எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் சந்தேகத்தின் வெறுமனே ஆயிரக்கணக்கான தமிழர்கள் பூசா முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் எழுந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து பிபிசிக்கு செவ்வி வழங்கிய அமைச்சர் ஒருவர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் யாரேனும் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தால், விபரங்களை தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறேன் கூறியிருந்தார்ஒரு நாட்டு அரசு தாம் தடுத்து வைத்திருப்பவர்களின் விபரங்களை இன்னொரு தரப்பிடமிருந்து கோருவது வேடிக்கையானது என கண்டனம் எழுந்ள்ள நிலையில், அவ் அமைச்சர் கூறியபடி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள புலி சந்தேக நபர்களின் பெயர் விபரங்கள் பல தன்னிடம் இருப்பதாகவும், அவர்களை விடுவிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாயின், அவற்றை தர தயாராக இருப்பதாகவும் இடது சாரிகள் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் வழங்கிய தகவல்களின் படி சுமார் 4000 காணாமல் போனவர்களின் விபரங்களும், ஆயிரக்கணக்கான தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விபரங்களும் தம்மிடம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.