சுவிற்சர்லாந்தில் அரசியல் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை திருப்பி அனுப்பும் சுவிஸ் அரசின் முடிவினை மீளப்பெற கோரிஇன்று சனிக்கிழமை பிற்பகல் பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, சுவிஸ் அரசின் இத்தீர்மானத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்
–>சுவிற்சர்லாந்தின் பல்வேறு பொது அமைப்புக்களும் அரசியற் கட்சிகளும், தமிழர் அமைப்புக்களும், இவ் ஒன்று கூடலில் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இவ் ஒன்றுகூடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
– இலங்கை அரசு அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டும்.
– இதன் மூலமே போர்க்குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவர முடியும்.
– இலங்கை அரசு அவசரகால சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும்.
– அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திற்கு அனைத்து அரசியல் கைதிகளின் முகாம்களிற்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரைஇ சுவிஸ் கூட்டாட்சி தலைவர்கள், எவ்வித திருத்தங்களும் தமது சட்டமூலத்தில் மேற்கொள்ள கூடாது எனவும், இப்புதிய சட்டமூலத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமது கோரிக்கைளாக கலந்து கொண்டவர்கள் முன் வைத்தனர்.