்ட பொருளாக்கி சந்தைப் காட்சி தொடர்கள் காட்டும் பின்னணி என்ன? ஆணும்பெண்ணும் இரண்டு இருக்க இயற்கை விதிகளே கொள்ளும் சவுகரியமான அளவிலேயே அறிவியல்பாற்பட்ட (ஆண்களின்) தன்னலம் பொதுவாக , பெண்மை என்பது ஆக இல்லாமல் அவ்வுடல் மீது கற்பிதமாக இருக்குமேயானால், விமர்சிக்க நாம் தயாராக கேள்விகளை இந்நூல் எழுப்பி தடைகளையும் தருகிறது.கேள்விகளுக்கான முழுபதில் பதில்களுக்கான துவக்கப் பதிலாக கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, கொள்ள மறுக்கும் இளம் பெண்களை முன்வைத்து, பெண்கள், கொண்டே ஆக வேண்டும்
என்பதை தமிழ்ச்செல்வன் சொல்லும் கதையில் வரும் பிள்ளைய தத்து எடுக்க விழைகிறாள். பார்வையிட நேர்ந்த அனாதைபிள்ளைகள் அவளுக்குள் இந்த வாதத்ததாகக் கூறி ஆவேசப்படுவாதங்களுக்கு முன் தான் பழகிவிட்டதாக தமிழ்ச்செல்வன் தத்து எடுத்துக் கொள்வதன் ஆர் சந்திரா எழுதிய கடிதத்தின் படிக்கிறார். பிள்ளைப் பெற்று அவளது கணவன் அவளுடையவாராக என்ற ரீதியில் இந்தபறுகிறது.
பிள்ளைய தத்து எடுத்தாலும் பிள்iளை பெற்று கொள்வதா என்பதை முடிவு செய்யும் உரிமைஉண்டு என்பதை பெண்ணியர்களுக்கு முன் பெரியாரும்(பெண்இனத்தினரும்) ஓயாது சுட்டிக்காட்டிய போதிலும், இக்காரணத்தை போலல்லாமல், ஒரு பெண்ணின்எடுத்துக் காட்டாகக் கொண்டு,தனது வாதத்துக்கு வளம் இல்லாதை வளர விடாமல் நிறுத்தி இச்சூழலில், பிள்ளை பெறுதல் குறித்த வாதம் பல நிலைகளில் கொண்டு செல்லப்பட வேண்டிய தாக உள்ளது. ஒரு புறம், மகப்பேறு வாய்க்காதவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதன் முலம் தாய்மையை ஏற்படுத்தலாம் என்று அறிவிக்கும் மருத்துவமனைகள். மறு புறமோ, பிள்ளைப் பெற்று கொள்ள முடியாதவர்களுக்கென வாடகை கருப்பைகளும், வாடகை தாய்மார்களும். எதிர்பால் உறவில் இல்லாமல் ஒருபால் உறவில் இருப்போர் பிள்ளைகளை தத்து எடுக்கவோ தாமாக பெற்று கொள்ளவோ மேற்கொள்ளும் முயற்சிகளையும் நம்மைச் சுற்றிக் காண முடிகிறது. இப்பிரச்சனைகள் கிராமம், நகரம், படித்த வர்க்கம், படிக்காத சாதி என்று இல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அலைக் கழிக்கும் வரலாற்று சூழலில், பிஷீமீளைப் பேறு குறித்த வாதங்கள் இன்னும் செறிவானவையாக மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
இது போலதான், இந்நூல் குறிப்பிடும் மற்றொரு பிரச்சனையும் – கூடுதலான வாதங்களை தேடி நிற்பதாக உள்ளது. இது குடும்பம் என்ற நிறுவனம் குறித்ததானது. மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாட தனது மனைவி சென்று வந்ததை கண்டு அச்சமுறும் கணவனும், மருமகளின் எல்லா செயல்பாடுகளையும் தனது ஆளுகையின்கீழ் கொண்டு வரக்கூடிய ஆற்றலும் அதிகாரமும் மிக்க மாமியாருமே குடும்பம் என்ற அமைப்பின் காவலாளர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்த சித்தரிப்பில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும், இன்று குடும்பம் என்ற நிறுவனத்துக்குரிய பண்புகளை விளக்க இவை போதுமானவையல்ல. இந்நபர்கள் குறிக்கும் உறவுநிலைகளை கடந்த உறவுநிலைகளை பற்றியும், குடும்பம் என்ற அமைப்பு இவற்றை எதிர்கொள்ள இயலாது திணறுவதை குறித்தும் நாம் பேச வேண்டும்.
காட்டாக, நாளேடுகள் தொடர்ந்து “கள்ளக்காதல்” பற்றியும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சாதி விட்டு சாதி சென்று திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நேரும் கதியைப் பற்றிய செய்திகளையும் நாம் தொடர்ந்து வாசித்து வருகிறோம். பெற்றோர்கள் பார்க்கும் துணைகளை ஏற்க விரும்பாமல் தற்கொலைசெய்து கொள்ளும் இளைஞர்களை பற்றியும் படிக்கிறோம். பாலுறவு, மணவுறவு, காதல் என்பன புதிய வடிவங்களை பெறத் துவங்கியுள்ள இன்றைய சூழலில் நமது குடும்ப அமைப்புகள் இவற்றை எவ்வாறு அணுகுகின்றன? திருமணத்துக்கு முன் பாலுறவு கொள்ளும் பழக்கத்தையும், மணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ விரும்புவோரது தேர்வுகளையும், எதிர் பாலினத்தவருடனான உறவுதான் முறையான உறவு என்பதை ஏற்காமல், ஒரு பால் உறவும் முறையானதே என்று வாதிடுவோரின் உரிமைகளையும், பாலினம் என்பதே ஆண்-பெண் என்ற இரு துருவ நிலையை சார்ந்ததுதான் என்ற நமது பொதுக் கருத்தை புரட்டிப் போட்டுள்ள மாற்று பாலினத்தவரின் அரசியலையும் குடும்பம் குறித்த நமது வழமையான சொல்லாடல்களுடன் எதிர்கொள்ள முடியுமா என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஆண்களும் பெண்களும் தோழமையுடன் நின்று பெண் விடுதலையை அணுக வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டி தனது வாதத்தை தமிழ்ச்செல்வன் முடிக்கிறார். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் எனது தோழி சுபத்திரா எழுதிய “எந்தன் தோழா” கவிதைத் தொகுப்பு எனக்கு ஞாபகம் வந்தது. அவளும் ஆண்-பெண் தோழமையை முன்நிறுத்தி பெண் விடுதலை பேசினாள். அதே சமயம், இத் தோழமை நிகழ, தொடர சில நிபந்தனைகளையும் விதித்தாள். தனது பயணத்தை ரசிக்காமல் அதை தடுத்து நிறுத்த, கட்டுபடுத்த தனது தோழன் முனைந்தால், அவன் தயவு செய்து தனது கைகளை விலக்கிக் கொள்ள வேண்டும், காரணம், தான் பயணித்தாக வேண்டும், மேலும் தனது பயணம் அவனது இருப்பைப் பொருத்ததல்ல, உடன் வருவதும் வராததும் அவன் பொறுப்பு, தேர்வு என்பது அந்நிபந்தனைகளில் முக்கியமானது. பெண்மை என்ற கற்பிதத்தைக கடக்க இத்தகைய நிபந்தனைகளை ஆண்களும், ஏன், விடுதலையை நோக்கி பயணிக்கத் துணியாத பெண்களும் கருத்தில் நிறுத்துவது பயனுள்ளதாக இருக்கும்